Tuesday 7 February 2012

அறுவை சிகிச்சையே பலன்தரும் என்ற நிலையை நோய்க்கிருமி ஏற்படுத்தியுள்ளது

(8.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

சுதந்திரம் வாங்கும் முன்பு, தனித் ‘திராவிட நாடு” என்ற கோரிக்கையை தென்னகம் எழுப்பிய ஒரே காரணத்திற்காக...

திராவிட நிலப்பகுதியை திட்டமிட்டு மொழிவாரி மாகானமாக பிரித்து...

பிரித்த பகுதியில், தீர்க்கவியலா பிரச்சனைகளை சேர்த்து வைத்து...

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே இனமாய் இருந்த திராவிடர்களை, மொழி, பண்பாடு, உணவு இவற்றில் இன்றும் ஒற்றுமையை உடைய அந்த தொன்மையான இனத்தை, சமஸ்கிருத கலப்பினால் மொழியில் மட்டும் ஏற்பட்டுள்ள சிறிய மாறுதலைக்கொண்டு, மிகவும் எளிதாக பிரித்துவிட்டார்கள், வடநாட்டு ஆரியர்கள் தென்னாட்டு ஆரியர்களின் ஒத்துழைப்போடு.

திராவிட மன்னர்களை சேர சோழ பாண்டிய என்றே அழைப்பதுண்டு...அதில் இன்று சேரப் பகுதி முழுவதும் மலையாளிகள் என்று அழைக்கபடுவதால் அவர்கள் வேறு இனத்தை சேர்ந்தவர்களாகிவிடமுடியாது.

அன்று ஜாதியால் நம்மை பிரித்து மேய்ந்த ஆரியம், இன்று மொழியால், மாநிலத்தால் பிரித்து மேய்கிறது.

காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு என பிரித்து மேய்வதற்கென்றே பிரச்சனைகளை தீர்க்காமல் தொடரச் செய்கிறது வடநாட்டு அரசியல்.

இந்த பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பது தேசிய கட்சிகளே. தமிழகத்தில் தேசியகட்சிகள் ஒடுக்கபட்டிருந்தாலும், நம்மை சுற்றியுள்ள நம்மின மக்கள் வாழும் அண்டை மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

அங்குள்ள தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும் அதே கட்சிகளை சேர்ந்தவர்கள் இங்கு தமிழகத்திற்கு ஆதரவாகவும் பேசுவது...நம்மையெல்லாம் முட்டாளாக்குவதற்கே.

இந்திய இறையாண்மையை காப்பாற்ற, திராவிட இனம் பிரித்து மேயப்படவேண்டுமா?

இந்திய இறையாண்மையை காப்பற்ற, தமிழகம் இரையாக்கப்படவேண்டுமா?

இந்தியாவில் இணைந்து இருப்பதால்தான் நமக்கு இவ்வளவு இன்னல்களா?

நம்முடைய அண்டை மாநிலங்களோடு நமக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கபடாவிட்டால், நம்முடைய அடிப்படை தேவையான நீர் நமக்கு முறையான வகையில் பிரித்து வழங்கப்படாவிட்டால், நாம் தனியாய் பிரிவதை தவிர வேறு வழி இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான், நம்மை பிரித்து மேயும் வடநாட்டு அரசியல்வாதிகளுக்கும், தேசியகட்சிகளுக்கும் கொஞ்சமாவது புரியும்.

நோய் முற்றிக்கொண்டிருக்கிறது, இனி நீண்டகால மருந்து உதவாது, அறுவை சிகிச்சையே பலன்தரும் என்ற நிலையை நாம் அல்ல நோய்க்கிருமி ஏற்படுத்தியுள்ளது.


- திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment