Monday 20 June 2011

ஆங்கிலம் கலந்து பேசும் மேதாவிகள் மொழி ஊனமுற்றவர்கள்

எனக்கு தெரிந்த வரையில் ஹிந்து நாளிதழை வைத்துக்கொண்டு சுற்றி வருபவரில், தினமும் ஹிந்து போன்ற ஆங்கில நாளிதழ் வாங்கும் தமிழர்களில் அதை முழுமையாக படித்து புரிந்துகொள்ள தெரியாதவர்கள் 98% இருப்பார்கள். ஆனாலும் ஆங்கில நாளிதழ் வாங்கி படிப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை.


சிலர் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுவதும் உண்டு ஆங்கிலம் நன்றாக கற்றுகொள்ள “ஹிந்து பேப்பர் வாங்கி படி” எப்படி சொல்லுபவர்கள் அதிகம். எனக்கு தெரிந்து நன்றாக படித்து பட்டம் பெற்ற பலரும், நல்ல நிலையில் உள்ள பலரும் பேசும் ஆங்கிலம் அணைத்து வகையான இலக்கண பிழைகளோடுதான் இருக்கிறது. கேட்பவனுக்கும் பேசுபவனுக்கும் உண்மையிலேயே முழுமையாக இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசத்தெரியாத காரணத்தால், இந்த உண்மை அதிகமாக வெளியே தெரிவதில்லை.

இதில் சிலர் சொல்லி தருவது என்னவென்றால், ஆங்கிலம் கற்றுகொள்ள வேண்டுமென்றால் “தப்பு தப்பாவாது பேச தொடங்குங்கள் அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச வரும்” என்பது. இப்படி எல்லாம் அயல் மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நம்மவர்கள் தாங்கள் பேசும் தங்களின் தாய்மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தராததனால், இன்று பல பேர் முழுமையாக ஆங்கிலமும் பேச தெரியாமல், முழுமையாக தமிழும் பேச தெரியாமல், இரண்டு மொழி வார்தைகளையும் கலந்து, போதாகுறைக்கு கொஞ்சம் சமஸ்கிருத வார்த்தைகளையும் கலந்து பேசி,  எந்த ஒரு மொழியையும் முழுமையாக பேச தெரியாத ஒரு புதிய விசித்திரமான மனித பிரிவாக மாறி வருகிறார்கள். இவர்களின் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு சதவிகிதம் அவர்கள் கற்றுகொண்ட ஆங்கிலத்தின் அளவுகளை பொறுத்து மாறுபடுகிறது.



இப்படி பட்ட விசித்திர பிரிவினரை அவர்களின் மொழிகுறைபாட்டை எப்படி அழைக்கலாம்? “மொழிஊனம்” என்றும் “மொழி ஊனமுற்றவர்கள்” என்று அழைக்கலாம்.

ஒரு கால் ஊனமுற்றவர்கள், ஒருகாலால் நடக்கமுடியாது என்பதால், அதற்காக ஒரு கட்டையை துனையாககொண்டு தாங்கி நடப்பார்கள். இவ்வாறு ஒரு மொழியில் பேச முடியாதவர்கள் மற்றொரு மொழியின் துனையைகொண்டு (கட்டையின் துணையை போன்று) பேசுவதால், அவர்களை மொழி ஊனமுற்றவர்கள் என்று தாராளமாய் அழைக்கலாம்.

இந்த மொழிஊனமுற்றவர்கள், தங்களுக்கு சொந்தமான இரண்டு கால்களில் நடப்பவர்களை, அதாவது தங்களின் தாய் மொழியான தமிழிலேயே பேசுபவர்களை (வேறு மொழி தெரியாதவர்கள் மற்றும் தமிழிலேயே பேச வேண்டும் என்று நினைப்பவர்கள்), கிண்டல் செய்வது எந்த வகையில் சரி? இவர்களின் ஊனத்தை மறைத்துகொண்டு அல்லது அதை பெரிதுபடுத்தாமல்  அடுத்தவர்களை கிண்டல் செய்வது நகைசுவையிலும் நகைச்சுவை.

No comments:

Post a Comment