Tuesday 7 February 2012

பேராதிக்கப் பேயே! (ஆரிய மாயை – பார்ட் – 2)

(16.11.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)


பேராதிக்கப் பேயே!

நீ...
ஆதாம்...ஏவாள் காலத்திலிருந்தே
நீதான் மனிதர்களை
ஆட்டுவித்து வருகிறாய்.

உனக்கு...
உழைக்கத் தெரியாது.
ஆனால்..
எவரை அண்டியாவது
இல்லை
‘மற்றவர்’ வாழ்வை கேடுத்தேனும்
எப்படியாவது பிழைக்கத் தெரியும்.

போட்டுக் கொடுத்தல்
காட்டிக் கொடுத்தல்
இந்த
மந்திரங்களை
கொஞ்சம் கூட
கூசாமல் குறுகாமல்
உன் ஜீவனதிற்காகக்
கடைபிடிப்பாய்.

“வடகலை...தென்கலை” என்று
வாய்கிழிய நீ பேசுவது
வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த இரண்டு “கலை” மட்டும்
இங்கு இருக்க வேண்டுமென்பதே
உன் எதார்த்த நிலை.

இந்த இரண்டு “கலை’ மட்டும்
இங்கு இருக்க வேண்டுமென்பதே
உன் எதார்த்த நிலை.

இதற்காக,
வலிமையான ‘சூத்திரரை’
வம்பு தும்பு வதந்தி பரப்பி
அழித்தொழிப்பது
உனக்கு கைவந்த கலை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
உன் கொடி நாட்டவே துடிக்கிறாய்.

கடவுள் பேர் சொல்லி
ஏமாற்றி பிழைக்கும் கயவன் நீ
கட்சிகள் ஆட்சிகள் தலைவர்கள்
கடுகளவும் பேதமின்றி
“மற்றவர்” புகழை உடைக்கிறாய்.

மாசு மருவற்ற மனிதர்கள் மீது கூட
மனசாட்சியே இல்லாமல்
மட்டமான புகார் சொல்லி மகிழ்கிறாய்.

பாரத தேசத்தின்
‘பசி’ப் பிணி தீரப் பாடுபடும்
பண்பான தலைவர்கள் சிலரைக்கூட
ஏசியும் பேசியும் வருகிறாய்
எப்படியேனும் அவர்கள் வசிக்கிற
உயர் பதவிகளை பிடுங்கத்
துடிக்கிறாய்.

மனித சாத்திரம் படிதவர்க்கெதிராய்
‘மனு சாஸ்திர’ ஆயுதம் எடுக்கிறாய்
மகாபாரத இராமாயண
காலத்திலிருந்தே
மறைந்திருந்தே மற்றவர் மீதம்பு
தொடுக்கிறாய்.

பூஜை புனஸ்காரம்
புனிதமான யாகம் ஹோமம்
இவையெல்லாமே...
வாழ்க்கைக்கு வழிகாட்டும்
‘நன்னூல்’ அல்லவா...

வேதங்கள் சாட்சியாய்
வாழ்வதாய்ச் சொல்லும்
நீ அணிந்த அந்தப் ‘பூணூல்’
நியாயவான்களைக் கொல்லவா...?

இதற்கு மேலும்
எங்களைச் சோதிக்காதே
பேராதிக்கப் பேயே...
இங்கு எழத் தொடங்கிவிட்டது
உன் கொடுமைக்கெதிராய்
பெறும் பிரளயத் தீயே...

-          புதிய பாரதி


இந்த கவிதை 16 – 18  நவ 2011 நக்கீரன் இதழில் வெளிவந்துள்ளது...

அதுவும் ப.சிதம்பரம் அவர்கள் பிரணாப் முகர்ஜியை பார்த்து சொல்லுவது போல படம் வேறு உள்ளது.

இதை எழுதிய புதிய பாரதி யார்? எனத் தெரியாவிட்டாலும்... எழுதியதன் காரணம் அரசியல் அறிந்த அனைவரும் உணரக்கூடியதே.

அடடா....என்ன ஒரு தன்மான உணர்ச்சியில் கொந்தளித்து வந்துள்ள கவிதை இது?

சமூக இழிவுக்கெதிராய் இதே கவிதை வந்திருந்தால்...
கருஞ்சட்டை அணியா வெண்சட்டைகாரராய் கருதி
வியந்து பாராட்டியிருப்பேன்.

இருந்தாலும்...

ஒரு தமிழனுக்கு எதிராய் நடக்கும் சதியை உணர்ந்து, உள்ளுக்குள்ளேயே குமையாமல், வெளிபடையாக போர் முரசை கொட்டியிருக்கும் இந்த கவிதையில் உள்ள சுயமரியாதை உணர்வு, மிகுந்த பாராட்டுக்கும்...சூத்திரர்களின் ஆதரவுக்கும் உரியது.

இதே கருத்தை பேயை நம்பாத கருஞ்சட்டை எழுதியிருந்தால்...அதன் தலைப்பு “ஆரிய வெறியே” என்று இருந்திருக்கும். ஆனால், இந்த கவிதையின் தலைப்பு ‘பேராதிக்கப் பேயே’ என்று வந்துள்ளது.

எது எப்படியோ, அந்த ஆரியப் பேயால் பாதிக்கப்பட்ட நம் சூத்திரரின் தன்மான உணர்ச்சியை வெகுவாய் பாராட்டியே தீரவேண்டும். “ஆரிய திராவிட” என்பது எழுதியவருக்கு உடன்பாடில்லாமல் போகலாம்....அல்லது அதை கவிதையில் நேரடியாக வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்...ஆனால், அதன் உள்ளர்த்தம்....ஆரிய திராவிடப் போராட்டத்தை வெளிச்சம் போட்டே காண்பிக்கிறது.

நான் வரலாறை சற்று திரும்பிப் பார்க்கிறேன்....

1925ம் ஆண்டு….

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு மேடையிலேயே...

“காங்கிரஸ் கட்சி பார்ப்பனமயமாகிவிட்டது. இங்கே பார்ப்பனத் தலைவர்களின் ஆதிக்கம் வலுத்துவிட்டது. காங்கிரசில் தொடர்ந்து இருப்பதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. கலியாண சுந்தர முதலியார் அவர்களே, நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பிராமணர் அல்லாதோர் நன்மைபெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என்று ஆவேசமாக முழங்கி தனது கைத்தடியால் ஓங்கி மேடையை தட்டிவிட்டு ஆக்ரோஷமாக வெளியேறினாரே தந்தை பெரியார்......

அவர்தான் முதன் முதலில் காங்கிரசை ஆட்டுவிக்கும் ஆரிய பேய்களை அடையாளம் காட்டியவர். அவர்தான் அந்த ஆரிய வெறியர்களிடம் இருந்து திராவிட அரசியலை மீட்கும் வழியை காட்டியவர்.

வெறும் அறிவு இருந்தால் மட்டும் அதனால் பயனில்லை என்பதால், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று போதித்தது அந்த ‘பகுத்தறிவு பகலவன்”.

ஆஹா....எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு.....அங்கிருந்து ஒலிக்கிறதே ஒரு ஆரிய எதிர்ப்புக் குரல். அருமை! அருமை!

அறிவு மானவுனர்சியோடு சிந்தித்ததின் விளைவு இது.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்....ஆனால் இந்த ஆரிய வெறியர்களை...உங்கள் மொழியில் பேராதிக்கப் பேய்களை ஒடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து எடுங்கள்.

ஆரிய வெறியர்களை...பேராதிக்கப் பேய்களை ஒடுக்கும் அழிக்கும் உங்கள் நடவடிக்கைக்கு....

திராவிடராய்...சூத்திரராய்....மானவுணர்ச்சி மிகுந்த பல மானமிகுக்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.


- திராவிடப் புரட்சி

No comments:

Post a Comment