Friday 24 June 2011

குருகுல கல்வியாளர்கள் சமச்சீர் கல்வியை ஆராய்வதா???!!!

உயர்ஜாதியினருக்கு மட்டும் அறிவுபுகட்டவேண்டும், மற்றவர்கள் எல்லாம் அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும். பிறப்பிலேயே இன்னார் இன்ன அறிவை மட்டும்தான் பெறமுடியும் என்ற நிலையில், உயர்ஜாதியினருக்கு மட்டும்  அறிவை புகட்டுவதற்காக குருகுலகல்வி இருந்தது.
இந்த பாரபட்சமான கல்விமுறையை முதலில் ஒதுக்கி, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கும் சமமான கல்வி அளிக்கும் வழக்கத்தை முதன்முதலில் இந்தியாவில் தொடங்கியது கிருத்துவ தொண்டு நிறுவனங்கள். குருகுல கல்வியை ஒழித்து எல்லோருக்கும் சமமான கல்வியை மட்டுமல்ல, இன்றைய நவீன கல்வி முறைகளை அறிமுகபடுத்தியதும் கிருத்துவ கல்வியாளர்களே. நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கல்விப்பணி ஆற்றிவரும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பல தமிழகத்தில் உள்ளன. உயர்ஜாதியை சேர்ந்த பல மாமா மாமிகள் இந்த நிறுவங்களில் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று அறிவு பெற்றவர்களே.
இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கபட்டுள்ள சமச்சீர் கல்வியை ஆராயும் குழுவில், தொடர்ந்து பாரபட்சம் இல்லாமல், ஏழை எளிய மக்களுக்கும் கல்வி வழங்கும் கிருத்துவ கல்வியாளர்களை சேர்க்காமல், குருகுல கல்வியாளர்களை சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்?
இந்த குருகுல கல்வியாளர்கள் நடத்தும் பள்ளிகளில், உயர்ஜாதி மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அதிகம் படிப்பதும், அங்கு உயர்ஜாதியை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக அதிகம் இருப்பதும், அங்கு உயர்ஜாதி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வதும் பலரும் அறிந்த உண்மை. 
பலகோடி மக்கள்தொகைகொண்ட தமிழகத்தில், பல கல்வி நிறுவங்களும், பல்கலைக்கழகங்களும், திறமையான கல்வியாளர்களும் அதிகம் நிறைந்த தமிழகத்தில், குறிப்பிட்ட உயர்ஜாதியை சேர்ந்த குருகுல கல்வியாளர்களை மட்டும் குழுவில் இணைத்திருப்பது என்பது, மற்றவர்களைவிட இந்த உயர்ஜாதியினரே அறிவில் சிறந்தவர்கள் என சித்தரிக்க முயல்வதும், குருகுலகல்வியாளர்களின் மறைமுக எண்ணங்களை அரசுவாயிலாக செயல்படுத்த முயல்வதுமான செயலாகும்.
குருகுலகல்வியாளர்களை நீக்கிவிட்டு, அனைவருக்கும் பொதுவான, மெத்த படித்த, அனுபவம் வாய்ந்த, துணைவேந்தர் போன்ற பொறுப்பில் இருந்த, திறமையான கல்வியாளர்களை குழுவில் இடம்பெறவைக்க, அனைத்துமட்டதிலிருந்தும் குரல் எழுப்பவேண்டும்.     

No comments:

Post a Comment