Monday 20 June 2011

தன்னை இந்து என தவறாக கருதிகொண்டிருக்கும் மற்றும் இந்து மதத்திற்கு வக்கலாத்து வாங்கும் திராவிடர்களுக்கு

அச்சம் அறியாமை என்ற வலுவான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய கோபுரம்தான் கடவுள் நம்பிக்கை.

அச்சத்தையும் அறியாமையையும் போக்குவதற்காக செயல்படுபவர்கள் பகுத்தறிவு பிரசாரம் செய்பவர்கள்.

அச்சத்தையும் அறியாமையையும் வலுகுன்றாமல் வைதிருக்க முயற்சிப்பவர்கள் ஆன்மீக பிரச்சாரகர்கள்.

நம்பிக்கை என்ற பெயரில் இருக்கும் மூடநம்பிக்கை என்பது அடுத்தவர்களின் ஆன்மீக கருத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுகொள்ளும் சிந்தனை சோம்பேறிகளின் வார்த்தை. 

அச்சத்தையும் அறியாமையையும் அசைத்து பார்க்க முயலும், அழிக்க முயலும் பகுத்தறிவுவாதிகளை, நாஸ்திகர்கள் (நாத்திகர்கள்) என்று ஆஸ்திகர்கள் அதாவது ஆத்திகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.   

இவ்வாறு அனைத்து மதங்களிலும் அச்சத்தையும் அறியாமையையும் பயன்படுத்தி மதநிறுவனங்களும் அதன் பிரசாரங்களும் திறம்பட நடந்து வருகின்றன. போதாகுறைக்கு, ஒவ்வொரு தனி மனிதனும், எந்த பொருள் ஆதாயமும் இல்லாமல், தன்னால் முடிந்தவரை கடவுள் நம்பிக்கையையும் மதபெருமையையும் சந்தைபடுத்திவருகிறார்கள்.

இந்தியாவிலுள்ள பகுத்தறிவுவாதிகள், பெரும்பான்மையினோர் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதனாலும் (மத நம்பிக்கையற்றவர்கள் என ஒரு தனிப்பிரிவு பட்டியலில் இல்லாத காரணத்தால்), இந்தியாவின் பெரும்பான்மையான மதம் இந்துமதம் என்பதாலும், மேலும் இந்துமதம் மற்ற மதத்தைவிட கொடுமையான சாதி பிரிவை தன்னகத்தே கொண்டுள்ளதாலும், இந்துமதத்தை அதன் போலித்தனங்களை, மூடநம்பிக்கைகளை, அதன் கொடுமைகளை, அதன் சாமியார்களின் பித்தலாட்டங்களை குறை சொல்லி பிரச்சாரம் செய்வது இயல்பானதே.


இவ்வாறு பிரச்சாரம் செய்வதற்கு சரியான பதில் தர கையாலாகாதவர்கள், இந்தியாவின் தலைச்சிறந்த பகுத்தறிவுவாதியான தந்தை பெரியாரை தரக்குறைவாக பேசுவது என்ற தங்களின் கீழான புத்தியை வெளிகாட்டுகிறார்கள். தந்தை பெரியார், சமூகத்திற்காக, அதன் நலத்திற்காக சிந்தித்து செயலாற்றினார், அவர் மொத்த சமூக அவலங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஒரு சேர தாக்கி பிரச்சாரம் செய்தார், அவர் கடவுள் கதைகளையும் அதன் கதாநாயகர்களையும் தாக்கி பேசினார், அதுவும் மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பதற்காக, ஆனால் அவர் என்றும் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டதில்லை, அதன் காரணமாகத்தான் இறுதிவரை நாதிகராய் இருந்த அவரை,  அவரது அரசியல் சமூக எதிரியாக இருந்த ராஜாஜி அவரது இறுதிவரை நண்பராக இருக்க முடிந்தது. அப்பேற்பட்ட ஒரு கண்ணியவானை இன்று சிலர் மதபோதையின் காரணமாக தரக்குறைவாக பேசுவது அவர்களது அறியாமையை மட்டும் வெளிபடுத்தவில்லை அவர்களது இழிவான குணத்தையும் வெளிபடுத்துகிறது.


மேலும், இவ்வாறு இந்துமதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் கேட்கும் ஒரு கேள்வி : இந்து மதத்தையும் அதன் சாமியார்களையும் எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் மற்ற மதங்களை இந்த அளவுக்கு தீவிரமாக எதிர்பதில்லை? என்பதுதான்.

பகுத்தறிவுவாதிகளை பொருத்தவரை, இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவுவாதிகளின் தெளிவான கொள்கை “கடவுள் இல்லை” , “கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதுதான். இதில் இந்து கடவுள் , இசுலாமிய கடவுள், கிருதுவ கடவுள் அந்த கடவுள் இந்த கடவுள் என்றெல்லாம் பிரிவுகள் கிடையாது. ஆனால் மதம் என்று வருகையிலே உலகின் அந்தந்த பகுதியில் உள்ள பகுத்தறிவுவாதிகள் தங்களின் பகுதியில் உள்ள பெரும்பான்மையான மதத்தை அதன் மூடநம்பிக்கையை எதிர்ப்பது வழக்கமானது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பகுத்தறிவுவாதிகள் இந்துமதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதில்லை ஆனால் அங்குள்ள பெரும்பான்மை மதமான இசுலாமிய கிருத்துவ மதத்தை எதிர்கிறார்கள். அவ்வாறே இந்தியாவில் உள்ள பகுத்தறிவுவாதிகள் இங்கு இந்து மதத்தை எதிர்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள இந்து மத தீவிரவாதிகள் கேட்பதுபோல அந்த நாடுகளில் மற்ற மதங்களை ஏன் எதிர்க்க வில்லை என கேட்பதில்லை. அகவே அவர்களுக்கான பதில் : உங்கள் மதத்தை சேர்ந்த ஒருவர், உங்கள் மதத்தின் அதன் சாமியார்களின் குறைகளை சொன்னால், அதற்கு பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் குறைபட்டுகொண்டால், அடுத்தவீட்டுகாரனிடம் கேள் எதிர்த்தவீட்டுகாரனிடம் கேள் என்றா சொல்லுவீர்கள்? இதெல்லாம் ஒரு எதிர்வாதமா? பதில் அளிக்க திராணி இல்லாத இந்து தீவிரவாத கூட்டம், என்று தனது குறைகளை பற்றி கவலைபட்டு திருந்தி மற்ற மதங்களை குறை சொல்லுவதை நிறுத்தபோகிறது?


திராவிடர்களாகிய எங்களை எப்படி இந்துக்கள் என்று பொதுமைபடுத்தி இருக்கிறார்களோ, அவ்வாறே சித்தர்களையும்  இந்து மத வட்டத்தினுள் இழுத்து விட்டுவிட்டார்கள். திராவிட தமிழர்களே, குறிப்பாக பெரியாரை எதிர்ப்பவர்களே, பகுத்தறிவுவாதிகளை எதிர்பவர்களே, கீழே வரும் சித்தர் பாடல்கள் உங்களுக்கு ஒரு சிறிய வெளிச்சத்தை காட்டும் என நம்புகிறேன்.


ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்ததுமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிகிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லமே?

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முனமுனேன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகான்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
எது பூசை கொண்டதோ இன்னதேன்றரியுமோ



"பாலில்லா   சேய்கள், பசி, பிணியாளர்
பல்துயர் பெறுமின்   நாட்டில்
பாலோடு தயிர், நெய், கணி, சுவைபாகு
பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணி வார்தம் நோய்யையே  நிரப்ப
நுழைத்த கல் உருவின் முன்படைத்தே
சாலவும் மகிழ்வார் இது கொலோ சமயம்?
சழகினுங்  கழலுமென்  நெஞ்சே "


வகைக் குளங்கள் பேசியே
வழக்குரைக்கும் மாந்தர்காள்,
தொகைகுலங்கள் ஆன நேர்மை
நாடியே உணர்ந்த பின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே
வேறு ஒன்று கண்டீலர்
நகைக்குமாறு மனு எரிக்க
நாளும் நாளும் கூடுவீர்


சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார்
சாத்திரத்தை சுட்டெரித்தாலவனே சித்தன்

சாத்திரத்தைசுட்டு சதுர மறையை பொய்யாக்கி
சூத்திரத்தை கண்ட துயர் அறுப்பது எக்காலம்


சதுர்வேதம், அறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புரானகளை சாற்றும் ஆகமம்
விதவிதமான வானவேறு நூல்களும்
வீணான நூல்களே என ஆடு பாம்பே


தத்துவ குப்பையை தள்ளுங்கடி
வேத சாத்திர போத்தலை மூடுங்கடி


தயங்காமல் பிழைப்பதற்கே இந்தஞானம்
சார்வாக பாராட்டும் ஞானம் வேறே
மயங்குவதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
மாட்டினார் கதை காவ்ய புரானமென்றும்
இயலான ரசதனலிப் புகுந்தால் போலும்
இசைத்திட்டார் சாதிரங்களாறேதான்
வயலான பயன்பெறவே வியாசர்தாமும்
மாட்டினார் சிவனாருத்திரவினாலே

உத்தரமிப்படியே புரானங்கட்டி
உலகத்தில் பாரதம் போல் கதையைகட்டி


கர்தாவை தானென்று தொனவொட்டாக்

கபட நாடகமாக மேதஞ்ச்செர்த்துச்
சத்தாக வழியாகச் செர்ந்தோர்க் கேல்லாஞ்
சதியுடனே வேகுதர்க்கம் பொருள் போற்பாடிப்
பத்தாக சைவர்க் கொப்பனையும் செய்து
பாடினார் சாத்திரத்தை பாடினாரே!


சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப்பிரிவினிலே விளையாடுவோம்


வேண்டாத மனையில் உறவுசெய்வோம்




பறச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் புகுந்து பாரும் உம்முளே


கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்து போன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ, உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவது அழிவது இல்லை இல்லை இல்லையே


இவ்வாறு பல பாடல்கள் சித்தர்கள் இயற்றியுள்ளனர். அவர்களின் குரல் பகுத்தறிவுவாதிகளாகிய எங்களின் குரல்கள் போலவே ஒலிப்பதை காணுங்கள்.

சித்தர்களின் ஆன்மீக பாடல்களை மட்டும் சொல்லி, அவர்களையும் இந்து சாமியார்களாக்கி,  உங்களை பெருமைப்பட வைக்கும் செயலை திறம்பட ஆன்மீக திரிபுவாதிகள் செய்துள்ளார்கள்.    திராவிடர்களான நம் சித்தர்கள் அறிவுள்ளவர்கள் என நீங்கள் நம்பினால், மேற்கண்ட பாடல்களையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.


பார்ப்பன மதமான இந்துமத, அதன் முக்கிய சட்டமான மனுதர்மசட்டத்தின் (நம்மை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்டுவித்த சட்டம்) படி சூத்திரர்கள் ( சூத்திரர்கள என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே என தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் நண்பர்களே – பார்பனர் தவிர அனைவரும் சூத்திரர்களே) என்பவர்கள் “தேவிடியா மகன்” அல்லது “தேவிடியா மகள்” என பொருள். ஆகவே இந்துமதத்தை எற்றுகொள்வது என்பது, தங்களை இந்த பொருளில் அழைத்துக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சமம்.


வேதம், சனாதன தர்மம், மனுதர்மம் போன்றவை இந்து மதத்திற்கு அதாவது பார்ப்பன மதத்திற்கு சம்பந்தமே இல்லை என கூறும் முட்டாள் திராவிடர்களிடம் பேசி பயனில்லை என்பது நான் அறிந்த உண்மை. அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தங்களை தேவிடியாமகன் என்று மதங்கள் சொன்னாலும், சமூக ஏற்றத்தாழ்வை பற்றி கவலைப்படாமல், இன்று நம் வயித்திற்கு உணவிருந்தால் போதும். வாழ்க்கை சுகமாய் அமைந்தால் போதும், என நினைக்கும் மனிதர்களிடம் என்னத்தை சொல்ல? படித்துவிட்டால் தங்களை அறிவாளிகள் என நினைத்துக்கொள்ளும் சுயமரியாதை இல்லா பிறவிகளிடம் பேசி என்ன பயன்? இன்னமும் கோவிலுக்குள் போய் கடவுள் சிலையை தொட்டு பூசை செய்ய அனுமதிக்கப்படாத தீண்டத்தகாத பிறவிகளாக சட்டப்படி பார்க்கப்படும் கருதப்படும் ஈனபிறவிகளே, சூடு சுரனை அற்ற உங்களிடம் பேசி பயனென்ன? மத போதையால் மானங்கெட்டு உளரும் உங்களிடம் பேசி என்ன பயன்? 


இவ்வாறு எனக்குள் ஒரு கோபமும் விரக்தியும் வந்தாலும், ஒரு பெரியாரியவாதியாக, பெரியாரின் வழியில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை போக்க, அதனை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்ற, பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்யவேண்டிய தேவை இருக்கிறது. உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டி இருக்கிறது.

திராவிடர்களே இறுதியாக உங்களின் அறியாமையை விளக்க நான் தரும் ஒரு தகவல்: ஆன்மீக வழியை பின்பற்றும் நீங்கள், குறிப்பாக இந்து மத வழியை பின்பற்று நீங்களும் மற்றும் உங்கள் முன்னோர்களும், உங்களின் தாய் இறந்தால் திவசம் செய்திருப்பீர்கள். அப்பொழுது பார்பனர் சொல்லும் சம்ஸ்கிருத வார்த்தைகளை மந்திரம் என நம்பி திரும்ப சொல்லியிருபீர்கள், அவர்கள் சொல்ல சொல்லியிருப்பார்கள் நீங்களும் திரும்ப சொல்லியிருபீர்கள், அல்லது கேட்டுக்கொண்டு சும்மா இருந்திருப்பீர்கள். அந்த சம்ஸ்கிருத மந்திரமாவது:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்ததாம் ஆயுபூரன்யஹா அவபத்ய நாம..........


இதன் பொருள்: “எங்க அம்மா ராத்திரி வேளையிலே யாருகிட்டே படுத்து என்னை பெற்றாலோ தெரியாது ஆனால்.... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன், அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்.....


இதை படித்த பிறகு சிறிதேனும் நீங்கள் வெட்கபடுவீர்கள் என நம்புகிறேன். இதற்கு பிறகும் நீங்கள் இந்து மதம் என்று நம்பப்படும் பார்பன மதத்திற்கு வக்காலத்து வாங்கினால், நான் ஒன்றும் செய்யமுடியாது.         


திராவிட தமிழர்களே, உங்களின் ஆன்மீக கருத்துக்கள் எதுவும் உங்களின் சுய சிந்தனையில் தோன்றிய கருத்துக்கள் இல்லை அவையாவும் உங்களின் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட புகட்டப்பட்ட கருத்துக்களே. நான் சொல்ல வருவது என்னவென்றால், ஆன்மீக கதைகளிலும் மதங்களிலும் உள்ள ஆபாசங்களை, மோசடிகளை மறைத்து அதன் ஒரு பகுதியை மட்டும் காட்டி, அதை பெரிது படுத்தி , போற்றி, பரப்பி மக்களை சிந்தனை குருடர்களாக, ஏன் சிந்தனை சோம்பேறிகளாக ஆக்கி, சொல்லப்படும் கருத்துகளை பகுத்தாராயாமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆன்மிகம் தனது கருத்து சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது.

கருத்து சுதந்திரத்தை பெரிதும் மதித்து, எப்பொருள் யாய் யார் வாய்கேட்பினும் அதன் மெய் பொருளை அறிய விரும்பும் யாரையும் நாஸ்திகன் என்று குறிப்பிட்டு, அவர்களை சமூகத்தில் ஒரு தீண்டதகாதவராக, தீயவராக சித்தரித்து சமூகத்தில் அவர்களை ஓரம்கட்டி அதன் மூலம் அப்படிப்பட்டவர்களை மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஒரு சிறுபான்மையினராக ஆன்மிகம் மாற்றியதன் விளைவாக – உலகில் இந்தியா உட்பட பல பகுதில் தீவிரவாதமும் தேவையற்ற பல போர்களும், மனித உயிர் அழிப்புகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் அவை தொடரவும் செய்கின்றன.

பிறக்கும் எந்த குழந்தையும் கடவுள் நம்பிக்கையோடோ அல்லது நம்பிக்கை அற்றோ   பிறப்பதில்லை, நாம் ஏன் ஒன்றும் தெரியாத அந்த குழந்தைகளை ஆன்மீக நாட்டத்தில்  வலுகட்டாயமாக தள்ளுகிறோம்?


ஆண்மீகம்  நல்லது என்று நாம் கருதுவதை அந்த குழந்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்பதால் அதை நாம் அதன் சிறு வயதிலேயே திணிக்க தொடங்குகிறோம்.


திராவிட தமிழர்களே, நமது வருங்கால தலைமுறையினருக்காகவாவது நாம் நமக்கு நம் பெற்றோராலும் சமூகத்தாலும் அளிக்கபடாத கருத்து சுதந்திரத்தை அளிப்போம். நமது கருத்தை திணிப்பதை தவிர்ப்போம். உலகத்தில் அமைதி நிலவ, மத / கடவுள் மூட நம்பிக்கைகள் ஒழியவேண்டும். பகுத்தறிவு பெருகவேண்டும்.     


- திராவிட புரட்சி    

No comments:

Post a Comment