Tuesday 7 February 2012

ஜெயலலிதா - சசிகலா குறித்த புதியதலைமுறை தொலைக்காட்சியின் பாரபட்சமான நிகழ்ச்சி


(19.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

புதியதலைமுறை தொலைக்காட்சியின் பாரபட்சமான நிகழ்ச்சியை பற்றி பேசும் முன்பு ஒரு வரலாற்று தகவலை பகிர்ந்துகொண்ட பிறகு பேசினால் அது சரியாக இருக்கும் என்பதால் அதைத் தருகிறேன்...

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங் குடியைச் சேர்ந்த ஆர்.எஸ். மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார்.  ஆர்.எஸ். மலையப்பன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; நல்ல நிருவாகி என்று பெயர் எடுத்த நாணயக்காரர்; குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகை சம்பந்தப்பட்ட தகராறில் அவர் வழங்கிய தீர்ப்பின்மீது (அப்பொழுது மாவட்ட ஆட்சியர்க்கு அத்தகு அதிகாரங்கள் உண்டு) மிராசுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் வழங்கும் தீர்ப்பு தவறு என்று சொல்லலாம் - புதிய தீர்ப்புகளையும் வழங்கலாம். அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. அதனை விட்டு விட்டு பார்ப்பனர் அல்லாத - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்பதை மனதிற் கொண்டு, அவரைப்பற்றி இரு நீதிபதிகள் தாறுமாறாக தீர்ப்பு எழுதினார்கள் தனிப்பட்ட முறையில். அந்த இருவரும் பார்ப்பனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அளவுக்குச் சென்று எழுதினார்கள்? இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இவருக்கு இதற்கு மேல் பெரிய பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கிறுக்கித் தள்ளினார்களே - அது எந்த சட்டத்தின் கீழ்? மலையப்பன்மீது திருச்சி மாவட்ட மக்களிடத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. இலட்சம் பேர் கூடிய பொதுக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான இரு பார்ப்பனர்கள் எழுதிய தீர்ப்பினைக் கொளுத்தினார் தந்தை பெரியார் (4.11.1956). அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் ஒரு காங்கிரஸ் காரர்தான்; பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் - நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. பழனியாண்டி தான் அவர். இரு பார்ப்பன நீதிபதிகள் ஒரு தமிழரின் உத்தியோகத்துக்கே வேட்டு வைத்து எழுதினர். மாவட்ட ஆட்சித் தலைவருக்காக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) தன் கடமையைச் செய்யவில்லை; காரணம் அவரும் ஒரு பார்ப்பனர்; `துக்ளக் பார்ப்பனக் கூட்டத்தின் கோத்திரத்தைச் சேர்ந்த `மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவான இந்து ஏடும் கும்மாளம் போட்டு எழுதியது. அதனால் தான் நீதிபதிகளின் தீர்ப்பும், இந்து ஏடும் எரியூட்டப்பட்டது (அன்று `இந்து இன்று `துக்ளக் - அதே உணர்வு அட்சரம் பிறழாமல் எப்படி இழையோடுகிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது!) தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் திருவாளர் பி.வி. ராஜமன்னார், ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர்.தந்தை பெரியார் எதிர் வழக்காடவில்லை. நீதிமன்ற அனுமதியுடன் வரலாறு படைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (1957 ஏப்ரல் 23). அந்த அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக பல வரலாற்று உண்மைகளை, ஆரியர் திராவிட வரலாற்றின் போக்கினை எல்லாம் பகிரங்கமாகப் படித்தார் - பதிவு செய்தார் (`நீதி கெட்டது யாரால்? என்ற நூலாக பிறகு வெளியிடப்பட்டது) அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஒரு மணி நேரம். பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன அய்.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ்.ஏ. வெங்கட்ராமன், எஸ்.ஓய். கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதிய மாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா? இல்லை! காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! அதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண்டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன்சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் `சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன் இதுதான் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் படித்த அறிக்கை.









``


இப்போது வருகிறேன் புதியதலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சி குறித்து.

இன்று 19.12.2011, புதியதலைமுறை தொலைகாட்சியில், நேர்பட பேசு என்ற நிகழ்சியில், ஜெயலலிதா எடுத்த கட்சி சார்ந்த நடவடிக்கை குறித்து அதாவது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டதாக தரப்பட்டுள்ள அறிக்கை குறித்து, கருத்துருவாக்க முயலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்சியில், ஞானி மற்றும் எஸ்.வீ.சேகர் இருவரையும் பேட்டிகண்டனர்.

பேட்டிகண்டது எல்லாம் சரி....

யாரை பேட்டி கண்டார்கள்? யார் குறித்து?

ஒரு பார்ப்பனர் எடுத்த நடவடிக்கை குறித்து இரண்டு பார்ப்பனர்களிடம் கருத்து கேட்டு பேட்டியாம். இதில் இருந்தே இந்த தொலைகாட்சியின் நேர்மையுணர்வு நமக்கு தெரியவில்லையா?

நான் கேட்க்கவிரும்புவது எல்லாம்....மிகவும் திறமைசாலி எங்கள் மாமி என்று பீத்திக்கொள்ளும் பலருக்கு நான் கேட்கும் கேள்வி? இன்று சசிகலாவால்தான் அவரது குடும்பத்தினரால்தான் இவ்வளவும் என்று சில்லறைத்தனமான தப்பிக்கும் முயற்சியை நியாயமாக கருதுபவர்களை கேட்கும் கேள்வி?

இருபத்தியைந்து ஆண்டுகள் உடன்பிறவா சகோதரியாக இருந்த ஒருவர் தவறு செய்கிறார் (உண்மையாக இருக்கவேன்டிய கட்டாயம் இல்லை) என்பதை கண்டுபிடிக்க இவ்வளவு காலம் பிடித்த ஜெயலலிதா திறமையானவரா???!!! சிரிக்கத்தான் தோன்றுகிறது.

என்பத்தியெட்டு வயதாகும் கலைஞரை இன்றளவும் அவரது கட்சியினர் ஏமாற்ற முடியவில்லையே......

கலைஞர் திறமைசாலியா? அறிவாளியா? ஜெயலலிதா திறமைசாலியா? அறிவாளியா? (கேட்கும் எனக்கே இந்த கேள்வி அபத்தமாக தோன்றுகிறது).

ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அமைச்சரவை சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும், கலைஞரை குற்றம் சாட்டி பேசும் பார்பனர்களே, பார்ப்பனிய பத்திரிக்கைகளே, பார்ப்பனிய ஊடகங்களே..... இப்போது ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலாவை குற்றம் சாட்டுவதுதான் ஏன்? அதன் பெயர் மனுதர்மம் என்பது எங்களுக்குத் தெரியும்.


- திராவிடப்புரட்சி          

No comments:

Post a Comment