Tuesday 7 February 2012

கலைஞரைத் திட்ட மாவீரர் நாளையும் பயன்படுத்தும் குழப்பவாதிகளின் பேச்சை நம்பாதீர்கள்.

(27.11.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)

கலைஞரைத் திட்ட மாவீரர் நாளையும் பயன்படுத்தும் குழப்பவாதிகளின் பேச்சை நம்பாதீர்கள்.

தவறான வழிகாட்டுதலையும் தவறான முடிவையும் எடுத்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய மனிதஅழிவை மறைத்து திசைதிருப்பும் ஒற்றை நோக்கத்தில் கலைஞரை குறை சொல்லிக்கொண்டிருகிறார்கள்.

கலைஞர் அழுத்தம் தந்திருந்தால், இந்த போரை நிறுத்தியிருக்கலாம் என்று பேசுபவர்கள், போரில் நேரடியாக ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் இந்த பேரழிவை தவிர்த்திருக்கலாம் என்பதை மட்டும் ஏன் பேச மறுக்கிறார்கள்?

நானும் ஒரு ஈழ ஆதரவாளன் என்ற முறையில் நான் யாரையும் எதிர்த்தோ ஆதரித்தோ பேச விரும்பவில்லை, நடுநிலையோடு சிந்தித்து பேசவிரும்புகிறேன்.

கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று பிரபாகரன் அவர்களோ அல்லது அந்த இயக்கத்தின் அதாவது போரின் நிலை அறிந்த முன்னனியினரோ, உலகின் எந்த ராஜதந்திரியோ, போர்க்கலை வல்லுனர்களோ தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்கவும் மாட்டார்கள். நம் ஊரில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும் கலைஞரை ஐ.நா மன்றத்தின் பொதுச்செயளாலரை போல கருதி வசை பாடுகிறார்கள். அந்த ஐ.நா. மன்ற பொதுச்செயலாளர் பாண்.கி.மூனாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை அது வேறு விஷயம்.

லண்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் லண்டன் மாநகரை குலுக்கிய பேரணியை நடத்தியும்....பல ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தும், தடுக்க முடியாமல்போன அந்த பேரழிவை, கலைஞர் தடுத்திருக்கலாம் என்று பேசுவது...வெறும் அரசியலே.

கலைஞர் காங்கிரசை எதிர்த்து ஆதரவை திரும்பப்பெற்றிருந்தால்...என்ன நடந்திருக்கும்? கொஞ்சம் நியாயமாக சிந்திப்போம்.

ஜெயலலிதா ஆதரவு தரத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில்...தி.மு.க காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணியாக மாறியிருக்கும்.

தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாத நிலையில் பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க அரசு கவிழ்க்கபட்டிருக்கும்,  தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டிருக்கும். ( காங்கிரசுக்கு ஆப்பு வைக்க நினைத்த தி.மு.கவை தொடர விடுவார்களா?)

ஜெயலலிதா முலாயம் சிங் உள்ளிட்டவர்களின் ஆதரவில் மத்திய காங்கிரஸ் அரசு எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றிருக்கும்.

தமிழக ஈழ ஆதரவாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் நெருக்கடி தரப்பட்டிருக்கும்.

இதைத்தான் சிலர் விரும்பினர். இதனால் போர் எப்படி நிறுத்தப்பட்டிருக்கும்???

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக கற்பனை செய்துகொள்ளும் என்று சொல்லுவதை போலத்தான், கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்ற கற்பனை பேச்சு. போரை நிறுத்தும் நேரடி வாய்ப்பு ராஜபக்சேவுக்கும் பிரபாகரனுக்கும் மட்டும்தான் இருந்தது என்பதே உண்மை.


இந்த குழப்பவாதிகளின் வாதத்தை எற்றுக்கொண்டோமானால்....அதில் என்ன வெளிபடுகிறது என்றால்....இங்கிலாந்து பிரதமரால் முடியாததை, பல ஐரோப்பிய நாடுகளால் முடியாததை, ஐ.நா.வால் முடியாததை, கலைஞர் செய்திருக்கலாம் என்ற அவர்களின் வாதம்...கலைஞரை ஒரு மாபெரும் உலகத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே வெளிபடுத்துகிறது.

நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

- திராவிடப் புரட்சி 

No comments:

Post a Comment