Tuesday 7 February 2012

தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும், திரைப்படத்துறையை சேர்ந்த இயக்குனருக்கு, திராவிடத்தை குறை சொல்லும் தகுதி இருக்கிறதா

(26.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

நேற்று மெரினா கடற்கரை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒரு வர் சொன்னார், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்கள், தமிழகம் திராவிடத்தாலும் தேசியத்தாலும்தான் கெட்டது என்று சொன்னாராம்.

இதை கேட்ட எனக்கு வருத்தம் வேதனையை விட கோபம்தான் வந்தது.

யார் யாரை குறை சொல்லுவது. குறைசொல்லுவதற்கு ஒரு தகுதி வேண்டாம்?

கேட்பதற்கு நாலு பேர் இருந்தால், யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் பேசலாமா?

கட்சிக்கொடி இல்லாமல் வரச்சொல்லி அழைத்ததால்தான் அத்தனை பேர் அரசியல் தாண்டி தமிழராய் வந்திருந்தனர். அங்கு அரசியல் பேசுவது முறையா? இனி இப்படி அழைத்தால் யாரவது வருவார்களா? எதிர்த்து பிரச்சாரம் செய்யமாட்டார்களா?

தமிழகம் உணர்விழந்து போனதற்கு முழு முதற்காரணம், திரைப்படங்களே.

தமிழ் பெயர்களை சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள கதாபாத்திரத்திற்கு மட்டும் சூட்டி, படித்த உயர்ந்த நிலையில் உள்ள கதாபாத்திரங்களுக்கு வட மொழியில் பெயர் வைத்து, தமிழன் தமிழிலில் பெயர் வைப்பதற்கு வெட்கப்படும் அளவிற்கு கொண்டுவந்து, அவனது தமிழுணர்வை மழுங்கடித்தது திரைப்படங்களே, அதன் இயக்குனர்களே.

தமிழனின் உடையை அவன் ஒதுக்கி, வடநாட்டு உடைகளான, பைஜாமா குர்தா, சல்வார் கமீஸ் போன்றவற்றை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவந்தது திரைப்படங்களே, இயக்குனர்களே.

திரைப்படங்களில் தமிழன் என்று உணர்ச்சி பொங்கும் வசனங்களை கவனமாக தவிர்த்து, அவனுக்கு மாநில உணர்வு மேலோங்கிவிடாமல், இந்தியா,இந்தியன், தேசப்பற்று என்று பிரச்சாரம் செய்தது திரைப்படங்களே, இயக்குனர்களே.

இப்படி தமிழனின், மொழி, பண்பாடு, இனவுணர்வு என்ற அனைத்தையும் அழித்த, தமிழனை சுரணையற்ற பிறவியாக மாற்றியது திரைப்படங்களே.

மேற்சொன்ன தமிழருக்கு எதிரான கெடுதிகளை எந்த திராவிட இயக்கமாவது செய்ததா??? இல்லையே....

இப்படிப்பட்ட திரைப்படத்துறையில் இருந்து வந்து, தமிழகம் கெட்டதற்கு காரணம் திராவிடம் என்று சொல்லுவதற்கு வெட்கமாக இல்லை???

- திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment