Tuesday 7 February 2012

1959ம் ஆண்டு, சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி, இன்றும் நாம் ஒப்பிட்டு பார்க்கும்வண்ணம் உள்ளது

1959ம் ஆண்டு, சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி, இன்றும் நாம் ஒப்பிட்டு பார்க்கும்வண்ணம் உள்ளது.(13.07.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

“திருவண்ணாமலையிலே நடக்கும் கால்நடைக் கண்காட்சிக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ வின் ஒத்துழைப்பு பெறவேண்டும் என்ற பண்பு கூட உங்கள் உள்ளத்தில் இல்லை. கோடிக்கனக்கான மக்கள் உள்ளத்திலே என்ன எழுச்சி ஏற்படும்? சொல்லலாம், “நீங்கள் 15 பேர்கள்தான், நாங்கள் 150 பேர்கள்” என்று. என்றாலும், அளவு அறிந்து இடம் அளிக்கும் Propotional Representation முறையை காங்கிரஸ் மேற்கொண்டால், காங்கிரசுக்கு 50 லட்சம் வாக்குகள் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மூன்றில் ஒரு பங்கு அல்லது 17 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். அளவு அறிந்து இடம் அளிக்கும் முறை இருந்தால், நாங்கள் 50 பேர் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அமைத்திருக்கும் தேர்தல் இலக்கணம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் 150 பேர்களும் நாங்கள் 15 பேர்களும் இருக்கிறோம். ஆனால் 17 லட்சம் மக்கள் கிள்ளுகீரைகள் இல்லை. எனவே, எங்களுடைய ஒத்துழைப்பை பெறவேண்டும் என்றிருந்தால், மக்கள் உள்ளத்திலே ஆர்வம எழவேண்டுமென்றால், உங்கள் லட்சியத்தை அவர்கள் முன்னே வைக்கவேண்டும். இவர்கள் என்ன லட்சியம் வைத்திருக்கிறார்கள்?......” இப்படி போகிறது அந்த உரை.

நான் இன்றைய நிலையை எண்ணிப்பார்க்கிறேன்...... அண்ணாவின் உரை எவ்வளவு தெளிவாக பொருந்துகிறது.

No comments:

Post a Comment