Tuesday, 7 February 2012

மாமி மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

(07.01.12 அன்று முகநூலில் பதிந்தது)

மாமி மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தை திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பெறும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்...என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகம் உள்ள மயிலாப்பூர் மாஃபியாயாவும். இந்த விமர்சனம் எம்ஜியார் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களை கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

“நான் அரசியலுக்குள்ளே நுழைஞ்ச நேரம் அது. எம்ஜியார் என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டுவர முடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அத்தோடு, கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, நம்ம கட்சியும் திராவிட இயக்கம்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காதுன்னு சொன்னார். அப்ப எம்ஜியார். ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்டுபட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்க இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிடிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சி கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்கன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்லறாங்க” என்றபடி சிரித்திருகிறார்.

மேற்கண்ட செய்தி ஜன 7 – 10 , 2012 நக்கீரன் இதழில், ஆட்டையில், “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா என்று வந்துள்ளது.

அதன்பின் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள், நக்கீரன் அலுவலகத்தை தாக்கியிருகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது பத்திரிக்கைகள் தாக்கபடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும், இப்போது எதற்காக தாக்கப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அந்த செய்தி, உண்மையா? கற்பனையா? என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை ஒரு கற்பனை என்றே ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டு, நாம் இந்த செய்தியில் உள்ள கருத்தை பார்ப்போம்.

மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாமிகள் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறா?

மாட்டுக்கறி சாப்பிடும் மிலேச்சர்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும் என்று சொல்லி, ஆஷ் துறையை கொன்ற இந்து வெறியன் வாஞ்சி அய்யரின் செயலுக்கும், நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஆர்.எஸ்.எஸ் மோடியுடனும் சோவுடனும் இருக்கும் நெருக்கம், மாட்டுக்கறி தின்பதை தவறென காட்டச் சொல்லுகிறதா?

நாம் இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் குறித்து கொஞ்சம் பார்ப்போம், அதுவும் பார்ப்பனர்கள் சாப்பிடுவது குறித்து பார்ப்போம். 

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தெளிவாக சொல்லுகிறார், படியுங்கள்.
“ திருமணத்திற்கு முதல்நாள் மதுவர்க்கம் எண்ணும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள். “விவாஹே கௌஹீ...க்ருஹே கௌஹீ...” திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.  திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்...வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம்தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்திற்கு முதல்நாள் நிகழ்சியில் மதுவர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும்...மறுநாள் திருமணச் சடங்கிலும் ரிஷிகளுக்கும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

அடுத்து சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதை படியுங்கள்.

“என் ஆசான் (ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர்) காய்கறிகளையே உண்பவர். ஆயினும்,  அம்பிகைக்கு நிவேதித்த மாமிசத்தையும் உண்டுவந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது.

புத்தருடைய கொள்கைக்கு எதிராக, மாமிச உணவை உண்ணாதவனுக்கு மனுவானவர் மறுமையில் தண்டனையும் விதித்திருக்கிறார்.

“நியுக்தஸ்து யாதான்யாயம்
யோமாம்ஸம் நாதிமானவ:
ஸப்ரேத்ய பசுதாம்யாதி ஸய்பவா:
னேக் விம்சதீம்”

இதன் பொருள்: சிராத்த காலங்களில் வரிக்கப்பட்ட மனிதன் மாமிசத்தை உன்னாவிடின், இருபத்தொரு தடவை மிருகமாக பிறப்பான்.

மேலும் தேவதைகளுக்கு கள்ளும் ஊனுமே படைக்கவேண்டும்.
“ஜாமிவா ஏதத் யஞஸ்ய க்ரியதே
யஹன்வஞ் சௌபுரோடாசௌ”

அதாவது புரோடசம் மாத்திரம் உட்கொள்வதால், யஜ்ஞ புருஷனுக்கு வயிற்றுவலி உண்டாகிறது. அதை நிவர்த்திக்கும் பொருட்டு மத்தியில் வபா (உயிரினங்களில் உள்ள கொழுப்பு) ஹோமம் செய்யவேண்டும்.

மேலும்,

“மஹோஷம் லா மகாஜம்
வாஸ்ரோத்ரியாயோப கல்பயேத்
ஸத்க்ரியா சேவனம்
ஸ்வாது போஜனம் சூன்ருதம் வச்”

பொருள்: ஒரு பெரிய எருதையேனும் அது கிடைக்காதவிடத்தில் கொழுத்த வெள்ளாட்டையேனும் கொன்றும் சுரோத்ரிய (வேதமறிந்த பார்ப்பனன்)னுக்கு விருந்து செய்யவேண்டும். இன்சொற்களால் அவனை மகிழ்விக்கவேண்டும்.

இப்படி மாட்டுக்கறி தின்னும் வேதகால வழக்கத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி இருக்க, மாமிகள் மாட்டுக்கறியை சாப்பிட்டால் என்ன? சாப்பிடாவிட்டால் என்ன? சாமிகளே சாப்பிடலாம் எனும்போது இரண்டும் தவறல்ல.

அவர் சாப்பிடுவதாக வந்த செய்தி, அவரை மனதளவில் பாதிக்கிற செய்தியோ இல்லையோ, ஆனால் அவரை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் வகையறாவிற்கு நெருடலான செய்திதான்.

தாக்குதல் நடத்திய அ.தி.மு.க தோழர்கள் மாட்டுக்கறி சாப்பிடாதவர்களா?

அ.தி.மு.கவில், மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இல்லையா?

அவர் மாட்டுக்கறியை சாப்பிடுவதாக வந்த செய்தியை பொறுக்கமுடியாமல் நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என்று சொல்ல வருகிறார்களா?
மாட்டு கறியைத்தானே சாப்பிட்டதாக செய்தி வெளியிட்டாங்க...
மாட்டு சாணியை சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட மாதிரி கோபப்படுவது....நியாயமா?

இந்த தாக்குதல் நக்கீரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மனிதஉரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாட்டுக்கறியை சாப்பிடும் வழக்கம் உள்ள, தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இசுலாமிய, கிருஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களின் உணவு கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்துத்துவாவின் தாக்குதல்.


திராவிடர்களே! இந்துத்துவா மெல்ல திராவிட இயக்கங்களின் உள்ளே, அதன் வீரியமிக்க விஷத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டது. உயிர் போகும் முன்னே விஷமுறிவு மருந்தை செலுத்தவேண்டும். கவனமாக செயல்படவேண்டிய நேரமிது. எதற்காக ஆதரிக்கிறோம்? எதற்காக போராடுகிறோம்? என்பதை தெரிந்து புரிந்து செயல்படுங்கள்.


- திராவிடப்புரட்சி

தை முதல்நாள்

(03.01.12 அன்று முகநூலில் பதிந்தது)

தை முதல்நாள்
திராவிடரின் திருநாள்

சித்திரை முதல்நாளில்
சிறுநரி ஆரியருக்கும்
சிறுமதி சிங்களருக்கும்
புத்தாண்டு பிறக்கிறதாம்.

ஆண்டுகள் அறுபதாம்
பின்னணியில்
ஆபாச அருவருப்புகளாம்.

அறுபது ஆண்டுகள் சுழற்சி
ஆரியரின் சூழ்ச்சி
அறிவின் வீழ்ச்சி.

ஆண்டுகள் வளர்ச்சி
அறிவியலின் வளர்ச்சி
அறிவின் முதிர்ச்சி.

ஆபாசக் கதைகளை
மறுப்போம்.
ஆண்டுகள் அறுபதை
மறப்போம்.

திராவிடத் தமிழராய்
பெருமைகொள்வோம்
தை முதல்நாளை
புத்தாண்டு பிறப்பாய்
கொண்டாடுவோம்.

தை முதல்நாள்
திராவிடரின் திருநாள்.


- திராவிடப்புரட்சி

ஆத்திகராக மாறுவது மிகவும் எளிது.

(30.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

ஆத்திகராக மாறுவது மிகவும் எளிது.

அதற்கு...

கடவுள் இருப்பதாகவும் கடவுளின் சக்தி குறித்தும் அடுத்தவர் சொல்லுவதை அப்படியே நம்பினால் போதும்.

பகுத்தறிவுவாளராக மாறுவது சிரமம்.

அதற்கு...

அதற்கு கடவுளின் இருப்பையும் அதன் சக்திகளையும் சோதித்துப்பார்க்கவெண்டும்.

ஆத்திகராக மாற்றுவது எளிது.

அதற்கு...

மனிதனின் அச்சத்தையும், இயலாமையையும் பயன்படுத்தினால் போதும்.

பகுத்தறிவுவாதியாக மாற்றுவது சிரமம்.

அதற்கு...

மனிதனின் சிந்தனையையும், தன்னம்பிக்கையையும், துணிவையும் தூண்டவேண்டும்.

இதனால்தான் ஆத்திகர்கள் அதிகமாகவும், பகுத்தறிவாளர்கள் குறைவாகவும் எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆனால், காலம் மாறிவருகிறது, அறிவியல் மனப்பான்மை பெருகிவருகிறது, பகுத்தறிவாளர்களும் பெருகிவருகின்றனர்.

உலகம் ஒருநாள் உண்மையை உணர்ந்து செயல்படும் நிலை வரும். அன்று மனிதர்கள் இயற்கையின் சக்தியையும், தன்னுடைய சக்தியையும் தெளிவாக புரிந்து செயல்படுவார்கள்.


- திராவிடப்புரட்சி  

தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும், திரைப்படத்துறையை சேர்ந்த இயக்குனருக்கு, திராவிடத்தை குறை சொல்லும் தகுதி இருக்கிறதா

(26.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

நேற்று மெரினா கடற்கரை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒரு வர் சொன்னார், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்கள், தமிழகம் திராவிடத்தாலும் தேசியத்தாலும்தான் கெட்டது என்று சொன்னாராம்.

இதை கேட்ட எனக்கு வருத்தம் வேதனையை விட கோபம்தான் வந்தது.

யார் யாரை குறை சொல்லுவது. குறைசொல்லுவதற்கு ஒரு தகுதி வேண்டாம்?

கேட்பதற்கு நாலு பேர் இருந்தால், யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் பேசலாமா?

கட்சிக்கொடி இல்லாமல் வரச்சொல்லி அழைத்ததால்தான் அத்தனை பேர் அரசியல் தாண்டி தமிழராய் வந்திருந்தனர். அங்கு அரசியல் பேசுவது முறையா? இனி இப்படி அழைத்தால் யாரவது வருவார்களா? எதிர்த்து பிரச்சாரம் செய்யமாட்டார்களா?

தமிழகம் உணர்விழந்து போனதற்கு முழு முதற்காரணம், திரைப்படங்களே.

தமிழ் பெயர்களை சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள கதாபாத்திரத்திற்கு மட்டும் சூட்டி, படித்த உயர்ந்த நிலையில் உள்ள கதாபாத்திரங்களுக்கு வட மொழியில் பெயர் வைத்து, தமிழன் தமிழிலில் பெயர் வைப்பதற்கு வெட்கப்படும் அளவிற்கு கொண்டுவந்து, அவனது தமிழுணர்வை மழுங்கடித்தது திரைப்படங்களே, அதன் இயக்குனர்களே.

தமிழனின் உடையை அவன் ஒதுக்கி, வடநாட்டு உடைகளான, பைஜாமா குர்தா, சல்வார் கமீஸ் போன்றவற்றை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவந்தது திரைப்படங்களே, இயக்குனர்களே.

திரைப்படங்களில் தமிழன் என்று உணர்ச்சி பொங்கும் வசனங்களை கவனமாக தவிர்த்து, அவனுக்கு மாநில உணர்வு மேலோங்கிவிடாமல், இந்தியா,இந்தியன், தேசப்பற்று என்று பிரச்சாரம் செய்தது திரைப்படங்களே, இயக்குனர்களே.

இப்படி தமிழனின், மொழி, பண்பாடு, இனவுணர்வு என்ற அனைத்தையும் அழித்த, தமிழனை சுரணையற்ற பிறவியாக மாற்றியது திரைப்படங்களே.

மேற்சொன்ன தமிழருக்கு எதிரான கெடுதிகளை எந்த திராவிட இயக்கமாவது செய்ததா??? இல்லையே....

இப்படிப்பட்ட திரைப்படத்துறையில் இருந்து வந்து, தமிழகம் கெட்டதற்கு காரணம் திராவிடம் என்று சொல்லுவதற்கு வெட்கமாக இல்லை???

- திராவிடப்புரட்சி

இந்த கதையை முழுமையாக புரிந்துகொண்டால், மதம் மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுள் இரண்டையும் புரிந்துகொள்ளலாம்

இது ஆங்கிலத்தில் இருந்து என்னால் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நமது நாட்டை கருத்தில்கொண்டு, கதையில் உள்ள மூவரின் பெயரும் மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக காட்டப்பட்டுள்ளது. இந்த கதையை முழுமையாக புரிந்துகொண்டால், மதம் மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுள் இரண்டையும் புரிந்துகொள்ளலாம்.


- திராவிடப்புரட்சி


இன்று காலை என் கதவு தட்டப்பட்டது. திறந்தபோது, நன்றாக உடையணிந்த நாகரீகமான இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த மனிதர் பேச்சை தொடங்கினார்.

ஜான்: வணக்கம்! என் பெயர் ஜான் இது லட்சுமி.

லட்சுமி: வணக்கம்! எங்களோடு சேர்ந்து அக்பரின் குண்டியை முத்தமிட உங்களை அழைக்க
வந்துள்ளோம்.

நான்: மன்னிக்கவும், நீங்க என்ன பேசுறீங்க? யார் அந்த அக்பர்? நான் எதற்காக அவரது குண்டியை முத்தமிடவேண்டும்?

ஜான்: நீங்கள் அவரது குண்டியை முத்தமிட்டால், உங்களுக்கு பது கோடி ரூபாய் தருவார். நீங்கள் முத்தமிடவில்லை என்றால், உங்களை வெறுத்து உதைத்து துரத்திவிடுவார்.

நான்: என்னது? இது என்ன மிரட்டல் கூட்டத்தின் வேலையா?

ஜான்: அக்பர் மற்றவர் நலனில் அக்கறை காட்டும் கோடீஸ்வரர். இந்த நகரத்தை உருவாக்கியவர் அக்பர். இந்த நகரமே அவருடையது. அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்வார். அவர் உனக்கு பத்து கோடியை தர விரும்பிகிறார், ஆனால் அவரது குண்டியை நீ முத்தமிடும்வரை அவரால் அது முடியாது.

நான்: இது ஒன்றும் புரியும்படியாக இல்லையே...எதற்கு?

லட்சுமி: நீங்கள் ஏன் அக்பரின் அன்பளிப்பை கேள்வி கேட்கிறீர்கள்? உங்களுக்கு பத்து கோடி ரூபாய் வேண்டாமா? பத்து கோடி ரூபாய் என்பது அவரது குண்டியை முத்தமிடுவதற்கான மதிப்பு இல்லையா?

நான்: நல்லது, இது முறையாகவும் இருக்கலாம், ஆனால்......

ஜான்: பிறகென்ன, எங்களோடு குண்டியை முத்தமிட வாருங்கள்.

நான்: நீங்கள் அக்பரின் குண்டியை அடிக்கடி முத்தமிடுவீர்களா?

லட்சுமி: ஆமாம், எப்போதும் முத்தமிடுவோம்.

நான்: அவர் உங்களுக்கு பது கோடி ரூபாயை தந்துள்ளாரா?

ஜான்: இல்லை. இந்த நகரத்தை விட்டு நீங்கள் போகும்வரை உங்களுக்கு அது கிடைக்காது.

நான்: அப்படியானால், நீங்கள் ஏன் இந்த நகரத்தை விட்டு போகவில்லை?

ஜான்: அக்பர் சொல்லவிட்டாலோ, நீங்கள் பணம் பெறாவிட்டாலோ, அவர் உங்களை வெளியேறாவிட்டாலோ, நீங்கள் இந்த நகரத்தை விட்டுவெளியேற முடியாது.

நான்: அக்பரின் குண்டியை முத்தமிட்ட யாராவது, இந்த நகரத்தை விட்டு வெளியேறி பத்துகோடி ரூபாயை பெற்றது உங்களுக்கு தெரியுமா?

ஜான்: என்னுடைய அம்மா பல வருடங்கள் அக்பரின் குண்டியை முத்தமிட்டார்கள். கடந்த வருடம் அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் நிச்சயமாக அந்த பணத்தை பெற்றிருப்பார்கள்.

நான்: அதற்கு பிறகு அவரோடு நீங்கள் பேசினீர்களா?

ஜான்: நிச்சயமாக இல்லை, அக்பர் அதற்கு அனுமதிக்கவில்லை.

நான்: அப்படியானால், இதுவரை பணத்தை பெற்றவொரு நீங்கள் பேசாதபோது, அக்பர் அந்த பணத்தை உங்களுக்கு தருவார் என்று எப்படி நம்புகிறீர்கள்?

லட்சுமி: நீங்கள் நீங்கள் இந்த நகரத்தை விட்டு போகும் முன்பே அவர் கொஞ்சமாவது தருவார். நீங்கள் உயர்வீர்கள், கொஞ்சம் அதிர்ஷ்டத்திலும் பெறுவீர்கள், சாலையில் கிடக்கும்  ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் நீங்கள் கிடைக்க பெறாலாம்.

நான்: அதற்கும் அக்பருக்கும் என்ன தொடர்பு?

ஜான்: அக்பருக்கு நிச்சயமாக அதில் தொடர்புண்டு.

நான்: மன்னிக்கவும், இது எதோ விளையாட்டில் தொடர்புடையது போல இருக்கிறது.

ஜான்: ஆனால் இது பது கோடி ரூபாய் தொடர்புடையது, நீங்கள் இதை விட மறுப்பீர்களா? ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள், நீங்கள் அவரது குண்டியை முத்தமிடாவிட்டால், அவர் உங்களை உதைத்து வெளியேற்றிவிடுவார்.

நான்: நான் அக்பரை நேரில் சந்திக்க முடிந்தால், அவரோடு பேச முடிந்தால், கேட்க்கவேண்டியத்தை நான் நேராக கேட்டுக்கொள்ளமுடியும்.

லட்சுமி: அக்பரை யாரும் பார்ப்பதில்லை, அவரோடு யாரும் நேராக பேசுவதுமில்லை.

நான்: பிறகு எப்படி நீங்கள் அவரது குண்டியை முத்தமிடுகிறீர்கள்?

ஜான்: சில சமயம் நாங்கள் அவரது குண்டியில் முத்தமிடுவதாக நினைத்து முத்தமிடுவோம், மற்ற நேரங்களில், சங்கரனின் குண்டியில் முத்தமிடுவோம், அவர் அதை அக்பருக்கு
கடத்திவிடுவார்.

நான்: யார் அந்த சங்கரன்?

லட்சுமி: அவர் எங்களது நண்பர். அவர்தான் எங்களுக்கு அக்பரின் குண்டியியை முத்தமிடுவதை கற்றுக்கொடுத்தார், நாங்கள் செய்வதெல்லாம் சில நேரங்களில் அவருக்கு விருந்து வைப்பது மட்டும்தான்.

நான்: அக்பர் இருப்பதாகவும், அவர் நீங்கள் குண்டியில் முத்தமிடுவதை விரும்புவதாகவும், அதற்கு பத்து கோடி ரூபாய் பெறுவீர்கள் என்று அவர் சொன்னதை எற்றுக்கொண்டீர்களா?

ஜான்: இல்லை இல்லை, எல்லாவற்றையும் விவரித்து அக்பர் எழுதிய கடிதம் சங்கரனிடம் உள்ளது. இதோ அதன் நகல என்னிடம் உள்ளது, அதை நீங்களே பாருங்கள்.

அக்பரிடம் இருந்து வந்த கடிதம்:
  1. அக்பரின் குண்டியை முத்தமிடுங்கள், அவர் உங்களுக்கு பத்து கோடி ரூபாயை நகரத்தை விட்டு போகும்போது தருவார்.
  2. கொஞ்சமாக சாராயம் பருகவும்.
  3. உங்களைப்போல இல்லாத மக்களை உதைத்து துரத்தவும்.
  4. சரியான முறையில் உணவருந்தவும்.
  5. அக்பர் இந்த கடிதத்தை எழுதும்படி பணித்தார்.
  6. நிலவு என்பது வெண்ணை கட்டியால் உருவாக்கப்பட்டது.
  7. அக்பர் சொல்லுவது அனைத்தும் சரி.
  8. கழிப்பறை சென்ற பிறகு கைகளை கழுவவும்.
  9. சாராயத்தை பயன்படுத்தாதீர்.
  10. கிடைத்ததை உண்ணுங்கள் சுவையை எதிர்பார்க்காதீர்.
  11. அக்பரின் குண்டியை முத்தமிடுவீர் அல்லது அவர் உங்களை உதைத்து வெளியேற்றிவிடுவார்.
நான்: இதை பார்த்தால், சங்கரனின் முகவரில் உள்ள காகிதத்தில் எழுதியதை போலவே இருக்கிறதே.

லட்சுமி: அகபரிடம் காகிதம் இல்லை.

நான்: எனக்கு உள்ளுணர்வு சொல்லுகிறது, நாம் தேடினால் இதுப் அக்பரின் கையெழுத்தா என்று கண்டுபிடித்துவிடலாம்.

ஜான்: நிச்சயமாக இது அக்பர் சொல்லியதன் படி எழுதப்பட்டதே.

நான்: அக்பரை யாரும் சந்தித்ததில்லை என்று நீங்கள் சொன்னீர்களே...

லட்சுமி: இப்போது கிடையாது, பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சிலரோடு பேசியிருக்ககூடும்.

நான்: நீங்கள் அவரை மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக சொன்னீர்கள். அவர் எப்படி உதவும் மனப்பான்மை கொண்டவர்? அவருக்கு மாருபட்டவரை உதைத்து துரத்தும் அவர் எப்படி மற்றவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்?

லட்சுமி: அதைத்தான் அக்பர் விரும்புகிறார். அக்பர் சொல்லுவது எப்போது சரி.

நான்: உங்களுக்கு எப்படி தெரியும்?

லட்சுமி: ஏழாம் எண்ணில் சொல்லியபடி அக்பர் சொல்லுவது அனைத்தும் சரி, அது போதும் எனக்கு.

நான்: உங்களுடைய நண்பர் சங்கரன் இதை அனைத்தையும் உருவாகியிருக்கலாமே...

ஜான்: வாய்ப்பே இல்லை. பட்டியலின் ஐந்தாம் எண்ணின்படி அக்பரே இதை எழுதும்படி பணித்தார். இதைத்தவிர, இரண்டாம் எண்ணின்படி, சாராயத்தை கொஞ்சமாக பருகவேண்டும், நாலாம் எண்ணின்படி, சரியான முறையில் உணவருந்த வேண்டும், எண் எட்டின்படி, கழிப்பறை சென்றபின் கை கழுவ வேண்டும். எல்லோருக்கும் தெரியும் இவை அணித்தும் சரியென்று, எனவே, மீதம் உள்ள அனைத்தும் உண்மையாகவே இருக்க முடியும்.

நான்: ஆனால் எண் ஒன்பது சாராயத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அது எண் இரண்டிற்கு மாறாகவும், எண் ஆறின்படி நிலவு வென்னைக்கட்டியால் உருவாக்கப்பட்டது என்பது நேரடியாக தவறாக தெரியவில்லையா?

ஜான்: எண் ஒன்பதிற்க்கும் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமல்ல, அது எண் ஒன்பதே தெளிவுபடுத்துகிறது. எண் ஆறை பொருத்தவரை, நீங்கள் நிலவுக்கு சென்றதே இல்லை, எனவே அதி பற்றி நிச்சயமாக நீங்கள் எதுவும் சொல்லமுடியாது.

நான்: அறிவியல் அறிஞர்கள், நிலவு என்பது பாறையால் உருவானது என்று நிருபிதிருத்கிறார்களே...

லட்சுமி: ஆனால் அந்த அறிவியல் அறிஞர்களுக்கு அந்த பாறை பூமியில் இருந்து வந்ததா? அல்லது விண்வெளியில் இருந்து வந்ததா என்பது தெரியாது, எனவே, அது வென்னைக்கட்டியாக கூட இருக்கமுடியும்.

நான்: நான் அதில் நிபுணன் இல்லையென்றாலும், நிலவு பூமியால் ஈர்க்கப்பட்டது என்பதையும் தள்ளுபடி செய்யமுடியாது. அதுதவிர, பாறை எங்கிருந்து வந்தது தெரியாது என்பதற்காக அதை வென்னைக்கட்டி என்பது சரியாகாது.

ஜான்: ஹஹஹ...இப்போது விஞ்ஞானிகள் தவறு செய்வார்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள்...ஆனால், நமக்கு அக்பர் சொல்லுவது எப்போதும் சரி என்பது தெரியும்.

நான்: நமக்குத் தெரியுமா?

லட்சுமி: நிச்சயமாக, எண் ஏழு அதை அதை தெளிவாக சொல்லுகிறது.

நான்: பட்டியல் சொல்லுவதால், அக்பர் சொல்லுவது எப்போதும் சரி என்று சொல்லுகிறீர்கள், ஏனென்றால், அது அக்பரால் எழுத பணிக்கப்பட்டது. அக்பர் சொல்லுவது சரி என்று அக்பர் சொல்லுவதால், இந்த சுற்றறிக்கை சரியானது என்று சொல்லுகிறீர்கள்.

ஜான்: இப்போதுதான் நீங்கள் புரிந்துகொண்டீர்கள். சுற்றிவளைத்து அக்பரின் சிந்தனையை சிலர் புரிந்துகொள்ளுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான்: அதை பற்றி கவலைப்படாதீர்கள்....அந்த இறைச்சி துண்டு குறித்து என்ன...

லட்சுமி கூச்சப்படுகிறாள்.

ஜான்: ரொட்டியில் உள்ள இறைச்சி சுவைக்காக அல்ல. இதுதான் அக்பரின் வழி. இதில் தவறிருக்கிறதா?

நான்: நமக்கு ரொட்டியே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

ஜான்: ரொட்டி இல்லை என்றால் இறைச்சி இல்லை. ரொட்டி இல்லாத இறைச்சி தவறு.

நான்: சுவையூட்டகூடிய எதுவும் இல்லையா?

லட்சுமி நம்பிக்கை அறிகுறியோடு பார்க்கிறாள்.

ஜான்: இதுபோன்ற பேச்சே தேவையற்றது...சுவை எந்த வகையிலும் தவறு....கத்துகிறார்.

நான்: அருமையாக துண்டாக்கப்பட்ட இறைச்சி துண்டு சுவையாக உள்ள இறைச்சி குறித்த பேச்சே இல்லையா...

லட்சுமி: இதை நான் காதால் கேட்கமாட்டேன். தன்னுடைய காதுகளை விரல்களை கொண்டு பொத்திக்கொள்கிறாள்.

ஜான்: இது அருவருப்பாகயிருக்கிறது. விலகிச் செல்லும் சாத்தான்கள்தான் அதை உண்ணுவார்கள்.

நான்: அது நல்லது, நான் அதை எப்போதும் உண்பேன்.

லட்சுமி: மயங்கி விழுகிறாள்.

ஜான்: லட்சுமியை தாங்கி பிடிக்கிறார். நீங்கள் இப்படிபட்ட ஒருவர் என்றால், இவ்வளவு நேரத்தை உங்களோடு வீனாக்கியிருக்கமாட்டேன். உங்களை அக்பர் உதைத்து வெளியேற்றும்போது, நான் அங்கிருப்பேன், என்னுடைய பணத்தை மகிழ்வோடு எண்ணிக்கொண்டிருபேன். இறைச்சி உண்ணும உங்களுக்காகவும் சேர்த்து நான் அக்பரின் குண்டியை முத்தமிடுவேன்.

இத்தோடு லட்சுமியை ஜான் தூக்கிக்கொண்டு வெளியேறி சென்றுவிட்டார். 

டார்வின் தியரி உண்மையே

(23.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

கடவுள் பொய் என்று சொல்லுபவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கையாளர்கள் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால், டார்வின் தியரி பொய் என சொல்லமுடியாது....அதன் தொடர்ச்சியாக....ஜீன் ஆராய்ச்சி தொடர்ந்து....மரபணு விந்தை வெளிவந்துவிட்டது. க்ளோனிங் நடைபெற்றுவிட்டது. செயற்கை உயிர் செல் உருவாக்கப்பட்டுவிட்டது. தற்போதைய மருத்துவ அறிவியல், மரபணு மாற்றத்தின் மூலமாக நோயை தவிர்க்கும் ஆராய்ச்சியில் உள்ளனர்.

கடவுளை வாழவைப்பதற்காக டார்வின் தியரி பொய் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், பலரை முட்டாளாக்கிகொண்டிருந்தாலும்.....டார்வின் தியரி மனிதனை வாழவைக்கும் தியரி என்பது தொடர்ந்து நிருபிக்கப்பட்டுவருகிறது.

பள்ளியில், கல்லூரியில் உள்ள பாடத்திட்டங்களை திருத்த சொல்லுங்களேன்....டார்வின் தியரி தவறு என்று எழுதச்சொல்லுங்களேன். இதை யாரும் செய்யமாட்டார்கள், ஏனென்றால் அது அவர்களுக்குத் தெரியும் முடியாது என்பது.

டார்வின் தியரி அனைத்து கடவுள் கதைகளையும் பொய் என நிருபிக்கும் ஒன்று. எனவே டார்வின் தியரி பொய் என்று சொல்லிவருகின்றனர். ஆனால் அப்படி சொல்லுபவர்களால் டார்வின் தியரி பொய் என நிரூபிக்க முடியவில்லை. டார்வின் தியரி தொடர்ந்த பரிணாமவளர்ச்சியில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது.

அறிவியல் சிந்தனை இல்லாத இடத்தில் மட்டும்தான் கடவுள் கதைகள் எடுபடும். அறிவியல் வளர வளர...கடவுள் காணாமல் போய்விடும். கடவுள் நம்பிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால், அறிவியலில் ஒரு
நூற்றாண்டுகாலமாகத்தான் வளர்ந்திருக்கிறோம்...இன்னமும் வளர வேண்டியுள்ளது.

நூறாண்டுகளுக்கு முன்பு கடவுள் மீது இருந்த அதீத நம்பிக்கைக்கும் இப்போது உள்ள நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்தால்....அதன் தொடர்ச்சி என்னவென்று எளிதாக புலப்படுகிறது.

- திராவிடப்புரட்சி

ஜெயலலிதா - சசிகலா குறித்த புதியதலைமுறை தொலைக்காட்சியின் பாரபட்சமான நிகழ்ச்சி


(19.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

புதியதலைமுறை தொலைக்காட்சியின் பாரபட்சமான நிகழ்ச்சியை பற்றி பேசும் முன்பு ஒரு வரலாற்று தகவலை பகிர்ந்துகொண்ட பிறகு பேசினால் அது சரியாக இருக்கும் என்பதால் அதைத் தருகிறேன்...

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங் குடியைச் சேர்ந்த ஆர்.எஸ். மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார்.  ஆர்.எஸ். மலையப்பன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; நல்ல நிருவாகி என்று பெயர் எடுத்த நாணயக்காரர்; குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகை சம்பந்தப்பட்ட தகராறில் அவர் வழங்கிய தீர்ப்பின்மீது (அப்பொழுது மாவட்ட ஆட்சியர்க்கு அத்தகு அதிகாரங்கள் உண்டு) மிராசுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் வழங்கும் தீர்ப்பு தவறு என்று சொல்லலாம் - புதிய தீர்ப்புகளையும் வழங்கலாம். அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. அதனை விட்டு விட்டு பார்ப்பனர் அல்லாத - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்பதை மனதிற் கொண்டு, அவரைப்பற்றி இரு நீதிபதிகள் தாறுமாறாக தீர்ப்பு எழுதினார்கள் தனிப்பட்ட முறையில். அந்த இருவரும் பார்ப்பனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அளவுக்குச் சென்று எழுதினார்கள்? இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இவருக்கு இதற்கு மேல் பெரிய பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கிறுக்கித் தள்ளினார்களே - அது எந்த சட்டத்தின் கீழ்? மலையப்பன்மீது திருச்சி மாவட்ட மக்களிடத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. இலட்சம் பேர் கூடிய பொதுக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான இரு பார்ப்பனர்கள் எழுதிய தீர்ப்பினைக் கொளுத்தினார் தந்தை பெரியார் (4.11.1956). அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் ஒரு காங்கிரஸ் காரர்தான்; பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் - நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. பழனியாண்டி தான் அவர். இரு பார்ப்பன நீதிபதிகள் ஒரு தமிழரின் உத்தியோகத்துக்கே வேட்டு வைத்து எழுதினர். மாவட்ட ஆட்சித் தலைவருக்காக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) தன் கடமையைச் செய்யவில்லை; காரணம் அவரும் ஒரு பார்ப்பனர்; `துக்ளக் பார்ப்பனக் கூட்டத்தின் கோத்திரத்தைச் சேர்ந்த `மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவான இந்து ஏடும் கும்மாளம் போட்டு எழுதியது. அதனால் தான் நீதிபதிகளின் தீர்ப்பும், இந்து ஏடும் எரியூட்டப்பட்டது (அன்று `இந்து இன்று `துக்ளக் - அதே உணர்வு அட்சரம் பிறழாமல் எப்படி இழையோடுகிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது!) தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் திருவாளர் பி.வி. ராஜமன்னார், ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர்.தந்தை பெரியார் எதிர் வழக்காடவில்லை. நீதிமன்ற அனுமதியுடன் வரலாறு படைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (1957 ஏப்ரல் 23). அந்த அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக பல வரலாற்று உண்மைகளை, ஆரியர் திராவிட வரலாற்றின் போக்கினை எல்லாம் பகிரங்கமாகப் படித்தார் - பதிவு செய்தார் (`நீதி கெட்டது யாரால்? என்ற நூலாக பிறகு வெளியிடப்பட்டது) அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஒரு மணி நேரம். பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன அய்.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ்.ஏ. வெங்கட்ராமன், எஸ்.ஓய். கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதிய மாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா? இல்லை! காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! அதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண்டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன்சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் `சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன் இதுதான் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் படித்த அறிக்கை.









``


இப்போது வருகிறேன் புதியதலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சி குறித்து.

இன்று 19.12.2011, புதியதலைமுறை தொலைகாட்சியில், நேர்பட பேசு என்ற நிகழ்சியில், ஜெயலலிதா எடுத்த கட்சி சார்ந்த நடவடிக்கை குறித்து அதாவது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டதாக தரப்பட்டுள்ள அறிக்கை குறித்து, கருத்துருவாக்க முயலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்சியில், ஞானி மற்றும் எஸ்.வீ.சேகர் இருவரையும் பேட்டிகண்டனர்.

பேட்டிகண்டது எல்லாம் சரி....

யாரை பேட்டி கண்டார்கள்? யார் குறித்து?

ஒரு பார்ப்பனர் எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு பார்ப்பனர்களிடம் கருத்து கேட்டு பேட்டியாம். இதில் இருந்தே இந்த தொலைகாட்சியின் நேர்மையுணர்வு நமக்கு தெரியவில்லையா?

நான் கேட்க்கவிரும்புவது எல்லாம்....மிகவும் திறமைசாலி எங்கள் மாமி என்று பீத்திக்கொள்ளும் பலருக்கு நான் கேட்கும் கேள்வி? இன்று சசிகலாவால்தான் அவரது குடும்பத்தினரால்தான் இவ்வளவும் என்று சில்லறைத்தனமான தப்பிக்கும் முயற்சியை நியாயமாக கருதுபவர்களை கேட்கும் கேள்வி?

இருபத்தியைந்து ஆண்டுகள் உடன்பிறவா சகோதரியாக இருந்த ஒருவர் தவறு செய்கிறார் (உண்மையாக இருக்கவேன்டிய கட்டாயம் இல்லை) என்பதை கண்டுபிடிக்க இவ்வளவு காலம் பிடித்த ஜெயலலிதா திறமையானவரா???!!! சிரிக்கத்தான் தோன்றுகிறது.

என்பத்தியெட்டு வயதாகும் கலைஞரை இன்றளவும் அவரது கட்சியினர் ஏமாற்ற முடியவில்லையே......

கலைஞர் திறமைசாலியா? அறிவாளியா? ஜெயலலிதா திறமைசாலியா? அறிவாளியா? (கேட்கும் எனக்கே இந்த கேள்வி அபத்தமாக தோன்றுகிறது).

ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அமைச்சரவை சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும், கலைஞரை குற்றம் சாட்டி பேசும் பார்பனர்களே, பார்ப்பனிய பத்திரிக்கைகளே, பார்ப்பனிய ஊடகங்களே..... இப்போது ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலாவை குற்றம் சாட்டுவதுதான் ஏன்? அதன் பெயர் மனுதர்மம் என்பது எங்களுக்குத் தெரியும்.


- திராவிடப்புரட்சி          

ஜெயலலிதா ரொம்ப நல்லவராம்....சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணமாம்.

(19.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

கதை கேளு கதை கேளு பார்ப்பனர்களின் கதை கேளு....

ஜெயலலிதா ரொம்ப நல்லவராம்....சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணமாம்.

ஜெயலலிதாவை பற்றி தெரிந்துகொள்ள ....

பழைய அவுட்லுக் கட்டுரையை கீழே தந்துள்ளேன்.

MISJUDGED, misled, misinterpreted, misunderstood and mismanaged. All this, say her friends, has rendered J. Jayalalitha highly unpredictable, as the BJP found out to its dismay. Personal considerations motivate political actions. Good and bad are differentiated by a mind ridden with angst rooted in a troubled past. Even success does not seem to have healed her victim syndrome.

Indeed, neither her allies nor her foes can explain why Jayalalitha projects herself as a victim even when she is cracking the whip.

Says Valampuri John, former MP: "She is a bundle of contradictions. There is a deep-rooted attitudinal problem which can be traced to her past. She perceives all men in her life—her father, MGR, her one-time live-in friend Shoban Babu—as people who failed her. Therefore she seems to have developed a deep distrust of almost everyone." John, who helped Jayalalitha in her formative political years and published a semi-autobiographical novel and two books of essays, stands discarded. He too has joined the ranks of those who once helped the AIADMK chief.

The disenchantment with practically everyone she was close to is reflected in her autobiography published in the Tamil weekly Kumudam in 1978. Her father is presented as a "squanderer and a gentleman of leisure", a man "who could not handle anything properly". MGR is a person who she said she would rather "treat as an equal rather than a superstar". A ‘betrayal’ by a school friend too left a deep impression. Jayalalitha had played postman for this friend who was in love with a neighbour. But "when the girl’s mother discovered what was going on, my friend played Brutus and painted me as a daughter of an actress and a girl of loose morals."

This overwhelming sense of being ‘used’ seems to have influenced the worldview of the otherwise precocious and sensitive girl who dreamed of "becoming a millionaire and a lawyer", collected pictures of Rock Hudson and had a crush on cricketers Nari Contractor and Mansur Ali Khan Pataudi.

"I used to go for matches with binoculars just to look at Pataudi and Pataudi alone," she croons. Her dream world collapsed when her mother Sandhya—also an actress known to MGR—revealed that a "financial crisis in the family" meant that ‘Jay’ would have to give up studies and start acting. Recalls Jayal-alitha: "It was a rude shock to me. My argument with Amma was that it was she who punished me for putting on make-up and told me to stay off cinema who was now pushing me into acting."

So the 16-year-old, instead of going to Stella Maris College, went to the sets of director C.V. Sridhar’s film Vennira Aadai (Widow’s Robe). An ironic title for a woman who never married, although she confesses she never understood "the word platonic" and believed that "either there is a romantic relationship between two people or they are just friends". A loner, Jayalalitha seems to have harboured a distrust for others rather early in life. "The experiences I have been through, the suffering and pain have taught me an important lesson: in life there is one person you must rely on—yourself."

Her former friends have all been abandoned. Cho Ramaswamy, editor of Tughlaq who she fondly describes in her autobiography as a ‘valuable’ friend, was recently admonished publicly and asked "not to describe himself as a friend". Salem Kannan, two-time AIADMK MP who virtually created a political base for her in the party, is now persona non grata. Ministers in MGR’s cabinet and former Jaya loyalists S. Thirunavakkarsu and K.K.S.S.R Ramachandran have been eased out of the party. Says Kannan: "After all that I have done for her, I am deeply hurt at the manner in which she dumped me when I advised her to keep Sasikala and her family at a distance."

Kannan and Valampuri John were privy to her blow-hot-blow-cold relationship with MGR. According to John, MGR was ‘suspicious’ of Jayalalitha and monitored her every move. He realised that she was a very independent woman "who acted on her own volition". Indeed, when MGR opted for a new heroine in 1970, an irate Jaya found a new friend in Telugu star Shoban Babu. It was only in 1981 that the relationship was revived, leading to her induction into politics a year later. Recollects Kannan: "A minister in MGR’s cabinet invited Jayalalitha to present a dance-drama at Madurai. MGR was so impressed by her performance that they became friends again."

Though the friendship was revived, MGR kept a close tab on his Ammu. Notes John: "This played on her mind. She felt she was a trapped woman being observed under a microscope. But she also seemed to have enjoyed all the attention." Interestingly, among those asked to spy on her by MGR was Sasikala who then ran a video parlour. Later, she became one of her closest advisers. Notes Kannan: "Very few people know this. But copies of the letters she wrote to me on her political moves made their way to MGR. I am convinced that this was given to him by Sasikala."

MGR had reasons to be suspicious. In late 1984 when he was hospitalised in the US following a stroke, Jayalalitha, a Rajya Sabha MP since 1983, was convinced that she should take over the reins. She approached the then prime minister, Rajiv Gandhi, and governor S.L. Khurana to appoint her chief minister since she felt that MGR’s health would not permit him to discharge his duties. Her moves were widely reported. Kannan who acted as her courier confirms her efforts to get to the top slot. So does John. Thirunavakkarsu. And R.M. Veerappan.

Stung by her moves, MGR stripped her of the deputy leadership of the parliamentary party. In an interview to Savvy magazine, she articulated her anger against the decision: "MGR has been a great influence in my life, I don’t deny that. But now I am my own person. I have evolved. Hereafter, I am responsible only for myself. Never again will anybody influence me to such an extent that all my thoughts and actions and statements are influenced and made in a particular way just because someone else wants it that way."

 In this "I will launch myself" mode, a parallel outfit called the Jayalalitha Peravai (conference) was formed in 1986, courtesy Kannan. Though Jayalalitha has denied any hand in its formation, Kannan told Outlook that it was with her full knowledge. The formation of the Peravai upset MGR no end. She was asked to stop functioning as the propaganda secretary of the AIADMK, a post specially created for her in 1983, and Kannan was expelled from the party. "When I met MGR he was very cryptic in telling me not to support that woman," says Kannan. The rivalry continued and in early 1987 the group opposed to Jayalalitha managed to convince MGR to convene the general council of the party to expel Jayalalitha and her friends. Sensing this, 33 MLAs owing allegiance to Jayalalitha held a meeting and decided to approach Rajiv to prevail upon MGR to stall Jayalalitha’s expulsion. Says Kannan: "This meeting was wrongly reported by the state intelligence as a move to float a rival party. A bitter and sad MGR could not stomach his protege breaking away. The sacking of Jayalalitha was struck off the general council’s agenda and Madam was invited to speak at a public rally that evening." This was the turning point in her career.

According to Jayalalitha’s inner circle, it was her success in managing MGR, often described as the wiliest of CMs, that convinced her she could manipulate all categories of politicians. Her pressure tactics with the BJP, they aver, are only a manifestation of this. Her former friend Thirunavakkarsu notes: "She has a history of using people and then discarding them." According to him, she has no permanent friends. This perhaps explains why she has tied up with her one-time arch rival Subramanian Swamy. Adds Thirunavakkarsu: "You cannot view her actions through traditional logic. She is a very impulsive person who manufactures situations to push her own personal agenda."

To a great degree, MGR is responsible for her achieving instant VIP status in the party. It was he who gave orders to partymen that they should stand up to show their respect to her. It was he who advised her to shun the media. When she came to power in 1991, she took all this to an extreme limit. She kept even her ministers at a distance. It was widely believed that it was Sasikala Natarajan who ran the government.

But the final word comes from Cho: "It is her habit to make unf-avourable remarks against her allies. She did it to Narasimha Rao. But this is the first time that she is trying to humiliate a PM. She is in a desperate hurry. Perhaps the cases against her could be solved only when the state government is changed. What she fails to understand is that the mandate is as much the BJP’s as the AIADMK’s."

Political wisdom dictates that Jayalalitha should be more diplomatic. But Jayalalitha functions on the principle, what Jaya wants Jaya shall get. Given her past, it doesn’t seem that preposterous, but for the Vajpayee government it spells continued turbulence.

குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடி மிக்க கொளல்.

இதில் எதை நாடினாலும் ஜெயலலிதா சுயநலவாதி போல தெரிகிறதே....


- திராவிடப்புரட்சி

அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்களுக்கு அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

(16.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்களுக்கு அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

இந்து மதத்திற்காகவும் அதன் கடவுளருக்காகவும் பரிந்துபேசும் அன்பர்களை ஒன்று கவனிக்க வேண்டுகிறேன்.

இந்து மதமும் அதில் பேசப்படும் கடவுளருமே முதன்மையும் சிறப்பும் உடையவர்கள் என்றால், இந்நாவலந்தீவிலுள்ள நாற்பது கோடி மக்களில் ஒன்பது கோடி முசல்மான்களும், அவர்கள் கடவுளான அல்லாவும், ஒரு கோடியே இரண்டு லட்சத்து எண்ணாயிரம் புத்தர்களும், அவர்கள் கடவுளான புத்தரும், ஒரு கோடி கிறிஸ்தவர்களும், அவர்கள் கடவுளான இயேசுவும், பனிரெண்டு லட்சத்து அறுபதினாயிரம் சமணர்களும், அவர்கள் கடவுளான அருகனும், இன்னும் நூறாயிரக்கணக்கான சீக்கியரும், யூதரும், பாரசீகரும் அவர்தம் கடவுளரும், கடவுளே இல்லை என்று முடிவுகட்டியவர்களும், கடவுளை பற்றி கவலை கொள்ளாதவர்களும், தனித்தனி கொள்கைகள், பழக்க வழக்கங்கள், உண்பது உடுப்பதில் வேறுபாடுகள் ஆகிய ஒன்றுக்கொன்று சேர்க்க முடியாத பிரிவுகளோடு இருக்கமுடியுமா? இப்படி செய்வதுதான் கடவுள் இயல்பென்றால், அத்தகைய கடவுள் மக்களுக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத்தானே வர வேண்டியிருக்கிறது.

இதனாலேதான், நெடுங்காலமாக மதத்தையும், கடவுளையும் ஆராய்ச்சியின்றி பின்பற்றித் தங்கள் வாழ்க்கை முறைகளை தப்பான வழிகளில் அமைத்துக்கொண்டுள்ள நம் திராவிட மக்களுக்கு, இவற்றின் உண்மைகளை எடுத்துக்கூறவும் திராவிட மக்களின் உண்மையான விடுதலையைக் காணவுமே திராவிடர் கழகம் பாடுபடுகின்றது. இதனையறிய மாட்டாத சிலர், அரசியலில் மதத்தை புகுத்துகின்றார்கள் – கடவுளைக் கண்டிக்கின்றார்கள் என்று காட்டு கூச்சலிடுகின்றனர்.

கடவுளும் மதமும் மக்களுக்குச் செய்த செய்கின்ற காரியங்கள் இவை இவை என எடுத்துக் காட்டவோ, எடுத்துக்காட்டகூடியதாயினும் அவர்களுக்குத் தோன்றுமானால், அவற்றை அவர்கள் கூறும் மதக் கோட்பாட்டின்படி, கடவுளும் மதமும் அமைக்கப்பட்டிருகிறது என்பதை மேலே எடுத்துக்காட்டியுள்ளேன். ஈண்டுக் கூறியவற்றால் தெளிவடைய மாட்டதாருக்கு, அவர்கள் விரும்பும் முறையில் தெளிவுதரவும் காத்திருக்கிறேன். ஆனால், அறிவுக்கு புறம்பான முறையில் அசட்டுவாதம் புரிய முற்படுவோருக்கு உண்மையை விளக்கி உணர வைப்பது என்பது எளிதில் முடியக் கூடிய காரியமன்று. இத்தகையினருக்குக் காலம் என்னும் கதிரவனின் கருத்தொளி நிச்சயம் விளக்கவுரை கூறும். அப்போது, அரசியலில் மதத்தையும் கடவுளையும் ஏன் புகுத்தினார்கள்? கடவுள் தன்மைக்கு ஏன் விளக்கவுரை கூறினார்கள்? மதத்தை ஏன் கண்டித்தார்கள் என்ற உண்மைகள் விளங்கும். அதன் பின்னராவது அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே நம்மை இதுபற்றி எழுதும்படி தூண்டிற்று.

-          “நக்கீரன்” என்ற புனைப்பெயரில் அறிஞர் அண்ணா எழுதியது – 01.10.1944

அறுபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகும், அரசியலில் மதத்தை புகுத்துகிறார்கள் – கடவுளைக் கண்டிக்கிறார்கள் என்று காட்டுக் கூச்சலிடுபவர்கள் இன்றும் இருப்பதால், அதுவும் காலத்தின் கொடுமையாக அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.கவிலும் இருப்பதால், பலர் தெளிவடையவேண்டும் என்பதற்காக, அந்த எழுத்தை இப்போது நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

நான் அறிஞர் அண்ணா எழுதியதை  இங்கு பயன்படுத்திக்கொள்கிறேன்....

ஆனால், அறிவுக்கு புறம்பான முறையில் அசட்டுவாதம் புரிய முற்படுவோருக்கு உண்மையை விளக்கி உணர வைப்பது என்பது எளிதில் முடியக் கூடிய காரியமன்று. இத்தகையினருக்குக் காலம் என்னும் கதிரவனின் கருத்தொளி நிச்சயம் விளக்கவுரை கூறும். அப்போது, அரசியலில் மதத்தையும் கடவுளையும் ஏன் புகுத்தினார்கள்? கடவுள் தன்மைக்கு ஏன் விளக்கவுரை கூறினார்கள்? மதத்தை ஏன் கண்டித்தார்கள் என்ற உண்மைகள் விளங்கும். அதன் பின்னராவது அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே என்னை நினைவுபடுத்தும்படி தூண்டிற்று.


- திராவிடப்புரட்சி

ஒரு உண்மையான திராவிட இயக்க உணர்வாளனின் உள்ளக்குமுறல்

(15.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது...

பார்ப்பனிய பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்தும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகின்றன, தி.மு.கவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க.

இந்தியாவில் உள்ள தமிழக அரசியலை பற்றி சிறிதும் கவலைப்படாத சீமானும் அவரது விசிறிகளும், கலைஞர் அரசை தொடரவிடாமல் செய்வதற்க்காக, மேடை பிரச்சாரமும் இணையததள பிரசாரமும் தொடர்ந்து செய்கின்றனர்.

இந்திய – தமிழக அரசியல் – அதன் சாதக பாதகம் புரியா ஈழத் தமிழர்கள், உலகின் பல மூலைகளில் இருந்தும் அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து கலைஞரை துரோகியாக சித்தரித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

அ.தி.மு.கவின் ஆதரவு பிரசாரமும் இணையவாயிலாக தொடருகிறது.

அரசியல் அறிவோ, இனவுணர்வோ இல்லா பல தமிழர்கள், எதோ பல காரணங்களுக்காக கலைஞரை எதிர்த்து, தி.மு.கவிற்கு எதிராக, இணைய வாயிலாக பரப்புகின்றனர் படித்த இளைஞர்கள்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பான தணிக்கை அதிகாரியின் அறிக்கையை வைத்து, அதை ஒரு ஊழலாக சித்தரித்து பலரும் செய்திகளை பரப்புகின்றனர்.

தொடர்பே இல்லாத குஜராத்தின் மோடி அரசை புகழ்ந்து
கலைஞரின் தமிழக  அரசை இகழ்ந்து பிரச்சாரம் செய்தனர்.

தி.மு.க தமிழகத்தில் செய்த சாதனைகளை குறைசொல்ல முடியா அனைவரும் வேறு பல குறைகளை சொல்லி எதிர்த்தனர்.

துணைக்கு யாரும் இல்ல சூழலில் ஒரு திராவிட உணர்வாளனாய் தனித்து களம் இறங்கினேன், புதியதொரு அடையாளத்தில் (இதுவல்ல).

அனைத்தையும் எதிர்த்து வாதிட்டேன். ஆதாரங்களோடு.

இறுதியில் தி.மு.க தோற்றது தேர்தல் அரசியலில். என் வாதங்களும் தோற்றுவிட்டன.

நான்,

அலைக்கற்றை குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டேன்.

கலைஞரின் குடும்ப அரசியல் குறித்த வாதங்களுக்கு எதிர்த்து வாதிட்டேன்.

கலைஞரின் குடும்ப உறுப்பினர்களின் ஆன்மிக உணர்வை அதாவது அவரது பகுத்தறிவு கொள்ள்கைக்கு எதிரான வாதத்தை எதிர்த்தேன்.

சீமான் மற்றும் அவரது விசிறிகளின், கலைஞர் ஈழத்திற்கு எதிரானவர் என்ற வாதத்தை எதிர்த்தேன்.

மோடியை விட கலைஞர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை கட்டுரை மூலமாக தெரிவித்தேன்.

கலைஞர் அரசின் சாதனைகளை பரப்பினேன்.

கலைஞர் – தி.மு.க அரசின் சாதனைகள் குறித்த செய்திகள் அடங்கிய தி.க வெளியிட்ட நூல்களை வாங்கி பரப்பினேன்.

இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறேன்....விவரிக்க இயலாததை.

தேர்தலுக்கு பிறகு,

பல கைதுகளை எதிர்த்தேன்,

தமிழுணர்வை ஆதரித்து கட்டுரை எழுதினேன். வழக்கம்போல.

தமிழகத்தின் புதிய ஆட்சியின் குறைகளை எதிர்த்தேன்.

சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசின் நிலையை இணையத்தில் முதன்முதலில் தெரிவித்து எதிர்த்தேன்.

அண்ணா நூலக விவாகாரத்தில் என் தொடர் எதிர்ப்பை தெரிவித்தேன். செயல்பட்டேன்.

பரமக்குடி நிகழ்வை கண்டித்து எழுதினேன்.

முல்லைபெரியாறு குறித்ததும் என் சமூக நியாய உணர்வை வெளிப்படுத்திவருகிறேன்.

இவை எல்லாம் பதவிக்காகவோ, பொருளுக்காகவோ, புகுழுக்காகவோ செய்யவில்லை. நான் செய்த அனைத்தும் புனைப்பெயரில், அதுவும் சிலவற்றில் பின்னிருந்து.


மீண்டும் திராவிட இயக்கத்தின் உண்மையான பதவிக்கு வரவேண்டிய அரசியல் இயக்கமான தி.மு.க, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற உன்னதமான உணர்வில்....

இணையத்தில் திராவிட இளைஞர்களுக்கு, நம் இனவுணர்வை ஊட்டுவதற்காகவும், திராவிட இயக்க வரலாறை நினைவூட்டுவதற்க்காகவும், பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதற்காகவும், நான் இந்துத்துவாவை எதிர்த்து பதிவுகளை வெளியிட்டேன்.

நான் இவ்வளவு செய்தபோது எதிர்க்காத தோழர்கள், இந்துத்துவாவை எதிர்த்தபோது கிளர்ந்து எழுந்துவிட்டனர். அது தி.மு.கவின் வாக்கு வங்கியை குறைத்துவிடும் என்று அதுவும் தோற்ற பிறகு வாதிடுகின்றனர்.

நான் வாக்கு வங்கியை குறிவைத்து செயல்படவில்லையாம். தி.க வின் அதாவது பெரியாரிய கருத்துகளை மட்டும் பிரச்சாரம் செய்கின்றேனாம். அது அவர்களது வாக்கு வங்கியை குறைக்குமாம்.

எது வாக்கு வங்கி? அதை பெறுவது எப்படி? என்று ஏதாவது புள்ளிவிவரம் இருக்கிறதா எனது அருமை அறிவாளிகளே? அந்த விவரம் தெரிந்தால், அந்த இரகசியம் தெரிந்தால், போட்டிபோட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாவது தெரியுமா அறிவாளிகளே?

மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கருத்தில்கொள்ளாமல், வாக்குவங்கியை மட்டும்  பேசும் உங்களைப்போன்றோர்தான், இந்த மாபெரும் உன்னதமான இயக்கத்தின் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

உண்மையான வாக்கு வங்கி என்பது என்ன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதற்காக நீங்கள் என்றாவது செயல்பட்டிருக்கிறீர்களா?

திராவிட இயக்க உணர்வுள்ளவர்களை குறை சொல்லும் முன்பு, நீங்கள் உண்மையான திராவிட இயக்க கொள்கை உணர்வாளர்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

கட்சி என்பது வேறு, இயக்கம் என்பது வேறு, சுயநல அரசியல் என்பது வேறு, மக்களுக்கான அரசியல் என்பது வேறு.

புரிந்துகொள்ள முயலுங்கள் தோழர்களே.


- திராவிடப்புரட்சி

திராவிட இயக்கத்தின் தற்போதைய ஆபத்தான நிலை

(14.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

திராவிட இயக்கத்தின் தற்போதைய ஆபத்தான நிலை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆட்சியாளர்களும் அவர்களின் ஆலோசகர்களாக இருந்த ஆரியர்களும், உழைக்காமல் செழிப்பாக வாழ, மற்ற மக்கள் எல்லோரும் உழைக்கும் வர்க்கமாக, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையில், வரியையும் கட்டி, ஏழ்மையில் உழன்றனர். இதற்கான காரணம் அவர்கள் சூத்திரர்கள் என்பதால்.

சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில், கல்வி பார்ப்பனர்களுக்கும், ஆளும் சத்திரியர்களுக்கும் மட்டுமே என்ற நிலையில், அறிவில் குறைந்து, சொல்லித்தரபட்ட கடவுள் நம்பிக்கையில் உழன்று, அiனைத்திற்கும் காரணம் விதி என்று நம்பி, மூட நம்பிக்கையில் மாய்ந்தனர்.

காலம் மாறியது, ஆங்கிலேயரின் ஆட்சி வந்தது, வழக்கம்போல அந்த ஆரியர்கள் அவர்களின் ஆலோசகர்களாக மாறினார். ஆண்ட சத்திரியர்கள் அழிந்தனர், ஆலோசகர்கள் தொடர்ந்து செழிப்பாக இருந்தனர். அவர்கள் கற்ற கல்வி மற்றும் அவர்களது சூழ்ச்சியினால், நவீன காலத்திலும் வேலைவாய்ப்பை பெற்று சுகமாய் வாழ்ந்தனர்.

ஆங்கிலேயர் இந்த சமூகத்திற்கு செய்த மிகப்பெரும் நன்மை என்பது. கல்வியை பொதுவாக்கியதுதான். அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பாட்டாலும், ஆண்டாண்டுகாலமாக அடிமையாய் வாழ்ந்த அந்த சூத்திர சமூகம், கல்வியின் பலனை அனுபவிக்கமுடியாமலேயே இருந்துவந்தது. இன்றும்கூட கல்லூரி படிப்பை படிக்காத லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

அனைத்திற்கும் காரணம், சூத்திரன் என்ற நிலையும், அந்த நிலைக்கு காரணமாக இருக்கும் மதமும், அந்த மதத்தை காப்பாற்றும் கடவுளும், அந்த கடவுளை காப்பாற்றும் பார்ப்பனர்களும்தான்.

தென்னகத்தில் ஒரு புரட்சி நடந்தது. கல்வி கற்ற சூத்திரர்கள் சிலர் சிந்தித்தார்கள். தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் என்ற மூன்று பெருமகனார்கள் அமைப்பு ரீதியாக இதை எதிர்க்க கிளம்பினார்கள். 1916ல், சென்னை வேப்பேரியில், தென்னிந்திய நல உரிமை சங்கம் அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிக்கட்சி ஆட்சியை பிடித்து, சூத்திரர்களுக்கு மேம்படுத்தும் பணியை தொடங்கியது. பின்னாளில் நீதிக்கட்சி தந்தை பெரியாரின் தலைமையில் சுமரியாதை கழகத்தை இனைத்து திராவிடர் கழகமாக உருமாறியது. திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத நிலையில், அதில் இருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி தந்தை பெரியாரின் கொள்கையை ஆட்சியை பிடித்து நிறைவேற்றும் பெரும் பணியை செய்தார். தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் திராவிட இயக்கம் இந்தியாவில் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்னமும் நிறைய செய்யவேண்டிய பணிகள் மீதம் உள்ளது.

இப்படி சில வரிகளுக்குள் சொல்லப்பட்ட இந்த வரலாறு அவ்வளவு எளிதாக அமைந்தது அல்ல. இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது அவர்கள் எதிர்த்தது சர்வ வல்லமை படைத்த ஆரியத்தை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்களை, அவர்களுக்கு சாதகமாக இருந்த அரசை, அவர்களை நம்பிய இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் நம்பிக்கையை.

பார்ப்பனர்களை எதிர்த்தார்கள், இந்து மதத்தை எதிர்த்தார்கள், கடவுளை எதிர்த்தார்கள். அதனால், ஆரியர்களின் எதிரிகளானார்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளானார்கள், மத உணர்வு மிக்க செல்வந்தர்களுக்கு எதிரிகளானார்கள், கடவுள் மத நம்பிக்கை உடைய இலட்சக்கணக்கான மக்களுக்கு எதிரியானார்கள்.

மிக சிறிய கூட்டம் மிகப்பெரும் சமூகத்திற்கு எதிராக அவர்களது ஆயிரக்கணக்கான ஆண்டுகால கடவுள், மத, ஜாதி நம்பிக்கைக்கு எதிராக பேசுவது செயல்படுவது என்பது சாதரணமான ஒன்றல்ல. போகுமிடமெல்லாம் தாக்கப்பட்டார்கள், இரத்தம் சிந்தினார்கள், மிரட்டலுக்கு ஆளானார்கள், கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டார்கள், வேலை இழந்தார்கள், சொத்தை இழந்தார்கள், சொந்த பந்தங்களை இழந்தார்கள், உற்றார் உறவினர்களால் ஒதுக்கிவைக்கபட்டார்கள் ஓரம்கட்டப்பட்டார்கள், சட்டம் துரத்தியது, கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள், வறுமையில் உழன்றார்கள், உயிரையும் இழந்தார்கள்.

இவையெல்லாம் எதற்காக???

சுயநலத்திற்காகவா???

இல்லை இல்லை.சமூகத்திற்காக.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அடிமைபடுத்தபட்டிருந்த, தாம் அடிமை என்று உணராதிருந்த, கடவுள் மதம் ஜாதி என்ற மாயவலையினுள் சிக்கி வெளிவரமுடியாமல், சூத்திர பட்டத்தை சுகமாய் சுமந்துகொண்டு, இழிநிலையை விதியின் காரணம் என்று நம்பி, அறிவுனர்சியும் மானவுனர்சியும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த மக்களை சீர்திருத்துவதற்க்காக, சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக.

எத்தனை ஆயிரம் தன்னலமற்ற இயக்க உணர்வுள்ள தொண்டர்களின், தலைவர்களின் தியாகத்தால் உருவானது இந்த திராவிட இயக்கம்?.

இன்று சிலர் தாங்கள்தான் இயக்கம் என்று திமிர்பிடித்து இருக்கின்றனர். எதற்கு கொள்கை என்று ஏளனம் செய்கின்றனர். அது அந்த காலம் என்று ஊதாசீனப்படுத்துகின்றனர். பெரும்பான்மை இந்து மதத்தவரின் மனம் புண்படக்கூடாது என்கின்றனர் அக்கறையாக. ஜாதியை ஒழிக்கமுடியாது என்று கிசுகிசுக்கின்றனர். ஜாதி மத விவகாரங்களை விசாரணைக்கு உட்படுத்தினால் வாக்கு வங்கி குறைந்துவிடும் என்று விவாதிக்கின்றனர். அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகவேண்டும் என்று அமட்டலாய் சொல்லுகின்றனர். பெரும்பான்மையை எதிர்த்தால் அழிந்துவிடுவோம் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர்.

ஏய் கொள்கையற்ற கோமாளிகளே!

எந்த இயக்கத்தில் இருந்துகொண்டு இந்த பேச்சை பேசுகிறீர்கள்? பெரும்பான்மை மக்களின் இழிநிலையை போக்க அந்த பெரும்பான்மை மக்களையே எதிர்த்து நின்று சாதித்த இயக்கம் இந்த திராவிடர் இயக்கம். சமூகத்தை சீர்திருத்திய இயக்கம் இந்த திராவிட இயக்கம். சமூகத்தையே புரட்டிபோட்ட புரட்சி இயக்கம் இந்த திராவிட இயக்கம்.

பெரும்பான்மையாம் புடலங்காயாம். யாரை ஏமாற்ற இந்த பேச்சு?

இந்துமதத்தை, அதன் கடவுள்களை, அதன் கொடுங்கோன்மையை எதிர்த்து களம்கண்ட இயக்கம் இது. ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போடுவதை கேவலமாக நினைக்கும் வண்ணம் இந்த சமூகத்தில் உள்ள உயர்ஜாதி பார்ப்பனர் உட்பட அனைவரும் சிந்திக்கும்வண்ணம் சமூகமாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம் இந்த இயக்கம். இந்தியாவில் எங்கும் இல்லாத மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்திய இயக்கம் இந்த இயக்கம்.


பெரும்பான்மைக்கு ஒத்து ஊதும் எண்ணம் இருந்திருந்தால், இந்த இயக்கமே தோன்றியிருக்காது. பெரும்பான்மைக்கு ஆதரவு என்பது தொடர்ந்திருந்தால், அனைவரும் இருந்திருப்போம் அடிமைகளாய், தேவிடியா மகன், மகள் என்ற சூத்திர பட்டத்தை சுகமாய் சுமந்துகொண்டு.

பலரின் தியாகத்தால் உருவான சிறிய சமூக மாறுதலை பயன்படுத்தி கிடைத்த வாய்ப்பில் எதோ ஒரு நிலைக்கு வந்துவிட்ட காரணத்தினால், கொள்கையை தூக்கி எறியச்சொல்லும் எமாற்றுக்காரகளே, நீங்கள் மட்டும் சமூகம் அல்ல. இன்றும் கீழ் நிலையில், சமூகத்தின் அடித்தட்டில், வாய்ப்பு மறுக்கபட்டவர்களாய் வாழும் மக்கள் உங்களை விட ஏராளம். அவர்களுக்கு இந்த இயக்கத்தின் பணி இன்றும் நிலுவையில் உள்ளது. உங்கள் நிலை நிரந்தரம் என்று நினைக்காதீர்கள் அது மாறுதலுக்கு உட்பட்டது. உங்கள் நிலையை வைத்து உலக நிலையை ஒப்பிடாதீர்கள்.

பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கையை ஆதரிப்பதனால், வெற்றிபெற முடியுமா? எதிர்த்தால் தோல்வியை தழுவுவோமா? புரட்டுப் பேச்சு பேசுபவர்களே, உங்கள் தரப்பை சரி என எடுத்துக்கொண்டால், திராவிட இயக்கம் என்னதான் இந்து மத வேஷம் போட்டாலும், ஒரிஜினல் அக்மார்க் இந்து மதக கட்சியான, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிள்ளையான பா.ஜ.கதான் ஆட்சியை பிடிக்க முடியும். அவர்களைவிட நீங்கள் என்ன பெரிய மதவாதிகளா? என்ன பித்தலாட்ட பேச்சு பேசுகிறீர்கள்?.

திராவிட இயக்கம் என்பது எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம், தந்தை பெரியாரின் வார்த்தையில் சொன்னால், பாஷானத்தில் புழுத்த புழு. இதை எதிர்ப்பால் அழிக்கமுடியாது.

தன் கொள்கையை இழந்தால், அது தானாய் அழியும். அந்த கொள்கையை உள்ளிருந்தே சிலர் அழிப்பதுதான் கொடுமை.

கொள்கையற்ற இந்த அறிவீனர்கள், கொள்கையுள்ள எங்களைப்பார்த்து சொல்லுகிறார்கள், இனி உங்களுக்கு வேலையில்லை வெளியேறுங்கள் என்று. யாரைப் பார்த்து யார் சொல்லுவது? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுகிற கதையாய்.

அராபியன் கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகம் கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது இருக்கும் நிலையை பார்த்தால். இது காலத்தின் கொடுமையல்ல. இந்த இயக்கத்தின் அழிவின் தொடக்கம். காப்பாற்றும் கடமை எங்களுக்குள்ளது.

வரலாறு என்பது வெறுமே படித்துபார்ப்பதற்கல்ல. வரலாறில் நாம் கற்றுக்கொள்ளவதற்காக. கடந்த காலத்தில் இருந்த நாம் சரி தவறுகளை உணர்ந்து நம்மை சீர்படுத்திக்கொள்ள பயன்படுவதே வரலாறு.

திராவிட இயக்கம் தற்போது படிக்கவேண்டிய வரலாறு புத்த மதத்தின் வரலாறு.

இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த வைதீக மதம், பார்ப்பன மதம், இந்துமதம் அதன் சமூக கொடுமை எங்கெங்கும் வியாபித்திருந்த காலத்தில், புத்தர் என்று புரட்சியாளர் தோன்றினால், கேள்வி கேட்டார், விவாதித்தார், இழி நிலைக்கு காரணம் விதியல்ல என்பதை நிறுவினார், மனிதனின் துக்ககரமான நிலையை நீக்கப் புறப்பட்டார். கடும் எதிர்பிற்கிடையேயும் பிரசாரம் செய்தார். எதிரிகளால் அவரை வாதத்தில் வெல்ல முடியவில்லை. வைதீகம் புத்தரின் முன்னால் வீழ்ந்தது. புத்தம் பரவியது, ஆண்டது. ஆனால் வைதீகம் வேறு வடிவம் எடுத்தது. வைதீகர்கள் பலர் புத்தரின் இயக்கத்திற்குள் நுழைந்தனர், பெரும் நிலைக்கு உயர்ந்தனர். மெல்ல அவர்களது வைதீக கருத்துகளை புத்தரின் இயக்கத்தினுள் புகுத்தினர், அதையும் மூடநம்பிக்கை உள்ள மதமாக மாற்றினர். மூடநம்பிக்கைக்கு எதிராக உயர்ந்த அந்த புத்தரின் இயக்கம், மூடநம்பிக்கை புகுத்தப்பட்ட மதமாக மாறியது. அதன் அடிப்படை கொள்கையை இழந்த நிலையில், மூடநம்பிக்கை உள்ள மதங்களில் புத்தமதமும் ஒன்றாக மாற.....மெல்ல அழிந்தது புத்தமதம் இந்தியாவில். ஆண்ட புத்த மதத்தினர், அடித்துவிரட்டப்பட்டனர், அழித்து ஒழிக்கப்பட்டனர். மீண்டும் வைதீகம் தலை தூக்கியது.

இது திராவிட இயக்கத்தினர் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய வரலாறு. நாமும் புத்தரின் இயக்கத்தை போல பெரும்பான்மையை சமூக நலத்திற்க்காக எதிர்த்து புறப்பட்டோம், சாதித்தோம், சமூக நீதியை ஓரளவுக்கு நிலைநாட்டினோம், ஆண்டோம், இப்போது நமது அடிப்படை கொள்கைக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள் இயக்கத்தினுள் வந்து கோலோச்சுகின்றனர். அடுத்து என்ன நிலை வரும் என்பதை சிந்தித்து எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.


- திராவிடப்புரட்சி     

அறுவை சிகிச்சையே பலன்தரும் என்ற நிலையை நோய்க்கிருமி ஏற்படுத்தியுள்ளது

(8.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

சுதந்திரம் வாங்கும் முன்பு, தனித் ‘திராவிட நாடு” என்ற கோரிக்கையை தென்னகம் எழுப்பிய ஒரே காரணத்திற்காக...

திராவிட நிலப்பகுதியை திட்டமிட்டு மொழிவாரி மாகானமாக பிரித்து...

பிரித்த பகுதியில், தீர்க்கவியலா பிரச்சனைகளை சேர்த்து வைத்து...

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே இனமாய் இருந்த திராவிடர்களை, மொழி, பண்பாடு, உணவு இவற்றில் இன்றும் ஒற்றுமையை உடைய அந்த தொன்மையான இனத்தை, சமஸ்கிருத கலப்பினால் மொழியில் மட்டும் ஏற்பட்டுள்ள சிறிய மாறுதலைக்கொண்டு, மிகவும் எளிதாக பிரித்துவிட்டார்கள், வடநாட்டு ஆரியர்கள் தென்னாட்டு ஆரியர்களின் ஒத்துழைப்போடு.

திராவிட மன்னர்களை சேர சோழ பாண்டிய என்றே அழைப்பதுண்டு...அதில் இன்று சேரப் பகுதி முழுவதும் மலையாளிகள் என்று அழைக்கபடுவதால் அவர்கள் வேறு இனத்தை சேர்ந்தவர்களாகிவிடமுடியாது.

அன்று ஜாதியால் நம்மை பிரித்து மேய்ந்த ஆரியம், இன்று மொழியால், மாநிலத்தால் பிரித்து மேய்கிறது.

காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு என பிரித்து மேய்வதற்கென்றே பிரச்சனைகளை தீர்க்காமல் தொடரச் செய்கிறது வடநாட்டு அரசியல்.

இந்த பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பது தேசிய கட்சிகளே. தமிழகத்தில் தேசியகட்சிகள் ஒடுக்கபட்டிருந்தாலும், நம்மை சுற்றியுள்ள நம்மின மக்கள் வாழும் அண்டை மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

அங்குள்ள தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும் அதே கட்சிகளை சேர்ந்தவர்கள் இங்கு தமிழகத்திற்கு ஆதரவாகவும் பேசுவது...நம்மையெல்லாம் முட்டாளாக்குவதற்கே.

இந்திய இறையாண்மையை காப்பாற்ற, திராவிட இனம் பிரித்து மேயப்படவேண்டுமா?

இந்திய இறையாண்மையை காப்பற்ற, தமிழகம் இரையாக்கப்படவேண்டுமா?

இந்தியாவில் இணைந்து இருப்பதால்தான் நமக்கு இவ்வளவு இன்னல்களா?

நம்முடைய அண்டை மாநிலங்களோடு நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கபடாவிட்டால், நம்முடைய அடிப்படை தேவையான நீர் நமக்கு முறையான வகையில் பிரித்து வழங்கப்படாவிட்டால், நாம் தனியாய் பிரிவதை தவிர வேறு வழி இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான், நம்மை பிரித்து மேயும் வடநாட்டு அரசியல்வாதிகளுக்கும், தேசியகட்சிகளுக்கும் கொஞ்சமாவது புரியும்.

நோய் முற்றிக்கொண்டிருக்கிறது, இனி நீண்டகால மருந்து உதவாது, அறுவை சிகிச்சையே பலன்தரும் என்ற நிலையை நாம் அல்ல நோய்க்கிருமி ஏற்படுத்தியுள்ளது.


- திராவிடப்புரட்சி

கலைஞரைத் திட்ட மாவீரர் நாளையும் பயன்படுத்தும் குழப்பவாதிகளின் பேச்சை நம்பாதீர்கள்.

(27.11.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

கலைஞரைத் திட்ட மாவீரர் நாளையும் பயன்படுத்தும் குழப்பவாதிகளின் பேச்சை நம்பாதீர்கள்.

தவறான வழிகாட்டுதலையும் தவறான முடிவையும் எடுத்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய மனிதஅழிவை மறைத்து திசைதிருப்பும் ஒற்றை நோக்கத்தில் கலைஞரை குறை சொல்லிக்கொண்டிருகிறார்கள்.

கலைஞர் அழுத்தம் தந்திருந்தால், இந்த போரை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுபவர்கள், போரில் நேரடியாக ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் இந்த பேரழிவை தவிர்த்திருக்கலாம் என்பதை மட்டும் ஏன் பேச மறுக்கிறார்கள்?

நானும் ஒரு ஈழ ஆதரவாளன் என்ற முறையில் நான் யாரையும் எதிர்த்தோ ஆதரித்தோ பேச விரும்பவில்லை, நடுநிலையோடு சிந்தித்து பேசவிரும்புகிறேன்.

கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று பிரபாகரன் அவர்களோ அல்லது அந்த இயக்கத்தின் அதாவது போரின் நிலை அறிந்த முன்னனியினரோ, உலகின் எந்த ராஜதந்திரியோ, போர்க்கலை வல்லுனர்களோ தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்கவும் மாட்டார்கள். நம் ஊரில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும் கலைஞரை ஐ.நா மன்றத்தின் பொதுச்செயளாலரை போல கருதி வசை பாடுகிறார்கள். அந்த ஐ.நா. மன்ற பொதுச்செயலாளர் பாண்.கி.மூனாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை அது வேறு விஷயம்.

லண்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் லண்டன் மாநகரை குலுக்கிய பேரணியை நடத்தியும்....பல ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தும், தடுக்க முடியாமல்போன அந்த பேரழிவை, கலைஞர் தடுத்திருக்கலாம் என்று பேசுவது...வெறும் அரசியலே.

கலைஞர் காங்கிரசை எதிர்த்து ஆதரவை திரும்பப்பெற்றிருந்தால்...என்ன நடந்திருக்கும்? கொஞ்சம் நியாயமாக சிந்திப்போம்.

ஜெயலலிதா ஆதரவு தரத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில்...தி.மு.க காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியாக மாறியிருக்கும்.

தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாத நிலையில் பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க அரசு கவிழ்க்கபட்டிருக்கும்,  தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டிருக்கும். ( காங்கிரசுக்கு ஆப்பு வைக்க நினைத்த தி.மு.கவை தொடர விடுவார்களா?)

ஜெயலலிதா முலாயம் சிங் உள்ளிட்டவர்களின் ஆதரவில் மத்திய காங்கிரஸ் அரசு எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றிருக்கும்.

தமிழக ஈழ ஆதரவாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் நெருக்கடி தரப்பட்டிருக்கும்.

இதைத்தான் சிலர் விரும்பினர். இதனால் போர் எப்படி நிறுத்தப்பட்டிருக்கும்???

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக கற்பனை செய்துகொள்ளும் என்று சொல்லுவதை போலத்தான், கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்ற கற்பனை பேச்சு. போரை நிறுத்தும் நேரடி வாய்ப்பு ராஜபக்சேவுக்கும் பிரபாகரனுக்கும் மட்டும்தான் இருந்தது என்பதே உண்மை.


இந்த குழப்பவாதிகளின் வாதத்தை எற்றுக்கொண்டோமானால்....அதில் என்ன வெளிபடுகிறது என்றால்....இங்கிலாந்து பிரதமரால் முடியாததை, பல ஐரோப்பிய நாடுகளால் முடியாததை, ஐ.நா.வால் முடியாததை, கலைஞர் செய்திருக்கலாம் என்ற அவர்களின் வாதம்...கலைஞரை ஒரு மாபெரும் உலகத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே வெளிபடுத்துகிறது.

நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

- திராவிடப் புரட்சி 

பேராதிக்கப் பேயே! (ஆரிய மாயை – பார்ட் – 2)

(16.11.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)


பேராதிக்கப் பேயே!

நீ...
ஆதாம்...ஏவாள் காலத்திலிருந்தே
நீதான் மனிதர்களை
ஆட்டுவித்து வருகிறாய்.

உனக்கு...
உழைக்கத் தெரியாது.
ஆனால்..
எவரை அண்டியாவது
இல்லை
‘மற்றவர்’ வாழ்வை கேடுத்தேனும்
எப்படியாவது பிழைக்கத் தெரியும்.

போட்டுக் கொடுத்தல்
காட்டிக் கொடுத்தல்
இந்த
மந்திரங்களை
கொஞ்சம் கூட
கூசாமல் குறுகாமல்
உன் ஜீவனதிற்காகக்
கடைபிடிப்பாய்.

“வடகலை...தென்கலை” என்று
வாய்கிழிய நீ பேசுவது
வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த இரண்டு “கலை” மட்டும்
இங்கு இருக்க வேண்டுமென்பதே
உன் எதார்த்த நிலை.

இந்த இரண்டு “கலை’ மட்டும்
இங்கு இருக்க வேண்டுமென்பதே
உன் எதார்த்த நிலை.

இதற்காக,
வலிமையான ‘சூத்திரரை’
வம்பு தும்பு வதந்தி பரப்பி
அழித்தொழிப்பது
உனக்கு கைவந்த கலை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
உன் கொடி நாட்டவே துடிக்கிறாய்.

கடவுள் பேர் சொல்லி
ஏமாற்றி பிழைக்கும் கயவன் நீ
கட்சிகள் ஆட்சிகள் தலைவர்கள்
கடுகளவும் பேதமின்றி
“மற்றவர்” புகழை உடைக்கிறாய்.

மாசு மருவற்ற மனிதர்கள் மீது கூட
மனசாட்சியே இல்லாமல்
மட்டமான புகார் சொல்லி மகிழ்கிறாய்.

பாரத தேசத்தின்
‘பசி’ப் பிணி தீரப் பாடுபடும்
பண்பான தலைவர்கள் சிலரைக்கூட
ஏசியும் பேசியும் வருகிறாய்
எப்படியேனும் அவர்கள் வசிக்கிற
உயர் பதவிகளை பிடுங்கத்
துடிக்கிறாய்.

மனித சாத்திரம் படிதவர்க்கெதிராய்
‘மனு சாஸ்திர’ ஆயுதம் எடுக்கிறாய்
மகாபாரத இராமாயண
காலத்திலிருந்தே
மறைந்திருந்தே மற்றவர் மீதம்பு
தொடுக்கிறாய்.

பூஜை புனஸ்காரம்
புனிதமான யாகம் ஹோமம்
இவையெல்லாமே...
வாழ்க்கைக்கு வழிகாட்டும்
‘நன்னூல்’ அல்லவா...

வேதங்கள் சாட்சியாய்
வாழ்வதாய்ச் சொல்லும்
நீ அணிந்த அந்தப் ‘பூணூல்’
நியாயவான்களைக் கொல்லவா...?

இதற்கு மேலும்
எங்களைச் சோதிக்காதே
பேராதிக்கப் பேயே...
இங்கு எழத் தொடங்கிவிட்டது
உன் கொடுமைக்கெதிராய்
பெறும் பிரளயத் தீயே...

-          புதிய பாரதி


இந்த கவிதை 16 – 18  நவ 2011 நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது...

அதுவும் ப.சிதம்பரம் அவர்கள் பிரணாப் முகர்ஜியை பார்த்து சொல்லுவது போல படம் வேறு உள்ளது.

இதை எழுதிய புதிய பாரதி யார்? எனத் தெரியாவிட்டாலும்... எழுதியதன் காரணம் அரசியல் அறிந்த அனைவரும் உணரக்கூடியதே.

அடடா....என்ன ஒரு தன்மான உணர்ச்சியில் கொந்தளித்து வந்துள்ள கவிதை இது?

சமூக இழிவுக்கெதிராய் இதே கவிதை வந்திருந்தால்...
கருஞ்சட்டை அணியா வெண்சட்டைகாரராய் கருதி
வியந்து பாராட்டியிருப்பேன்.

இருந்தாலும்...

ஒரு தமிழனுக்கு எதிராய் நடக்கும் சதியை உணர்ந்து, உள்ளுக்குள்ளேயே குமையாமல், வெளிபடையாக போர் முரசை கொட்டியிருக்கும் இந்த கவிதையில் உள்ள சுயமரியாதை உணர்வு, மிகுந்த பாராட்டுக்கும்...சூத்திரர்களின் ஆதரவுக்கும் உரியது.

இதே கருத்தை பேயை நம்பாத கருஞ்சட்டை எழுதியிருந்தால்...அதன் தலைப்பு “ஆரிய வெறியே” என்று இருந்திருக்கும். ஆனால், இந்த கவிதையின் தலைப்பு ‘பேராதிக்கப் பேயே’ என்று வந்துள்ளது.

எது எப்படியோ, அந்த ஆரியப் பேயால் பாதிக்கப்பட்ட நம் சூத்திரரின் தன்மான உணர்ச்சியை வெகுவாய் பாராட்டியே தீரவேண்டும். “ஆரிய திராவிட” என்பது எழுதியவருக்கு உடன்பாடில்லாமல் போகலாம்....அல்லது அதை கவிதையில் நேரடியாக வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்...ஆனால், அதன் உள்ளர்த்தம்....ஆரிய திராவிடப் போராட்டத்தை வெளிச்சம் போட்டே காண்பிக்கிறது.

நான் வரலாறை சற்று திரும்பிப் பார்க்கிறேன்....

1925ம் ஆண்டு….

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு மேடையிலேயே...

“காங்கிரஸ் கட்சி பார்ப்பனமயமாகிவிட்டது. இங்கே பார்ப்பனத் தலைவர்களின் ஆதிக்கம் வலுத்துவிட்டது. காங்கிரசில் தொடர்ந்து இருப்பதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. கலியாண சுந்தர முதலியார் அவர்களே, நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பிராமணர் அல்லாதோர் நன்மைபெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என்று ஆவேசமாக முழங்கி தனது கைத்தடியால் ஓங்கி மேடையை தட்டிவிட்டு ஆக்ரோஷமாக வெளியேறினாரே தந்தை பெரியார்......

அவர்தான் முதன் முதலில் காங்கிரசை ஆட்டுவிக்கும் ஆரிய பேய்களை அடையாளம் காட்டியவர். அவர்தான் அந்த ஆரிய வெறியர்களிடம் இருந்து திராவிட அரசியலை மீட்கும் வழியை காட்டியவர்.

வெறும் அறிவு இருந்தால் மட்டும் அதனால் பயனில்லை என்பதால், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று போதித்தது அந்த ‘பகுத்தறிவு பகலவன்”.

ஆஹா....எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு.....அங்கிருந்து ஒலிக்கிறதே ஒரு ஆரிய எதிர்ப்புக் குரல். அருமை! அருமை!

அறிவு மானவுனர்சியோடு சிந்தித்ததின் விளைவு இது.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்....ஆனால் இந்த ஆரிய வெறியர்களை...உங்கள் மொழியில் பேராதிக்கப் பேய்களை ஒடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து எடுங்கள்.

ஆரிய வெறியர்களை...பேராதிக்கப் பேய்களை ஒடுக்கும் அழிக்கும் உங்கள் நடவடிக்கைக்கு....

திராவிடராய்...சூத்திரராய்....மானவுணர்ச்சி மிகுந்த பல மானமிகுக்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.


- திராவிடப் புரட்சி

தி.கவின் கொள்கைக்கும் தி.மு.கவின் கொள்கைக்கும் வேறுபாடு உள்ளதா? அறிஞர் அண்ணாவின் விளக்கம்.

(13.11.11 அன்று முகநூலில் பதிந்தது)

தந்தை பெரியாரின் கொள்கைகள் வேறு, அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் வேறு,

திராவிடர் கழகத்தின் கொள்கைகள் வேறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் வேறு,

என்பது போன்ற கருத்துகளை தி.மு.கவினரே பேசும்போது, அதைக்கேட்க வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இந்தக்காலத்தில் கூட, கலைஞரும், பேராசிரியரும் தொடர்ந்து தந்தை பெரியாரின் கொள்கை வழி நடப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், எப்படி இப்படி ஒரு கருத்து பரவுகிறது என்பது புரியவில்லை.

அவரவர் வசதிக்கேற்ப கொள்கையை விளங்கிக்கொள்வதற்கும், விளக்குவதற்கும், திராவிட இயக்க கொள்கை என்பது இராமாயண மகாபாரத புராண கதைகள் அல்ல. ஒரு இனத்தின் அரசியல் வரலாற்றை, போராட்டத்தை, இலக்கை நிர்ணயிக்கும் ஒன்று.

ஆகவே, இது குறித்து தெளிவடைய, அறிஞர் அண்ணா விளக்கியதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்...

“அவரோடு (தந்தை பெரியார்) சேர்ந்து பணிபுரிய முடியாத நிலையிலுள்ள பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப்பேசி ஒரு முடிவு செய்தனர். அதன் முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம்.

திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதவும் கிடையா. இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் (தந்தை பெரியார்) ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்ததுகிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை, வராது. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவரை ஏற்படுத்தவில்லை, அவசியம் என்றும் கருதவில்லை. அந்த நாற்காலியை காலியாகவே வைத்துள்ளோம்.”

“கல்கி பத்திரிக்கை எவ்வளவு தைரியமாக, எவ்வளவு சந்தோஷமாக தீட்டியது.......
.... திராவிடர் கழகத்தினர் தன்னாலேயே அழிந்து விடுவர் என்று ஆருடம் கூறியது. அப்பனே! இது சூத்திரத்தின்மீது கட்டப்பட்ட ஆருடம். ஆசையின் விளைவு, இதை விட்டுவிடு. மரம் அழியவில்லை. இதிலிருந்து ஒட்டு மாஞ்செடி தோன்றியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஓட்டு மாஞ்செடித்தான். மண்வளம் ஏராளம். அதே பூமி. நீர்பாய்ச்ச, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஓட்டு மாஞ்செடி (திராவிடர்) கழகத்துக்கு முரணானது அல்ல, ஒத்த கருத்து கொண்டதே ஓட்டு மாஞ்செடி.”

“பெரியாரே, நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்துச் சிறைச்சாலை செல்லத்தான் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். தொடக்க நாளாகிய இன்றே!”


போதுமா தோழர்களே....அண்ணாவின் இந்த விளக்கம். தவறான கொள்கை மயக்கத்தில் இருந்து விடுபடுங்கள். உயர்த்த திராவிட இயக்க கொள்கையை உயர்த்திப் பிடிப்போம். ஒற்றுமையாய் செயல்படுவோம்.

தி.மு.க என்ன செய்யவேண்டும்?

(20.10.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

தி.மு.க என்ன செய்யவேண்டும்?  

திருச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க முன்னிலை.

முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையட்டும் அது மக்களின் முடிவு.

இனி வருங்காலங்களில் தி.மு.க எப்படி செயல்படவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இனி தேர்தல் அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டுமா? அல்லது கொள்கை அரசியலுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா? என்பது குறித்து சிந்திக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

கடந்த கால வரலாறை சற்று திரும்பி பார்த்தால், வருங்காலதிற்கான வெளிச்சம் கிடைக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தி தேர்தல் நடத்தியபோது, காங்கிரஸ் பங்கேற்கவில்லை. நீதிக்கட்சி பங்கேற்றது வெற்றிபெற்றது. நீதிக்கட்சி படித்தவர்களாலும் பெரியமனிதர்களாலும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக செயல்பட்டது.

காலம் கனிந்த போது, காங்கிரசும் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து. மெல்ல நீதிக்கட்சி அதன் உட்கட்சி பூசல் மற்றும் மக்களிடம் இருந்து விலக்கி இருந்த காரணத்தால், தோல்வியை தழுவ, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

காங்கிரசில் இருந்து கொள்கை காரணமாக பிரிந்த தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தை தேர்தலில் ஈடுபடாத சமுதாய இயக்கமாக நடத்திக்கொண்டிருந்தார். சிதைந்து கொண்டிருந்த நீதிக்கட்சிக்கு தந்தை பெரியார் தலைவராக்கப்பட்டார். தலைவரான தந்தை பெரியார், உலகில் யாரும் எடுக்கத் துணியாத முடிவை எடுத்தார். அதாவது, நீதி கட்சி இனி தேர்தலில் பங்கேற்காது என்று. காங்கிரஸ் எப்படி மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்ததோ அதுபோல, நீதிகட்சியும் மக்களை கொள்கை ரீதியாக தயார்படுத்தும் பணியை செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். நீதிக்கட்சியை, திராவிடர் கழகமாக மாற்றினார்.

தந்தை பெரியாரின் தேர்தலில் பங்கேற்காத முடிவை அன்று இருந்த நீதிகட்சியை சேர்ந்த சிலர் ஏற்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்தது. திராவிடர் கழகம் கொள்கை ரீதியாக சிறப்பாக செயல்பட்டு, மக்கள் மனதில் திராவிடர் என்ற விழிப்புணர்வை, பகுத்தறிவு சிந்தனையை, மொழி உணர்வை, தனித் திராவிட நாடு என்ற உணர்வை  ஏற்படுத்தியது.

இப்படியே, தேர்தலில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல என்ற கருத்தை திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணா உட்பட சிலர், தனி கட்சியை உருவாக்கும் எண்ணத்தில் இருந்தனர். தந்தை பெரியாரும், அக்காலத்தில் இருந்த சொத்துரிமை சட்டங்களை மனதில்கொண்டு, திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகள், தன் காலத்திற்கும் பிறகு செயல்படவேண்டும் என்ற எண்ணத்தில், இயக்கத்திற்கான சொத்தை காப்பாற்றும் வாரிசு தேவை என்பதால், மனியம்மையாரை திருமணம் செய்துகொண்டார். கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்த அண்ணா உட்பட சிலர், இந்த திருமணத்தை காரணம் காட்டி, பிரிந்தனர். (காரணம் இது என அன்று சொன்னாலும், பல ஆணடுகளுக்கு பிறகு, பேராசிரியர் அன்பழகன் அவர்கள், பிரிந்ததற்கான காரணம் ஆட்சியை பிடிப்பதே என்பதே தெரிவித்தார்.)

தி.க, தி.மு.க என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்ட பிறகு, காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரசை தந்தை பெரியார் ஆதரித்தார். தந்தை பெரியாரை பொருத்தவரை, தான் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், தனது கொள்கைகளை ஆட்சியில் இருப்பவர்களை கொண்டு நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார், அது எதிர்ப்பு மூலமாகவோ அல்லது ஆதரவு மூலமாகவோ இருந்தது. இதில் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை தேர்தலில் நிற்கும் ஒன்றைத்தவிர.

தேர்தலில் பங்கேற்ற தி.மு.க, தொடக்கத்தில் எதிர்கட்சியாகத்தான் இருக்க முடிந்தது. அடுத்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரசை தோற்கடித்து, தி.மு.க வென்றது. அண்ணா தலைமையில், ஆட்சியை பிடித்தது. வென்ற அண்ணா, தேர்தலில் தன்னை தந்தை பெரியார் எதிர்த்தாலும், அவரை திருச்சிக்கு சென்று சந்தித்து இந்த ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு அவரது அரசில், முதல் சட்டமாக, தந்தை பெரியாரின் கண்டுபிடிப்பான சுயமரியாதை திருமண முறையை அங்கீகரிக்கும் சட்டத்தை கொண்டுவந்தார். அந்த சட்டத்தை தீர்மானத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பு, தந்தை பெரியாரின் ஒப்புதலுக்கு அந்த வரைவு சட்டத்தை அனுப்பி, அவரது திருத்தத்தை ஏற்று மாற்றி, சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார். அதன்பிறகு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதையே கடமையாக கொண்டு செயல்பட்டது தி.மு.க அரசு.

இதில் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், தேர்தல் வெற்றியை தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கும் அண்ணாவின் செயலுக்கு உண்மையிலேயே நியாயமான காரணம் இருந்தது. காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை, ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியை தோற்கடித்த காங்கிரசை, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த காங்கிரஸ் கட்சியை, தோற்கடிக்க காரணமாக இருந்தது, தந்தை பெரியாரின் கொள்கைகளே. புரட்சிகரமான அந்த கொள்கைகள், திராவிட உணர்வு, திராவிடர்களை இணைத்தது. தமிழக மக்களில் பலருக்கு திராவிட உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான், தி.மு.க வெல்ல முடிந்தது. (இன்றும் அந்த உணர்வாளர்கள் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்).

அண்ணாவின் மறைவிற்கு பிறகும், கலைஞர் தலைமையில் தி.மு.க வென்றபோதும், அந்த உணர்வாளர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருந்தது.

எம்ஜியார் தி.மு.கவை விட்டு பிரிந்தபோதும், அவரது கட்சி முன்னணியினர் பலர் அந்த திராவிடர் இன உணர்வாளர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் தேர்தல் வெற்றி என்பது, கொள்கை சார்ந்ததாக இல்லாமல், தனி மனித கவர்ச்சி சார்ந்ததாக மாறியது.

மக்களாட்சி தத்துவத்தில், ஒரு வெற்றி என்பது கொள்கை அரசியல் மற்றும் தேர்தல் அரசியல் என்ற இரு காரணிகளை கொண்டே அமைகிறது. இதில் கொள்கை அரசியல் முதன்மையாகவும், தேர்தல் அரசியல் இரண்டாவதாகவும் இருப்பதே உலக அளவில் நடைமுறை. கொள்கையை நிறைவேற்றுவதற்காகவே தேர்தல் அரசியலில் ஈடுபடுவது வழக்கம்.

எம்ஜியார் பிரிந்த பிறகு, அதாவது இன்று வரை, தேர்தல் வெற்றி என்பது  கொள்கை அரசியல் முதன்மை என்பதில் இருந்து மாறி, தேர்தல் அரசியலே முதன்மை என்பதாக இருக்கிறது.

தேர்தல் அரசியல் என்பது கீழ்காணும் அடிப்படையில் உள்ளது.

தேர்தல் கூட்டணி
தனிமனித கவர்ச்சி
ஜாதி வாக்குகள்
செலவு செய்யப்படும் பணம்
தேர்தல் பணிகள்
பிரச்சாரம்
பிரசார முறைகள்
சினிமா கவர்ச்சி
கூட்டத்தினரை ஈர்க்கும் பேச்சுத் திறமை
விலைவாசி
அன்றாட மக்கள் பிரச்சனைகள்
நீண்ட கால மக்கள் பிரச்சனைகள்
பத்திரிக்கைகள் செய்தி – பிரச்சாரம்
வானொலி, தொலைகாட்சி செய்தி – பிரச்சாரம்
அனுதாபம்
மாற்றம் வேண்டும் என்ற எண்ணம்
வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. நிரந்தரமானது அல்ல. எனவே தேர்தல் அரசியல் என்பது தற்காலிகமான வெற்றியை தரக்கூடிய ஒன்று. இந்த மாறுதலுக்கு உட்பட கூடிய தற்காலிக வெற்றியை அளிக்க கூடிய தேர்தல் அரசியலை நம்பி ஒரு இயக்கம் செயல்படுவது என்பது சூதாடுவதற்கு சமம். ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு வகையான சூதாட்டமாகவே அமையும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மக்களாட்சியின் அதாவது தேர்தலின் விந்தை என்று சப்பைக்கட்டு காரணங்களை தோற்ற கட்சியினர் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் சூதாட்டத்தில் தோற்றனர் என்பதே உண்மை.

எது நிரந்தரம்? அண்ணா காலத்தில் நடந்ததே.....அது நிரந்தரம். ஆமாம் கொள்கை அரசியல் நிரந்தர வெற்றியை தரக்கூடிய ஒன்று. வெறும் கொள்கை அரசியல் போதுமா என்று கேட்டால் போதாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கொள்கை அரசியல் இல்லாத தேர்தல் அரசியலும் போதாது என்பது.

கொள்கை அரசியல் என்பது, கொள்கை பிரச்சாரம் செய்வதும், கொள்கையை ஏற்றுக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதும் ஆகும். கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த தேர்தலிலும் கொள்கைக்காக வாக்களிப்பார்கள், தேர்தல் அரசியல் அவர்களது வாக்களிக்கும் கட்சியை முடிவு செய்யாது. ஆகவே கொள்கைகாரனமாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை கூட கூட, நல்ல கொள்கையை உடைய கட்சி தொடர்ந்து நிறைய நிரந்தர வாக்களர்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.

கொள்கை அரசியலால் உருவாக்கப்படும் வாக்காளர்கள் நிரந்தரமானவர்கள். தேர்தல் அரசியலால் கிடைக்கும் வாக்களர்கள் தற்காலிகமானவர்கள்.

எனவே கொள்கை அரசியலின் ஒரு பகுதியாக, திராவிட இன உணர்வை, தமிழ் மொழி உணர்வை, பகுத்தறிவு சிந்தனையை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும் அந்த கொள்கையை மக்கள் மனதில் நிரந்தரமாக நிலை பெறச் செய்யும் வகையில், தொய்வில்லாத தொடர் பிரசாரங்களை செய்து, அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் கடமை தி.மு.கவிற்கு உள்ளது.

கொள்கை அரசியல் குறைந்து தேர்தல் அரசியல் அதிகமானதன் விளைவே தி.மு.க தேர்தலில் தோற்றதற்கான காரணம். கொள்கை அரசியலும் தேர்தல் அரசியலும் சரியான விகிதத்தில் இருக்கும்போது, கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

இப்போது தி.மு.க அதன் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்யும் நெருக்கடியில் உள்ளது. சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு, தலைமை துதிபாடும் இழி நிலையில் இருந்து மீண்டு, கொண்ட கொள்கையில் உறுதியாகவும், இருக்கும் இயக்கதிற்கு உண்மையாகவும் இருப்பதுதான், தி.மு.க உறுப்பினர்கள் தி.மு.கவின் வெற்றிக்கும், திராவிட இன வெற்றிக்கும் செய்யும் உண்மையான பங்களிப்பாக இருக்கும்.

நிரந்தர வெற்றிக்கு பாதை வகுப்போம் அதில் வெற்றி நடைபோடுவோம்.


- திராவிடப் புரட்சி

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

(16.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

ஒரு இதழில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் தொடர்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.

நான் எங்க வீட்டு பூஜையறையில் உட்கார்திருக்கேன்.... காலையில் குளிச்சவுடனே வந்து பூஜையறையில் விளக்கேத்தி வச்சுட்டுத்தான் நான் வேற வேலைக்கே போறது வழக்கம். என்னவோ அதுல மனசுக்கு ஒரு நிம்மதி, ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி வரும்....

ஆழ்வார்பேட்டையில் நாங்க குடியிருக்கிற இந்த வீட்டோட பூஜையறையில் அழகான பிள்ளையார் விக்ரகம், பக்கத்திலேயே முருகன் திருவுருவம், லஷ்மி – சரஸ்வதி படங்கள், மேல்மலையனூர் அங்காளம்மன் படம், நடுவே கொஞ்சம் பெரிசா ஷீரடி சாய்பாபா மார்பில் சிலை கூடவே சத்ய சாய்பாபா படம்னு வரிசையா இருக்கும்....

எங்க பூஜையறையில் பிள்ளையார் திருவுருவங்கள்தான் நிறைய இருக்கு... எங்காவது ஊர்களுக்கு போறப்போ, விதவிதமான போஸ்கள்ல இருக்கிற விநாயகரை வாங்கி வந்துடுவேன். இல்லைனா யாராவது வர்றப்போ கிப்ட் பண்ணுவாங்க...இப்படியே நிறைய பிள்ளையார் பொம்மை செர்ந்துடுச்சு௧ இன்னமும் கூட எங்கள் வேளச்சேரி வீட்டில் நிறைய பிள்ளையார் பொம்மைகள் அடுக்கி வச்சிருக்கேன்....

நான் எல்லா பூஜைகளையும் செய்ய முடியலேனாலும், ஒரு சிலது மட்டும் விடாம செய்வேன். இப்போ எங்க வீட்ல..........குழந்தைகள்,.......குழந்தைகள்னு பேரபசங்க இருக்கிறதால் இப்போல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை நல்லா கொண்டாடறோம்.....

மத்தபடி விரதம்னு நான் இருக்கிறது வாரா வாரம் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்குன்னு விரதம் இருப்பேன்... இந்த இரண்டு நாளும்  நான்-வெஜ் சின்ன வயசிலிருந்தே சாப்பிடமாட்டேன்.....

புரட்டாசி முழுக்க நான்-வெஜ் சாபிடாம விரதம் இருப்பேன். மற்றபடி கிருத்திகை விரதமும் இருக்கிறது உண்டு...

சந்தோஷி மாதா விரதம் அடிக்கடி இருப்பேன். அன்னிக்கு புளிப்பு சாப்பிடாம இருக்கனும்....

எம்பொண்ணுக்கு கல்ல்யானமாகி முதல் சில வருஷங்கள் குழந்தை பிறக்கலேன்ன நிலையிலேயும் சந்தோஷிமாதா விரதம் இருதான் வேண்டிகிட்டேன். இப்போ..........இர்ந்ண்டு குழந்தைகள் .......,........பிறந்து சந்தோஷமா இருக்காங்க....

சஷ்டி விரதம் கூட சிலவருஷம் தொடர்ந்து இருந்தேன். கடைசி நாள் வடபழனி கோவிலுக்கு கட்டாயம் போயிடுவேன். வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு அந்த விரதம் இருக்கணும்.....

எனக்கு கல்யாணமாகி சென்னைக்கு குடி வந்தப்புறம் இங்கே நான் அடிக்கடி போற கோயில்னா திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில்தான். நாங்க வேளச்சேரியில் குடியிருந்தபோ, அடிக்கடி மாங்காடு போயிடுவேன்....

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சாய்பாபா கோயில்னு அநேகமா சென்னையில் இருந்த எல்லா கோயிலுக்கும் போயிருக்கேன். இப்போ தி.நகர் பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி போயிடறேன்.....

எந்த குறிப்பிட்ட ஊருக்கு போனா இந்த கோயிலுக்கு போகனும்ன்னு நான் ரொம்ப செண்டிமெண்டா போற கோயில்னு பார்த்தா உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்குத்தான். திருச்சி போறப்போ அந்த கோயிலுக்கு பொய் தரிசனம் பண்ணிட்டு வந்தாதான் எனக்கு திருப்தி....

அதே மாதிரி கன்னியாகுமரி போனா தவறாம சுசீந்திரம் பொய் கட்டாயம் ஆஞ்சநேயரை தரிசனம் பண்ணிட்டு வருவோம். இப்பகூட ஒரு கேப்புல இறங்கி அந்த கோயிலுக்கு போயிட்டு வந்துட்டேன்.

பெரும்பாலும் ஏதாவது வேலையா அந்தந்த ஊர்களுக்கு போறப்போ விசாரிச்சுட்டு பக்கத்தில் இருக்கிற கோயில்களுக்கு போயிட்டு வந்துடுவேன். ஸ்ரீரங்கம், திருச்சி உசிபில்ளையார் கோயில், தூத்துக்குடி பணிய மாதா கோயில், குருவாயூர், பத்மநாபசாமி கோயில்னு எல்லாமே போயிருக்கேன்....

எங்க வீட்டுக்காரங்ககூட மேல்சட்டை எல்லாம் கழட்டிட்டு துண்டு போர்த்திட்டு ஒரு கோயிலுக்கு வந்தாங்க....அது எந்த கோயில்? இவங்க எப்படி அங்க வந்தாங்க? (விவரம் அடுத்த இதழில்)


இந்த கட்டுரையை எழுதியது ஒரு பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல....நம்மினம் அடிமைப்பட்டு கிடந்ததை மறக்காமல், உள்ளிருக்கும் வெறியை அடக்கிக்கொண்டு, தன்னை ஒரு சூத்திரன் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு திராவிடத் தலைவருடைய மருமகளின் கட்டுரை.

ஒருவரின் எழுத்தை அப்படியே பதிந்து அது குறித்து விமர்சனம் செய்யும் இந்த கட்டுரையை எழுதும் முன் பலமுறை சிந்தித்துபார்த்தேன். எழுதத்தான் வேண்டுமா? எழுதினால் என்ன பயன்? இதை எழுத நாம் யார்? விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்காமலா எழுதியிருப்பார்கள்? இப்படியாக குழம்பிய நான், இறுதியில் முடிவெடுத்தேன் எழுதிவிடுவதென்று. காரணம்,

நான் பெரிதும் மதிக்கும் திராவிடத்தலைவரின் குடும்பத்தில் இருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வெளிவரும்போது, அதன் தாக்கம் அந்த தலைவருடைய கட்சியின் அடிமட்ட தொண்டன்வரை இருக்கும் என்பதாலும்,

அந்த கருத்துகள், அந்த தலைவரின் கருத்துக்கு நேர் எதிராக இருப்பதால், பலரிடம் விவாதிக்கவேண்டிய சமாளிக்க வேண்டிய சூழல் அடிமட்ட தொண்டன் வரை இருப்பதாலும்,

அதை விட சில முக்கிய காரணங்கள்...

இதை பற்றிய விமர்சனம் எதிரிகளிடம் இருந்து வருவதற்கு முன் நாமே பதிவோமே என்பதாலும்,

பல இயக்கத்தின் நலன்விரும்பிகள், பெரு மதிப்பின் காரணத்தாலும் அச்சத்தின் காரணத்தாலும் விமர்சிக்க தயங்குவார்கள் என்பதாலும்,

எனக்கு எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாத காரணத்தாலும்,

நானும் இயக்கத்தின் நலன்விரும்பி என்பதாலும்,

நாம் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை விமர்சிக்கப்போவதில்லை, பலரும் அறிந்துகொள்ளும்வண்ணம் வெளியிடப்பட்டுள்ள, விமர்சனத்திற்குள்ளாகும் என்று தெரிந்து எதிர்பார்த்து எழுதிய கட்டுரையை விமர்சிப்பதில் தவறில்லை என்பதாலும்,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும் என்ற வள்ளுவரின் வரிகள் என்னை எழுதத்தூண்டியதாலும் எழுதினேன்.

அந்த ஆன்மீக விளம்பரம் செய்யும் கட்டுரையை படித்தபின் எனக்கு தோன்றியது :

இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் என்ன?

நாங்கள் ஒரு பழுத்த ஆன்மீகவாதிகள் என்று காட்டிக்கொள்வதில் என்ன பயன்?

எங்கள் குடும்பத் தலைவரின் அல்லது இயக்கத் தலைவரின் பகுத்தறிவு கொள்கைக்கும் எங்கள் கொள்கைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வெளிப்படுத்துவது ஏன்?

சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் உள்ளவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் பின்பற்றும் உளவியல் மனப்பாங்கை பற்றி தெரியாதா? முன் ஏர் செல்வதை தொடர்ந்து பின் ஏர் செல்லாதா? நமக்கு இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையை பரப்ப எண்ணம் இல்லாவிட்டாலும், அதற்கு நேர்மாறான மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமான கட்டுரையை எழுதுவது ஏன்?

தலைவர் மேடையில் அமர்ந்துகொண்டு, விநாயகனை வாதாபியில் இருந்து வந்தவர் என்று கிண்டல் செய்வதும், தமிழ் வருட பிறப்பின் ஆபாசங்களை எடுத்து சொல்லும்போதும், ராமாயானத்தை ராமனை கட்டுக்கதை என்று சொல்லும்போதும், மூடநம்பிக்கைகளை கிண்டல் செய்யும்போதும், மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் உங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்?

இந்த ஆன்மீக கட்டுரையை படித்த பிறகு, இனிவருங்காலங்களில், தலைவர் மேடையில் பேசும் பகுத்தறிவு பேச்சை கேட்கும் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இது இயக்கத்தின் கட்டுரை அல்ல ஒரு தனி மனிதரின் கொள்கையை சார்ந்தது என்று வாதிடலாம். ஆனால், தலைமை இடத்தில் இருப்பவர்கள் இயக்கத்தின் அடையாளமாகவே பார்க்கபடுகின்றனர், இதுதான் எதார்த்தம். ஆகவே, கொள்கை என்பது ஊருக்கு மட்டும் உபதேசமாக இருக்கிறது என்று எதிரிகள் எள்ளி நகையாடிவிடக்கூடாது. 

நாங்கள் ஆன்மீகவாதிகள் நாங்கள் பகுத்தறிவுவாதிகள் அல்ல என்று யாருக்கு தரும் சமிங்கை இது?

நாம் பகுத்தறிவுவாதிகள் என்பதால்தான் மற்றவர்கள் குறிப்பாக பார்பனர்கள் மற்றும் பார்ப்பன பத்திரிக்கைகள் எதிர்க்கின்றன என்ற எண்ணமா?

நமது வெற்றி தோல்வியை பார்பனர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்ற அச்சத்தில் அவர்களுடன் செய்துகொள்ளும் சமரசமா?

மாயாவதியின் முறையா? மாயாவதி உத்திரபிரதேசத்தில், பார்பனர்களோடு செய்துகொண்டிருக்கும் சமரசத்திற்கு காரணம் அங்கு பார்ப்பனர்கள் அதிகம் மற்றும் அவர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கவும் செய்கிறது என்பதால், அது தமிழகத்தில் செல்லுமா?

இன்று பகுத்தறிவு கொள்கையை சமரசம் செய்கிறோம்? நாளை இருமொழி கொள்கையையா? நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இந்தி படிக்கிறார்கள் என்று அடுத்த கட்டுரை வெளிவருமா?

ஏற்கனவே தேசிய கொடியை எற்றிவிட்டோம், கொள்கை சமரசம் தொடர்வதை பார்த்தால் நாளை தீபாவளி கொண்டாடுவோமா என்ற அச்சம் இயல்பாக எழுகிறது.

பிறர் கட்டுபடுத்தி அவர்கள் இஷ்டம் போல நம்மை நடக்கவைப்பதும் அடிமைத்தனம்தான், நாம் வேறு வழியில்லாமல் சமரசம் செய்துகொண்டு அவர்கள் இஷ்டம் போல நடந்துகொள்வதும் ஒருவகையான அடிமைத்தனம்தான்.

ரத்தம் சிந்தாமல், ஒரு உயிர் கூட பலியாகாமல், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் மொழி மற்றும் பண்பாட்டை அழித்தால் போதும், அந்த இனம் தானாய் அழிந்துபோகும். இப்படி மொழியையும் பண்பாட்டையும் இழந்ததால் அழிந்த இனங்கள் உலகில் ஏராளம். அதுபோல, ஒரு இயக்கத்தை அழிக்க, அதன் தலைவரை அழிக்க வேண்டியதில்லை, அதன் உறுப்பினர்களை அழிக்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக எளிதாக அதன் கொள்கைகளை அழித்தால் போதும், அந்த இயக்கம் தானாய் அழிந்துபோகும். இப்போது சிந்தித்து பாருங்கள் நாம் செய்வது சரியா என்று?

தொடர்ந்து எதிர்த்துவந்ததை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்வது என்பதும் தோல்வியின் அடையாளம்தான், அடிப்படை கொள்கையில் சமரசம் என்பது அழிவின் தொடக்கம்தான்.

எந்த வெற்றிக்காக இந்த தோல்வி?

கொள்கையை விட்டுக்கொடுத்துதான் வெற்றி பெறவேண்டுமா?

கண்ணை விற்றுத்தான் சித்திரம் வாங்கவேண்டுமா?

- திராவிடப் புரட்சி

எது இந்தி?

(12.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

எது இந்தி?

இந்தியும் உருதுவும் ஒன்றா? இந்தியும் சமஸ்கிருதமும் ஒன்றா?

எனக்கு தெரிந்த வரையில், வட இந்தியாவில் பேசும் இந்தியில், புழக்கத்தில் இருக்கும் இந்தியில், எழுபது சதவிகிதம் உருதுவும், சுமார் முப்பது சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்த இந்திதான் இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் வைக்கும் அனைத்து பெயர்களிலும் புழக்கத்தில் இல்லாத சம்ஸ்கிருத வார்த்தைகளே வைக்கபடுவது ஏன்? அது ஒரு திட்டத்தின் பெயராக இருந்தாலும், நிறுவனத்தின் பெயராக இருந்தாலும், இந்திய அரசு இந்தி என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் வைப்பது ஏன்?

இந்தி அதிகம் புழங்கும் உத்திரபிரதேசத்திலேயே.....நீதிமன்றத்தை, கச்சேரி என்று மக்கள் அழைத்தாலும் பெயர்பலகையில் “நியாயாலை” என்று போடுவது ஏன்? மக்கள் உணவை கானா என்று அழைத்தாலும் போஜன் போஜானாலை போன்ற சொற்கள் ஏன்? இப்படி நான் நூற்றுக்கணக்கான சொற்களை எடுத்துகாட்டாக சொல்லமுடியும்.

அங்கு விளக்கம் கேட்டால்....இந்து தீவிரவாதிகள் சொல்லுகிறார்கள்...அவையெல்லாம் “சுத்த பாஷா” என்று.

அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால் சமஸ்கிருதம் சுத்த பாஷா ஆனால் உருது அசுத்த பாஷா என்று.

இப்போது சொல்லுங்கள் எது இந்தி என்று?     

இப்படி மெல்ல அரசின் உயர்பதவிகளில் அமர்ந்து இருக்கும் பார்ப்பன இந்து தீவிரவாதிகள்.....தங்களது வலைப்பின்னலை சரியாக பின்னி அதில் இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பன தீவிரவாதிகள் இணைந்து....தங்களது வேலையை சரியாக செய்கிறார்கள் என்பதை நானும் என்னைபோன்ற பெரியாரியவாதிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.

தமிழகத்திலும் அந்த சதியை சிறப்பாகவே செய்கிறார்கள் அந்த பார்ப்பனர்கள் தங்களின் வலைபின்னல் கூட்டத்தின் மூலமாக. அதன் விளைவாகத்தான் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை நாகரீகமாக இல்லை என்று சொல்லுகிறார்கள். அதற்கு எத்தனை சினிமாக்கள் பயன்பட்டன...எத்தனை நாவல்கள் பயன்பட்டன...எத்தனை தொடர்கதைகள் பயன்பட்டன...எத்தனை பத்திரிக்கைகள் பயன்பட்டன ……

அறிவில்லா தமிழர்கள்...வெட்கங்கெட்ட தமிழர்கள்....இந்தி என்ற பெயரில் பார்ப்பன மொழி மீது காதல் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வட மொழியில் பெயர் வைக்கின்றனர் அதை நாகரீகம் என்று தவறாக நினைக்கின்றனர்.

கணம் நீதிபதி அவர்களே

(12.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

கணம் நீதிபதி அவர்களே,

தென்னிந்திய பூர்வகுடி மக்களை வரலாற்று ரீதியாக இணைத்து “திராவிடர்கள்” என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ளாத எதிர்கட்சிக்காரர் மருத்துவர், திராவிட கட்சிகளை வேரறுத்து அழிப்பேன் என்று தனது மரம்வெட்டி புத்தியை வெளிபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சிந்தித்து தமிழ்நாட்டையே துண்டாடவேண்டும் என்ற நீண்ட நாள் குறிக்கோளை கொண்டிருப்பவர் இந்த மருத்துவர் என்று பத்திரிக்கைகள் தெரிவிப்பதை வைத்துப்பார்த்தால், அரசியல் சுயநலத்திற்காக எதையும் வெட்டும் இவரது மனநிலை வெளிப்படுகிறது.

இந்நிலையில்,

தென்னிந்திய மக்களின் வாழ்க்கையை பலகூறுகளாக ஆராய்ச்சி செய்த திரு.எட்கர் தர்ஸ்டன் அவர்கள், 1909ம் ஆண்டு ஆதாரத்தின் அடிப்படையில் எழுதியுள்ள நூலின் படி,

வன்னிய குல சத்திரியர் என்பது பள்ளியருக்கான மற்றுமொரு பெயர் என்றும். இவர்கள் அக்னி குல சத்திரியர் என்று தங்களை கூறிக்கொள்கின்றனர் என்றும்,

வன்னியர் என்பது பள்ளி சாதிக்கான மற்றுமொரு பெயர் என்றும், அம்பலகாரன், வலையன் சாதிகளின் உட்பிரிவு என்றும், மறவர் சிலர் வன்னியன் என்றும் வன்னிக்குடி என்றும் வழங்கபடுகின்றனர் என்றும், தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த இருளர் தங்களை தேன் வன்னியர் என்று கூறிக்கொள்கின்றனர் என்றும் தெரியவருகிறது.

மேலும் தற்காலத்தில் கூட,

சென்னையில் தங்களை நாயக்கர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும், சென்னையில் இருந்து 250 கி.மீ தள்ளி வாழும் படையாச்சி என்று சொல்லிக்கொள்ளும் மக்களுக்கும் எந்த வித திருமண உறவும் இல்லாத நிலையில், இப்படி பல பிரிவு மக்களை ஒன்றிணைத்து “வன்னியர்” என்று பொதுமைபடுத்தி வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட சிலரின் அரசியல் சுயலாபத்திற்கே பயன்படுகிறது.  ஜாதிகட்சியாக தொடக்கி அரசியல் கட்சியாக மாறியிருக்கும் சிலவற்றை வைத்தே நாம் இதை உணர்ந்துகொள்ளமுடியும்.

எனவே கணம் நீதிபதி அவர்களே,

பல பிரிவுகளாக உள்ள தென்னிந்திய மக்களை பொதுமைபடுத்தி திராவிடர்கள் என்று அழைப்பது தவறென்ற எதிர்கட்சிக்காரர் திரு.மரம் வெட்டி மருத்துவர் அவர்களின் கோட்பாட்டை நாங்கள் எற்றுகொள்ளாவிட்டாலும், அவரது கருத்துப்படி பல பிரிவுகளை ஒன்றாய் பொதுமைபடுத்தமுடியாது என்ற அடிப்படையில்,

தமிழ்நாட்டின் இறையாண்மையை காக்கும் நடவடிக்கையாக,

பல பிரிவுகளாக இருந்த மக்களை இணைத்து “வன்னியர்” என்று பொதுமைபடுத்தி அழைப்பது இனி செல்லாது என்றும், அவர்கள் தனித்தனியாக பிரிந்து அவர்களின் சமூக அரசியல் உரிமைகளை சுயமாக சுதந்திரமாக பெறவும் ஏற்ற வகையில் தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அதைவிட சிறப்பாக, மனித குல மாண்பை உயர்த்தும் வண்ணம், அனைத்து ஜாதி பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் வகையில், இனி தமிழகத்தில் ஜாதி பிரிவுகளே இருக்ககூடாது என்றும், ஜாதி அடையாளங்களே இருக்க கூடாது என்றும், ஜாதி பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது என்றும், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த பெயர்கள் தடை செய்யப்பட்டு பத்திரிக்கைகள் உட்பட எந்த வகையிலும் பிரசுரிக்க கூடாது என்றும், அனைவரையும் ஒன்றிணைத்து, திராவிட இனத்தின் உட்பிரிவான  “தமிழர்” என்று அழைக்க வேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.              

அணு உலைகள் பாதுகாப்பானதா? தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அதற்கு வக்காலத்து வாங்குவது சரியா?

அணு உலைகள் பாதுகாப்பானதா? தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அதற்கு வக்காலத்து வாங்குவது சரியா?  (18.09.11 அன்று முகநூலில் பதிந்தது)

இந்தியாவின் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மே.வங்காளம், ஒரிசா, ஆந்திரா ஆகியவற்றில், இந்தியாவின் அணு அறிவியலின் தந்தையான ஹோமி பாபா, தன்னுடைய சொந்த கிராமமான மகாராஷ்ட்ராவில் உள்ள தாராப்பூரில், இந்தியாவின் முதல் அணு உலையை அமைத்தார், அது அமெரிக்க தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. அதற்கு பிறகு தமிழ்நாட்டில் (ரஷிய தொழில்நுட்பம்) இன்ன பிற மாநிலங்களில் அமைக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.

பயன்பாட்டில் உள்ளவை / கட்டப்பட்டு வருபவை / வருங்கால திட்டம் :   

உத்திரபிரதேசம்:
நரோரா அணுமின் நிலையம்:
220 X 2 – 440 MW பயன்பாட்டில் உள்ளது.

குஜராத்;
கக்ராபூர் அணுமின் நிலையம்:
220 X 2 – 440 MW பயன்பாட்டில் உள்ளது.
640 X 2 – 1280 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

ராஜஸ்தான்:
ரவத்பாட்டா அணுமின் நிலையம்:
100 X1 / 200 X 1 / 220 X 4 – 1180 MW பயன்பாட்டில் உள்ளது.
640 X 2 – 1280 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

கர்நாடகா:
கைகா அணுமின் நிலையம்:
220 X 3 – 660 MW பயன்பாட்டில் உள்ளது.
220 X 1 – 220 MW  கட்டுமான நிலையில் உள்ளது
1000 X 1 / 1500 X 1  –  2500 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

தமிழ்நாடு:
கல்பாக்கம் அணுமின் நிலையம்:
220 X 1 – 220 MW பயன்பாட்டில் உள்ளது.
500 X 1 – 500 MW  கட்டுமான நிலையில் உள்ளது

தமிழ்நாடு:
கூடன்குளம் அணுமின் நிலையம்:
1000 X 2 – 2000 MW  கட்டுமான நிலையில் உள்ளது
1200 X 2 –  2400 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா:
தாராபூர் அணுமின் நிலையம்:
160 X 2 – 320 MW பயன்பாட்டில் உள்ளது
540 X 2 – 1080 MW பயன்பாட்டில் உள்ளது

மகாராஷ்டிரா:
 ஜைத்தாபூர் அணுமின் நிலையம்
1600 X 4  –  6400 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

இது தவிர மூன்று அறிவிக்கப்படாத இடங்களில் 4860 MW  அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளது.


மேலே தந்துள்ள விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில்தான் அதிக அணு உலைகள் அமைக்கபடுவது தெரிய வருகிறது.

இந்நிலையில், அணு அறிவியல் அறிஞர்கள் இந்த உலைகள் எல்லாம் பாதுகாப்பானவை, உயரிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டவை என்றெல்லாம் சொல்லுகின்றனர். அணு அறிவியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் போல நமது தமிழக அரசியல்வாதிகளும் மிகவும் பாதுகாப்பானது என்று பேசுகின்றனர்.

பாமரனான எனக்கு சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உதிக்கின்றன...
நம்மை விட சொல்லப்போனால் நமக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்தந்த ரஷியாவில் செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது எப்படி?
நம்மை விட தொழிநுட்பம் மற்றும் தர கட்டுபாட்டில் சிறந்து விளங்கும் ஜப்பானில் அணு உலை பாதிக்கப்பட்டு கசிவு ஏற்பட்டது எப்படி?
மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லும் நம் அறிவியல் அறிஞர்கள் விடும் ராக்கெட்டுகள் / செயற்கை கோள்கள் தொழில்நுட்ப தவறின் காரணமாக வெடித்து சிதறுவது எப்படி?
இதையெல்லாம் விட, ஒவ்வொரு அணு உலை அமைந்திருக்கும் இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அணு உலை அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி (EVACUATION DRILL)  மொத்தமாக மக்களை வெளியேற்றும் ஒத்திகை நடத்தபடுவது ஏன்? மிகவும் பாதுகாப்பான அணு உலை என்ற நம்பகத்தன்மை இருக்கும்போது இந்த ஒத்திகைகளுக்கான தேவை என்ன?
எதற்கு தென்னிந்திய பகுதிகளான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மட்டும் அதிக அணு உலைகள் அமைக்கப்படுகிறது?

நாம் மட்டும் ஏன்?????? என்ற கேள்விக்கு பதில்....எங்கு அரசியல் ரீதியாக பலம் குறைவாக இருக்கிறதோ அங்கு கேட்பதற்கு நாதியில்லை என்ற நிலையே உள்ளது. நமது அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள பகைமையை வெகு எளிதாக தேசிய கட்சிகள் மற்றும் மத்திய அரசு பயன்படுத்திக்கொள்கிறது. நமது ஒற்றுமையின்மை....நமது மிக பெரிய பலகீனம்.

தமிழ்நாட்டை ஆளும் பெரிய கட்சிகள் இரண்டையும், எதோ ஒரு வகையில் அடக்கும் அல்லது கட்டுபடுத்தும் வழிமுறைகளை மத்திய அரசு அல்லது மத்திய அரசின் அதிகாரிகள் தெரிந்து வைத்துள்ளனர்.

அன்று தி.மு.க ஆண்டது. நாடாளுமன்றத்தில் கனிமொழி அணு உலைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார், பிரதமரும் இரசித்து கேட்டார் என்று செய்திகள் வேறு.

இன்று அ.தி.மு.க ஆள்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை பாதுகாப்பானது என்று தேர்ந்த அணுத் தொழில்நுட்ப அறிஞர் போல சொல்லுகிறார்.

நாளை...யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலை தொடரும்.....மத்திய அரசின் கைபாவையாக தமிழக அரசியல் கட்சிகள் / தமிழக அரசு ஆட்டுவிக்கப்படுகின்றன.

நமது சுயமரியாதையை காப்பாற்ற தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத வரையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆசையை தமிழக அரசியல் கட்சிகள் விட்டுவிடவேண்டும். தேசிய கட்சிகளோடு கூட்டணி உறவுகளை தவிர்க்கவேண்டும். அப்போதுதான், நாம் நமது மாநில நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படமுடியும்.


- திராவிடப் புரட்சி

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதியின் பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதியின் பிறந்தநாள் (17.09.11 அன்று முகநூலில் பதிந்தது)

நான்
கற்ற கல்வி,
பெற்ற அறிவு,
ஈட்டும் பொருள்,
வாழும் வாழ்க்கை,
என்னுடைய,
பகுத்தறிவு சிந்தனை,
சமூக பொறுப்பு,
தனி மனித ஒழுக்கம்,
பொதுநல நோக்கம்
இவை அனைத்திற்கும்...
எதோ ஒரு வகையில்
காரணமாய் அமைந்துள்ளவர்
தந்தை பெரியார்.
அவரது பிறந்தநாளில்,
அவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.
அவர் வழியில்,
இந்த சமூகத்திற்காக உழைப்பேன்
என உறுதி ஏற்கிறேன்.
- திராவிடப் புரட்சி  

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு.

கருணை காட்ட விரும்பாத ஜெயலலிதா சட்டமன்றத்தில் தி.மு.கவை நோக்கி திசை திருப்பும் பேச்சு. (29.08.11 அன்று முகநூலில் பதிந்தது)

மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினிக்கு தூக்குதண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டதற்கு காரணம் கலைஞரால் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது உண்மை அதற்காக இன்றும் அவரை பாராட்டவேண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

அன்று ஒருவருக்கு வழங்கப்பட்ட கருணையே இன்று மற்ற மூவருக்கும் வழங்குங்கள் என்று கேட்பதற்கு முகாந்திரத்தை வழங்கி இருக்கிறது.

ஒருவேளை அன்று நால்வருக்கு அதே அமைச்சரவை கருணை காட்ட பரிந்துரை செய்திருந்தால், நால்வருக்கும் சேர்ந்து அந்த கோரிக்கை மறுக்கபடுவதற்கு வாய்ப்பிருந்தது.

நால்வருக்கும் தண்டனை குறைப்புக்கு பரிந்துரை செய்திருந்தால், மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க ராஜீவை கொன்றது அதுவே அந்த குற்றவாளிகளை தப்பிக்கவைக்கிறது என்று கூசாமல் ஜெயலலிதா பேசியிருப்பார்.

ஜெயலலிதா இந்த மூவருக்கும் கருனைகாட்டமாட்டார் அவர் குணம் அப்படித்தான் என்பது உண்மையான திராவிட இனஉணர்வாளர்கள், அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்.

ஈவு இரக்கமற்ற அந்த பெண்மணியின் அறிக்கை 23.10.2008  அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்டது.

நளினிக்கு கலைஞரால் கருணை காட்டப்பட்டது என்ற உண்மை தெரியாத ஜெயலலிதா அந்த அறிக்கையின் ஒருபகுதியில்  கூறியிருப்பதாவது....

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி போய் பார்க்கலாமா? எது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆறஅம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”  இவ்வாறு செல்கிறது அறிக்கை.


கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்ற கருணையற்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தி.மு.கவை கைகாட்டும் உச்சிகுடுமி சானக்கியதனத்தை காட்டியிருக்கிறார். தனது அரசால் முடியாது என்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டும் ஜெயலலிதா, குறைந்த பட்சம் ஒரு கட்சியின் தலைவியாக தார்மீக அடிப்படையில் இந்த மரணதண்டனைக்கு எதிராக கருத்தை கருணையோடு தெரிவிப்பதற்குமா சட்டவிதிகள் தடுக்கின்றன???!!!

இத்தனைக்கும் பிறகு அந்த பரிதாபத்திற்குரிய தாயார் அற்புதம் அம்மையார்.”அம்மா என் மகனை காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுகிறார். இளைஞர்கள் இன உணர்வாளர்கள் போராடுகிறார்கள், ஒருவர் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார், தமிழக மக்கள் அனைவரும் அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகிவிட போகிறது என முனுமுனுக்கிறார்கள்.

இன்னமும் கூலிக்கு மாரடிப்பவராய், ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு துறையை குத்தகை எடுத்தவராய், சீமான் கலைஞரை குற்றம் சாட்டி அறிக்கை விடுகிறார். ஜெயலலிதா சீமான் இருவரின் நோக்கங்களை இந்த கட்டுரை தகர்க்கும் என்று நம்புகிறேன்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. நேரு உட்பட பலர் காந்தியை சந்தித்து மூவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைக்க சொன்னபோது, அவர்கள் அகிம்ஸா தர்மத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி மறுத்துவிட்டார். உயிரை காக்கும் வாய்பிருந்தும் சொந்த புகழை காக்க முயன்ற காந்தி, ஆங்கிலேய அரசோடு சேர்ந்து குற்றம் சாட்டபடவேண்டியவர் விடுதலை பெற்ற இந்தியாவில். அதுபோன்ற வரலாற்று தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்துவிடக்கூடாது.


இந்த கட்டுரையை ஒரு வேகத்தில் எழுதினாலும்.........

ஒரு தமிழனாய் என் மாநில முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்....தமிழர்கள்...பெரும்பான்மையினோர் விருப்பத்தை...வேதனையை உணர்ந்து தயவுசெய்து இந்த மூவரையும் மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சியையும் எடுங்கள்...உங்கள் ஆதரவை தாருங்கள் என மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.... இதற்கு உங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை...கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் தாயே....


- திராவிடப் புரட்சி