Tuesday 7 February 2012

அணு உலைகள் பாதுகாப்பானதா? தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அதற்கு வக்காலத்து வாங்குவது சரியா?

அணு உலைகள் பாதுகாப்பானதா? தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அதற்கு வக்காலத்து வாங்குவது சரியா?  (18.09.11 அன்று முகநூலில் பதிந்தது)

இந்தியாவின் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மே.வங்காளம், ஒரிசா, ஆந்திரா ஆகியவற்றில், இந்தியாவின் அணு அறிவியலின் தந்தையான ஹோமி பாபா, தன்னுடைய சொந்த கிராமமான மகாராஷ்ட்ராவில் உள்ள தாராப்பூரில், இந்தியாவின் முதல் அணு உலையை அமைத்தார், அது அமெரிக்க தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. அதற்கு பிறகு தமிழ்நாட்டில் (ரஷிய தொழில்நுட்பம்) இன்ன பிற மாநிலங்களில் அமைக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.

பயன்பாட்டில் உள்ளவை / கட்டப்பட்டு வருபவை / வருங்கால திட்டம் :   

உத்திரபிரதேசம்:
நரோரா அணுமின் நிலையம்:
220 X 2 – 440 MW பயன்பாட்டில் உள்ளது.

குஜராத்;
கக்ராபூர் அணுமின் நிலையம்:
220 X 2 – 440 MW பயன்பாட்டில் உள்ளது.
640 X 2 – 1280 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

ராஜஸ்தான்:
ரவத்பாட்டா அணுமின் நிலையம்:
100 X1 / 200 X 1 / 220 X 4 – 1180 MW பயன்பாட்டில் உள்ளது.
640 X 2 – 1280 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

கர்நாடகா:
கைகா அணுமின் நிலையம்:
220 X 3 – 660 MW பயன்பாட்டில் உள்ளது.
220 X 1 – 220 MW  கட்டுமான நிலையில் உள்ளது
1000 X 1 / 1500 X 1  –  2500 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

தமிழ்நாடு:
கல்பாக்கம் அணுமின் நிலையம்:
220 X 1 – 220 MW பயன்பாட்டில் உள்ளது.
500 X 1 – 500 MW  கட்டுமான நிலையில் உள்ளது

தமிழ்நாடு:
கூடன்குளம் அணுமின் நிலையம்:
1000 X 2 – 2000 MW  கட்டுமான நிலையில் உள்ளது
1200 X 2 –  2400 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா:
தாராபூர் அணுமின் நிலையம்:
160 X 2 – 320 MW பயன்பாட்டில் உள்ளது
540 X 2 – 1080 MW பயன்பாட்டில் உள்ளது

மகாராஷ்டிரா:
 ஜைத்தாபூர் அணுமின் நிலையம்
1600 X 4  –  6400 MW வருங்கால திட்டத்தில் உள்ளது.

இது தவிர மூன்று அறிவிக்கப்படாத இடங்களில் 4860 MW  அணுமின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளது.


மேலே தந்துள்ள விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில்தான் அதிக அணு உலைகள் அமைக்கபடுவது தெரிய வருகிறது.

இந்நிலையில், அணு அறிவியல் அறிஞர்கள் இந்த உலைகள் எல்லாம் பாதுகாப்பானவை, உயரிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டவை என்றெல்லாம் சொல்லுகின்றனர். அணு அறிவியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் போல நமது தமிழக அரசியல்வாதிகளும் மிகவும் பாதுகாப்பானது என்று பேசுகின்றனர்.

பாமரனான எனக்கு சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உதிக்கின்றன...
நம்மை விட சொல்லப்போனால் நமக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்தந்த ரஷியாவில் செர்னோபில் அணு உலை விபத்து நடந்தது எப்படி?
நம்மை விட தொழிநுட்பம் மற்றும் தர கட்டுபாட்டில் சிறந்து விளங்கும் ஜப்பானில் அணு உலை பாதிக்கப்பட்டு கசிவு ஏற்பட்டது எப்படி?
மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லும் நம் அறிவியல் அறிஞர்கள் விடும் ராக்கெட்டுகள் / செயற்கை கோள்கள் தொழில்நுட்ப தவறின் காரணமாக வெடித்து சிதறுவது எப்படி?
இதையெல்லாம் விட, ஒவ்வொரு அணு உலை அமைந்திருக்கும் இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அணு உலை அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் அடிக்கடி (EVACUATION DRILL)  மொத்தமாக மக்களை வெளியேற்றும் ஒத்திகை நடத்தபடுவது ஏன்? மிகவும் பாதுகாப்பான அணு உலை என்ற நம்பகத்தன்மை இருக்கும்போது இந்த ஒத்திகைகளுக்கான தேவை என்ன?
எதற்கு தென்னிந்திய பகுதிகளான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மட்டும் அதிக அணு உலைகள் அமைக்கப்படுகிறது?

நாம் மட்டும் ஏன்?????? என்ற கேள்விக்கு பதில்....எங்கு அரசியல் ரீதியாக பலம் குறைவாக இருக்கிறதோ அங்கு கேட்பதற்கு நாதியில்லை என்ற நிலையே உள்ளது. நமது அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள பகைமையை வெகு எளிதாக தேசிய கட்சிகள் மற்றும் மத்திய அரசு பயன்படுத்திக்கொள்கிறது. நமது ஒற்றுமையின்மை....நமது மிக பெரிய பலகீனம்.

தமிழ்நாட்டை ஆளும் பெரிய கட்சிகள் இரண்டையும், எதோ ஒரு வகையில் அடக்கும் அல்லது கட்டுபடுத்தும் வழிமுறைகளை மத்திய அரசு அல்லது மத்திய அரசின் அதிகாரிகள் தெரிந்து வைத்துள்ளனர்.

அன்று தி.மு.க ஆண்டது. நாடாளுமன்றத்தில் கனிமொழி அணு உலைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கினார், பிரதமரும் இரசித்து கேட்டார் என்று செய்திகள் வேறு.

இன்று அ.தி.மு.க ஆள்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை பாதுகாப்பானது என்று தேர்ந்த அணுத் தொழில்நுட்ப அறிஞர் போல சொல்லுகிறார்.

நாளை...யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலை தொடரும்.....மத்திய அரசின் கைபாவையாக தமிழக அரசியல் கட்சிகள் / தமிழக அரசு ஆட்டுவிக்கப்படுகின்றன.

நமது சுயமரியாதையை காப்பாற்ற தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத வரையில், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆசையை தமிழக அரசியல் கட்சிகள் விட்டுவிடவேண்டும். தேசிய கட்சிகளோடு கூட்டணி உறவுகளை தவிர்க்கவேண்டும். அப்போதுதான், நாம் நமது மாநில நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படமுடியும்.


- திராவிடப் புரட்சி

No comments:

Post a Comment