Tuesday 7 February 2012

ஒரு உண்மையான திராவிட இயக்க உணர்வாளனின் உள்ளக்குமுறல்

(15.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது...

பார்ப்பனிய பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்தும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகின்றன, தி.மு.கவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க.

இந்தியாவில் உள்ள தமிழக அரசியலை பற்றி சிறிதும் கவலைப்படாத சீமானும் அவரது விசிறிகளும், கலைஞர் அரசை தொடரவிடாமல் செய்வதற்க்காக, மேடை பிரச்சாரமும் இணையததள பிரசாரமும் தொடர்ந்து செய்கின்றனர்.

இந்திய – தமிழக அரசியல் – அதன் சாதக பாதகம் புரியா ஈழத் தமிழர்கள், உலகின் பல மூலைகளில் இருந்தும் அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து கலைஞரை துரோகியாக சித்தரித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

அ.தி.மு.கவின் ஆதரவு பிரசாரமும் இணையவாயிலாக தொடருகிறது.

அரசியல் அறிவோ, இனவுணர்வோ இல்லா பல தமிழர்கள், எதோ பல காரணங்களுக்காக கலைஞரை எதிர்த்து, தி.மு.கவிற்கு எதிராக, இணைய வாயிலாக பரப்புகின்றனர் படித்த இளைஞர்கள்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பான தணிக்கை அதிகாரியின் அறிக்கையை வைத்து, அதை ஒரு ஊழலாக சித்தரித்து பலரும் செய்திகளை பரப்புகின்றனர்.

தொடர்பே இல்லாத குஜராத்தின் மோடி அரசை புகழ்ந்து
கலைஞரின் தமிழக  அரசை இகழ்ந்து பிரச்சாரம் செய்தனர்.

தி.மு.க தமிழகத்தில் செய்த சாதனைகளை குறைசொல்ல முடியா அனைவரும் வேறு பல குறைகளை சொல்லி எதிர்த்தனர்.

துணைக்கு யாரும் இல்ல சூழலில் ஒரு திராவிட உணர்வாளனாய் தனித்து களம் இறங்கினேன், புதியதொரு அடையாளத்தில் (இதுவல்ல).

அனைத்தையும் எதிர்த்து வாதிட்டேன். ஆதாரங்களோடு.

இறுதியில் தி.மு.க தோற்றது தேர்தல் அரசியலில். என் வாதங்களும் தோற்றுவிட்டன.

நான்,

அலைக்கற்றை குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்டேன்.

கலைஞரின் குடும்ப அரசியல் குறித்த வாதங்களுக்கு எதிர்த்து வாதிட்டேன்.

கலைஞரின் குடும்ப உறுப்பினர்களின் ஆன்மிக உணர்வை அதாவது அவரது பகுத்தறிவு கொள்ள்கைக்கு எதிரான வாதத்தை எதிர்த்தேன்.

சீமான் மற்றும் அவரது விசிறிகளின், கலைஞர் ஈழத்திற்கு எதிரானவர் என்ற வாதத்தை எதிர்த்தேன்.

மோடியை விட கலைஞர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை கட்டுரை மூலமாக தெரிவித்தேன்.

கலைஞர் அரசின் சாதனைகளை பரப்பினேன்.

கலைஞர் – தி.மு.க அரசின் சாதனைகள் குறித்த செய்திகள் அடங்கிய தி.க வெளியிட்ட நூல்களை வாங்கி பரப்பினேன்.

இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறேன்....விவரிக்க இயலாததை.

தேர்தலுக்கு பிறகு,

பல கைதுகளை எதிர்த்தேன்,

தமிழுணர்வை ஆதரித்து கட்டுரை எழுதினேன். வழக்கம்போல.

தமிழகத்தின் புதிய ஆட்சியின் குறைகளை எதிர்த்தேன்.

சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழக அரசின் நிலையை இணையத்தில் முதன்முதலில் தெரிவித்து எதிர்த்தேன்.

அண்ணா நூலக விவாகாரத்தில் என் தொடர் எதிர்ப்பை தெரிவித்தேன். செயல்பட்டேன்.

பரமக்குடி நிகழ்வை கண்டித்து எழுதினேன்.

முல்லைபெரியாறு குறித்ததும் என் சமூக நியாய உணர்வை வெளிப்படுத்திவருகிறேன்.

இவை எல்லாம் பதவிக்காகவோ, பொருளுக்காகவோ, புகுழுக்காகவோ செய்யவில்லை. நான் செய்த அனைத்தும் புனைப்பெயரில், அதுவும் சிலவற்றில் பின்னிருந்து.


மீண்டும் திராவிட இயக்கத்தின் உண்மையான பதவிக்கு வரவேண்டிய அரசியல் இயக்கமான தி.மு.க, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற உன்னதமான உணர்வில்....

இணையத்தில் திராவிட இளைஞர்களுக்கு, நம் இனவுணர்வை ஊட்டுவதற்காகவும், திராவிட இயக்க வரலாறை நினைவூட்டுவதற்க்காகவும், பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதற்காகவும், நான் இந்துத்துவாவை எதிர்த்து பதிவுகளை வெளியிட்டேன்.

நான் இவ்வளவு செய்தபோது எதிர்க்காத தோழர்கள், இந்துத்துவாவை எதிர்த்தபோது கிளர்ந்து எழுந்துவிட்டனர். அது தி.மு.கவின் வாக்கு வங்கியை குறைத்துவிடும் என்று அதுவும் தோற்ற பிறகு வாதிடுகின்றனர்.

நான் வாக்கு வங்கியை குறிவைத்து செயல்படவில்லையாம். தி.க வின் அதாவது பெரியாரிய கருத்துகளை மட்டும் பிரச்சாரம் செய்கின்றேனாம். அது அவர்களது வாக்கு வங்கியை குறைக்குமாம்.

எது வாக்கு வங்கி? அதை பெறுவது எப்படி? என்று ஏதாவது புள்ளிவிவரம் இருக்கிறதா எனது அருமை அறிவாளிகளே? அந்த விவரம் தெரிந்தால், அந்த இரகசியம் தெரிந்தால், போட்டிபோட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாவது தெரியுமா அறிவாளிகளே?

மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கருத்தில்கொள்ளாமல், வாக்குவங்கியை மட்டும்  பேசும் உங்களைப்போன்றோர்தான், இந்த மாபெரும் உன்னதமான இயக்கத்தின் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

உண்மையான வாக்கு வங்கி என்பது என்ன என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதற்காக நீங்கள் என்றாவது செயல்பட்டிருக்கிறீர்களா?

திராவிட இயக்க உணர்வுள்ளவர்களை குறை சொல்லும் முன்பு, நீங்கள் உண்மையான திராவிட இயக்க கொள்கை உணர்வாளர்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

கட்சி என்பது வேறு, இயக்கம் என்பது வேறு, சுயநல அரசியல் என்பது வேறு, மக்களுக்கான அரசியல் என்பது வேறு.

புரிந்துகொள்ள முயலுங்கள் தோழர்களே.


- திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment