Tuesday 7 February 2012

கணம் நீதிபதி அவர்களே

(12.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

கணம் நீதிபதி அவர்களே,

தென்னிந்திய பூர்வகுடி மக்களை வரலாற்று ரீதியாக இணைத்து “திராவிடர்கள்” என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ளாத எதிர்கட்சிக்காரர் மருத்துவர், திராவிட கட்சிகளை வேரறுத்து அழிப்பேன் என்று தனது மரம்வெட்டி புத்தியை வெளிபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சிந்தித்து தமிழ்நாட்டையே துண்டாடவேண்டும் என்ற நீண்ட நாள் குறிக்கோளை கொண்டிருப்பவர் இந்த மருத்துவர் என்று பத்திரிக்கைகள் தெரிவிப்பதை வைத்துப்பார்த்தால், அரசியல் சுயநலத்திற்காக எதையும் வெட்டும் இவரது மனநிலை வெளிப்படுகிறது.

இந்நிலையில்,

தென்னிந்திய மக்களின் வாழ்க்கையை பலகூறுகளாக ஆராய்ச்சி செய்த திரு.எட்கர் தர்ஸ்டன் அவர்கள், 1909ம் ஆண்டு ஆதாரத்தின் அடிப்படையில் எழுதியுள்ள நூலின் படி,

வன்னிய குல சத்திரியர் என்பது பள்ளியருக்கான மற்றுமொரு பெயர் என்றும். இவர்கள் அக்னி குல சத்திரியர் என்று தங்களை கூறிக்கொள்கின்றனர் என்றும்,

வன்னியர் என்பது பள்ளி சாதிக்கான மற்றுமொரு பெயர் என்றும், அம்பலகாரன், வலையன் சாதிகளின் உட்பிரிவு என்றும், மறவர் சிலர் வன்னியன் என்றும் வன்னிக்குடி என்றும் வழங்கபடுகின்றனர் என்றும், தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த இருளர் தங்களை தேன் வன்னியர் என்று கூறிக்கொள்கின்றனர் என்றும் தெரியவருகிறது.

மேலும் தற்காலத்தில் கூட,

சென்னையில் தங்களை நாயக்கர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும், சென்னையில் இருந்து 250 கி.மீ தள்ளி வாழும் படையாச்சி என்று சொல்லிக்கொள்ளும் மக்களுக்கும் எந்த வித திருமண உறவும் இல்லாத நிலையில், இப்படி பல பிரிவு மக்களை ஒன்றிணைத்து “வன்னியர்” என்று பொதுமைபடுத்தி வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட சிலரின் அரசியல் சுயலாபத்திற்கே பயன்படுகிறது.  ஜாதிகட்சியாக தொடக்கி அரசியல் கட்சியாக மாறியிருக்கும் சிலவற்றை வைத்தே நாம் இதை உணர்ந்துகொள்ளமுடியும்.

எனவே கணம் நீதிபதி அவர்களே,

பல பிரிவுகளாக உள்ள தென்னிந்திய மக்களை பொதுமைபடுத்தி திராவிடர்கள் என்று அழைப்பது தவறென்ற எதிர்கட்சிக்காரர் திரு.மரம் வெட்டி மருத்துவர் அவர்களின் கோட்பாட்டை நாங்கள் எற்றுகொள்ளாவிட்டாலும், அவரது கருத்துப்படி பல பிரிவுகளை ஒன்றாய் பொதுமைபடுத்தமுடியாது என்ற அடிப்படையில்,

தமிழ்நாட்டின் இறையாண்மையை காக்கும் நடவடிக்கையாக,

பல பிரிவுகளாக இருந்த மக்களை இணைத்து “வன்னியர்” என்று பொதுமைபடுத்தி அழைப்பது இனி செல்லாது என்றும், அவர்கள் தனித்தனியாக பிரிந்து அவர்களின் சமூக அரசியல் உரிமைகளை சுயமாக சுதந்திரமாக பெறவும் ஏற்ற வகையில் தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அதைவிட சிறப்பாக, மனித குல மாண்பை உயர்த்தும் வண்ணம், அனைத்து ஜாதி பிரிவுகளையும் ஒன்றிணைக்கும் வகையில், இனி தமிழகத்தில் ஜாதி பிரிவுகளே இருக்ககூடாது என்றும், ஜாதி அடையாளங்களே இருக்க கூடாது என்றும், ஜாதி பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது என்றும், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்த பெயர்கள் தடை செய்யப்பட்டு பத்திரிக்கைகள் உட்பட எந்த வகையிலும் பிரசுரிக்க கூடாது என்றும், அனைவரையும் ஒன்றிணைத்து, திராவிட இனத்தின் உட்பிரிவான  “தமிழர்” என்று அழைக்க வேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.              

2 comments:

  1. நானும் படையாட்சிதான் ......ஏதாவது தெரிஞ்சிதான் பெசுரிங்க்லா ....கொங்கு வெல்லல கௌண்டேர்ல , கூட்டம் மாத்தி கல்யாணம் பண்ண மாட்டாங்க ...அப்போ அவுன்கலாம் வேறு வேறு சாதியா ? தேவர்ல பட்டம் மாத்தி கல்யாணம் பண்ண மாட்டாங்க...அப்படிதான் வன்னியர்லையும் .....வன்னியர்க்கு பல பட்டம் இருக்கு ....படையாட்சி, சோழனார் , கச்சிராயர் , நாயக்கர் , தொண்டைமான் அப்படின்னு போயிட்டே இருக்கும் ...அந்தந்த பட்டம் உள்ளவங்க அவுங்க பட்டத்துகுள்ள கல்யாணம் பண்றதுதான் வழக்கம் ...ஆனா இபோலாம் பட்டம் மாறியும் [அடையாட்சி வன்னிய கௌண்டேர்க்கும், நாயக்கர்க்கும் கூட நடக்குது .....எப்டி இருந்தாலும் எல்லாம் வன்னிய இனம்தான் ....ஒன்னும் தெரியாம பெனாத்தாதீங்க

    ReplyDelete
  2. தொண்டைமான் கச்சிராயர்,உடையார்,செட்டியார்,சோழனார் பட்டம் உள்ளவர்கள் படையாட்சியிடம் சம்பந்தம் கிடையாது தானே.எல்லாரும் பள்ளிஇனம் கிடையாது.பல வன்னிய பட்டம் உள்ள இனங்களும் ஆசிரியர் கூறுவது போல் வன்னியர் என்று இணைந்துள்ளனர்.ஆனால் பள்ளிஇனம் அல்ல.பள்ளி வகையோடு பள்ளிகள் மட்டுமே சம்பந்தம் செய்வர்.

    ReplyDelete