Tuesday 7 February 2012

திராவிட இயக்கத்தை குறைகூறி பிழைப்பு நடத்தும் வரலாற்று புரட்டர்களிடம் கவனமாக இருங்கள்

திராவிட இயக்கத்தை குறைகூறி பிழைப்பு நடத்தும் வரலாற்று புரட்டர்களிடம் கவனமாக இருங்கள் (01.07.11 அன்று முகநூலில் பதிந்தது)


‘எல்லாம் வல்ல இறைவனால் கூட இறந்தகாலத்தை அழித்துவிட முடியாது” என்று எழுதினான் புகழ்பெற்ற கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் அக்வினாஸ்.

நமது திராவிட இன மற்றும் அதன் இயக்க வரலாறை அதன் புகழை தொடர்ந்து அழிப்பதன் மூலம், அந்த கடவுளால் செய்ய முடியாத செயலை தொடர்ந்து திறமையாக செய்துவருகிறார்கள் இந்திய பார்பனர்கள்.

பொய்மைகளாலும், புரானங்களாலும் மூழ்கடிக்கப்பட்ட திராவிடரின் திராவிடதமிழரின் வரலாற்றை மீட்டு, விடுதலையை நோக்கி வீறுநடை போட வைத்தது திராவிட இயக்கம்.

ஆனால் அதன் கடந்த காலத்தை அழிப்பதன் மூலம் இங்கே பல வரலாற்று புரட்டர்கள் ஒரு சீரார்ந்த இயக்கத்தின் சீலங்களை மறைப்பதில் அன்றுபோல இன்றும் கவனமாயிருக்கிறார்கள்.

கடந்த காலத்தை அழிப்பதன் மூலம் விடுதலைக்குப்போராடும் “திராவிட அடிமைகள்”, தமது எதிரி யார்? தோழர் யார்? என்பதை அறியமுடியாமற் செய்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தன்னையே அறிந்துகொள்ள முடியாத விசித்திரபிறவியாகிவிட்டான் நம் திராவிட தமிழன்.

இதன் விளைவாக அந்த வரலாற்று புரட்டை, சதியை உணராமலேயே, தமிழ் தேசியம் என்ற பெயரில், சில தமிழ் உணர்வாளர்கள், தங்களின் உண்மையான பாதுகாப்பு அரனும் ஆயுதமுமாகிய திராவிட இயக்கத்தையும் அதன் சிறந்த தலைவரான தந்தை பெரியாரையும் குறை சொல்லுகின்றனர்.

திராவிட தமிழர்களே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் சமூக விடுதலைக்காக போராடும் எந்த தலைவனையும் நீங்கள் பார்த்ததில்லை என்ற உண்மையை வரலாறு பதிவு செய்துள்ளது. உங்களை ஏய்த்து பிழைத்த ஆரியரை உயர்த்திபார்த்த மன்னர்களைதான் கண்டுள்ளது நம் தமிழகம் உட்பட இருந்த திராவிட நிலம். ஆயிரக்கணக்கான ஆண்டு திராவிட தமிழர்களின் வரலாற்றில், நமக்கு உணர்ச்சியூட்டிய, நம்மை வழி நடத்திய, நமக்காக போராடிய, தன்னலமற்ற முதல் தலைவர் தந்தை பெரியாரே. அவரை இகழ்ந்து தமிழன் நன்றி கெட்டவன் என்ற அவப்பெயரை வரலாற்றில் பதிவு செய்துவிடாதீர்கள்.

- திராவிடப்புரட்சி               

No comments:

Post a Comment